தேவதை மாதிரி இருக்காங்க... ஆட்டோவில் வந்து இறங்கியது இவ்ளோ பெரிய ஆளா... கிறங்கி போன ரசிகர்கள்!
இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் (Actress) ஒருவராக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங் (Rakul Preet Singh). தமிழ் (Tamil), தெலுங்கு (Telugu) மற்றும் ஹிந்தி (Hindi) உள்ளிட்ட மொழிகளில் ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். இவருக்கு இன்னும் ஒரு சில நாட்களில் திருமணம் (Wedding) நடைபெறவுள்ளது.
நடிகர் (Actor) ஜாக்கி பாக்னானியை (Jackky Bhagnani) அவர் திருமணம் செய்யவுள்ளார். இவர்களது திருமணம் வரும் பிப்ரவரி 21 அல்லது 22ம் தேதி, கோவாவில் (Goa) நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதற்கு முன்னதாக ரகுல் ப்ரீத் சிங்கின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில், ரகுல் ப்ரீத் சிங் ஆட்டோவில் வந்து இறங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வீடியோ மும்பை (Mumbai) நகரில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த இடம்? என்பது உறுதியாக தெரியவில்லை. பிரபலமான நடிகை ஒருவர் சாதாரணமான ஆட்டோவில் பயணம் செய்திருப்பதால், ரசிகர்கள் பலரும் இதை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
ஏனெனில் ரகுல் ப்ரீத் சிங்கிடம் நிறைய சொகுசு கார்கள் உள்ளன. இதில், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes Benz GLE), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ (Mercedes Benz GLA), லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Land Rover Range Rover Sport), ஆடி க்யூ3 (Audi Q3) மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இவ்வளவு விலை உயர்ந்த கார்கள் எல்லாம் இருக்கும்போது, ரகுல் ப்ரீத் சிங் ஏன் மிகவும் எளிமையான முறையில் ஆட்டோவில் பயணம் செய்தார்? என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் அவரது இந்த எளிமை உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். இதற்கு முன்பாக மற்றொரு பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) ஆட்டோவில் பயணம் செய்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டோ சவாரியை நடிகர் வருண் தவானுடன் (Varun Dhawan) இணைந்து அவர் மேற்கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வைரல் வீடியோவும் சமூக வலை தளங்களில் காட்டு தீ போல பரவியது. இந்த வரிசையில் தற்போது ரகுல் ப்ரீத் சிங்கின் வைரல் வீடியோ வேகமாக பரவி கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிரபல நடிகைகள் மிகவும் எளிமையான முறையில் ஆட்டோக்களில் பயணம் செய்வது பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். ஒரு சில நடிகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் போன்றவர்கள், போக்குவரத்து நெரிசல் பிரச்னைகளை சமாளிப்பதற்காக மெட்ரோ ரயில்களில் (Metro Trains) கூட பயணம் செய்துள்ளனர் என்பது இங்கே நினைவு கூறப்பட வேண்டிய ஒரு விஷயம் ஆகும்.
உண்மையில் பெரு நகரங்களில் மெட்ரோ ரயில்கள்தான், போக்குவரத்திற்கு மிகவும் எளிமையான ஒரு முறையாக உள்ளன. ஏனெனில் சாலை மார்க்கமாக வாகனங்களில் பயணம் செய்து சிரமமான காரியமாக இருக்கிறது. மக்கள் தொகை அதிகம் என்பதால், போக்குவரத்து நெரிசல் என்பது தற்போது தவிர்க்க முடியாத ஒரு பிரச்னையாக மாறி விட்டது.


Click it and Unblock the Notifications








