ரகுல் பிரீத் சிங் வாங்கிய பிரமாண்ட கார்.. இதோட விலை எவ்ளோ தெரிஞ்சதும் எல்லாரும் ஷாக்காயிட்டாங்க!

இந்தியாவில் திரைப் பிரபலங்கள் மத்தியில் எம்ஜி (MG) நிறுவனத்தின் குறிப்பிட்ட ஓர் தயாரிப்பிற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எம்ஜி குளோஸ்டர் (MG Gloster) கார் மாடலுக்கே இந்திய பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாக இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பலர் இந்த கார் மாடலை பயன்படுத்தி வருகின்றனர். பாலிவுட் நடிகை சன்னி லியோன்கூட இந்த கார் மாடலையே பயன்படுத்தி வருகின்றார். இந்த நிலையிலேயே, எம்ஜி குளோஸ்டர் காரை மேலும் ஒரு நடிகை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் வாயிலாக இந்திய நடிகர்களின் பிரியமான கார் மாடலாக மாறியிருப்பதை மீண்டும் ஒரு முறை குளோஸ்டர் உறுதிப்படுத்தி இருக்கின்றது. இம்முறை ரகுல் பிரீத் சிங்-கே இந்த காரை வாங்கி இருக்கின்றார். இது அவரின் நான்காவது புதிய எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.

rakul preet singh

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் அவரிடத்தில் ஏற்கனவே விலை உயர்ந்த மற்றும் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த கார் மாடல்கள் பலவற்றை அவர் பயன்படுத்தி வருகின்றார். அந்தவகையில், அவரிடத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 350டி (Mercedes-Benz GLE 350d), மெர்சிடிஸ் மேபேக் எஸ்500 (Mercedes Maybach S500), மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ்600 (Mercedes Maybach GLS600) உள்ளிட்ட கார்களையே அவர் பயன்படுத்தி வருகின்றார்.

இதுதவிர, டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா (Toyota Innova Crysta) போன்ற காரையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். இந்த நிலையிலேயே இவற்றின் வரிசையில் எம்ஜி குளோஸ்டர் காரை ரகுல் இணைத்திருக்கின்றார். எம்ஜி நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றாக குளோஸ்டர் இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.

Mg gloster

பன்முக வேரியண்டுகளில் இந்த கார் மாடல் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மிக சமீபத்தில்கூட இந்த கார் மாடலில் ஸ்நோ-ஸ்டோர்ம் (Snowstorm) மற்றும் டெசர்ட்-ஸ்டோர்ம் (Desertstorm) எனும் சிறப்பு தேர்வுகளை எம்ஜி விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ரகுல் பிரீத் போன்ற முக்கிய நபர்களையும், எஸ்யூவி கார் காதலர்களையும் கவரும் பொருட்டே இந்த பதிப்புகளை அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்த காரை இரண்டு விதமான இருக்கைகள் ஆப்ஷன்களிலும் வாங்கிக் கொள்ள முடியும். 6 மற்றும் 7 சீட்டர்கள் தேர்வே அதுவாகும். இதேபோல், இந்த காரில் சிறப்பு மற்றும் சொகுசு அம்சங்களையும் மிக தாராளமாக எம்ஜி வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட், பிரீமியம் அனுபவத்தை வழங்கும் டேஷ்போர்டு - சாஃப்ட் டச் மெட்டீரியல்களுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, டூயல் பேன் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் பார்க்கிங் அசிஸ்ட், பன்முக டிரைவிங் மோட்கள், 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட இருக்கை ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் இருக்கைகள் ஹீட் மற்றும் வெண்டிலேட் ஆகிய வசதிகளையும் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

இதுதவிர, பிஎம் 2.5 ஏர் ஃபில்டர், ஆட்டோ டிம்மாகும் வசதிக் கொண்ட ஐஆர்விஎம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, 12 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், அடாஸ் அம்சம் ஆகியவையும் இந்த காரில் இடம் பெற்றிருக்கும். இத்தகைய பலதரப்பட்ட சிறப்பம்சங்களைத் தாங்கியிருக்கும் குளோஸ்டர் காரையே ரகுல் பிரீத் சிங் தற்போது வாங்கி இருக்கின்றார்.

இந்த காரில் இத்தனை அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்ற காரணத்தினாலேயே இந்திய தொழிலதிபர்களின் பிரியமான காராகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த கார் இந்தியாவில் இரண்டு விதமான எஞ்சின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 163 பிஎஸ் மற்றும் 375 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட 2.0 லிட்டர் சிங்கிள் டர்போ டீசல் ஆப்ஷன் ஒன்று இதில் வழங்கப்படுகின்றது.

இத்துடன், 218 பிஎஸ் மற்றும் 480 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் மோட்டார் என்கிற இரண்டு எஞ்சின் தேர்வுகளே குளோஸ்டரில் வழங்கப்படுகின்றன. எஞ்சின் மற்றும் இருக்கை தேர்வை போலவே 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படுகின்றது.

இதுபோன்று பல்வேறு சிறப்புகளை தாங்கி இருக்கும் இந்த காரின் அதிகபட்ச விலையே ரூ. 43.87 லட்சம் மட்டுமே ஆகும். அதேவேளையில், ரூ. 38.80 லட்சம் என்கிற விலையிலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கிறது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எம்ஜி குளோஸ்டர் காருக்கு பிரபலங்கள் மத்தியில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த சம்பவம் அமைந்திருக்கின்றது. எம்ஜி நிறுவனம் இதுபோன்று இன்னும் பல தரமான கார் மாடல்களை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கும் திட்டத்தில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 1, 2024, 13:09 [IST]
English summary
Rakul preet singh adds mg gloster to her luxury suv collection
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+