நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கணவர் இந்த அளவுக்கு பணக்காரரா!! கார்களை நிறுத்த தனியா இடம் பார்க்கனும்!

ரகுல் ப்ரீத் சிங் (Rakul Preet Singh), தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை, சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். 1990இல் புது டெல்லியில் ராஜேந்தர் சிங் மற்றும் குல்விந்தர் சிங்கிற்கு மகளாக ரகுல் ப்ரீத் சிங் பிறந்தார். ஆரம்பத்தில் இவர் நடித்த சில பல தமிழ் படங்கள் தோல்வியுற்றாலும், கோலிவுட்டை விட பெரிய மார்க்கெட்டான டோலிவுட்டில் வேகமாக முன்னணி நடிகையாக வளர ஆரம்பித்தார்.

அதன்பின், அதே வேகத்தில் ரகுல் ப்ரீத் சிங் மீண்டும் தமிழில் நடித்த படங்கள் ஹிட் ஆக ஆரம்பித்தன. இந்த நிலையில், பிப்ரவரி 21ஆம் தேதி கோவாவில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் தொழிலதிபர் ஜாக்கி பாக்னானியின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தங்களது திருமணத்தை இருவரும் ஒன்றாக இணைந்து இன்ஸ்டாகிராமில் படங்களுடன் தெரிவித்துள்ளனர்.

தொழிலதிபர் மட்டுமில்லாமல், ஜாக்கி பாக்னானி சில ஹிந்தி படங்களில் நடித்துள்ள நடிகரும் ஆவார். மேலும், திரைப்பட தயாரிப்பாளரும் கூட. இந்த தம்பதியினரின் குடும்பத்தில் ஏகப்பட்ட லக்சரி கார்கள் உள்ளன. ரகுல், ஜாக்கி இருவரும் தங்களது சொந்த பயன்பாட்டிற்காக மட்டும் 4 - 5 கார்களை பயன்படுத்துகின்றனர். அவை என்னென்ன என்பதை இனி பார்க்கலாம்.

luxury cars of new couple

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta): இந்தியாவில் பலர் விரும்பக்கூடிய எம்பிவி கார். கூட்டு குடும்பமாக 9 - 10 பேர் செல்லும் அளவிற்கு நன்கு பரந்து விரிந்த எம்பிவி கார். சில்வர் நிறத்தில் இத்தகைய இன்னோவா கார் ஒன்றை நடிகை ரகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது பயன்படுத்துவதை கடந்த காலங்களில் பார்க்க முடிந்தது.

luxury cars of new couple

எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster): ரகுல் ப்ரீத் சிங்கிற்கு இன்னோவா க்ரிஸ்டா எப்படியோ அதேபோன்று, ஜாக்கி பாக்னானி எம்ஜி க்ளோஸ்டர் காரில்தான் நிறைய முறை வெளி இடங்களில் காட்சி தந்துள்ளார். குறிப்பாக, வெளிநாடுகளுக்கு செல்லும்போது மும்பை விமான நிலையத்திற்கு இந்த எம்ஜி காரை தான் எடுத்துவருவார். எம்ஜி ஆனது பிரிட்டிஷ் கார் பிராண்டாக இருந்தாலும், அதனை ஆட்டிப் படைப்பது சீனாவின் பிரம்மாண்ட SAIC குழுமம் ஆகும்.

luxury cars of new couple

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.இ 350டி (Mercedes-Benz GLE 350d): நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடம் பழைய ஜென்ரேஷன் ஜி.எல்.இ 350டி கார் உள்ளது. இந்த காரை வேறு சில பாலிவுட் ஸ்டார்களிடமும் காண முடியும். பல வருடங்களுக்கு முன்பே தரமான தொழிற்நுட்ப வசதிகளை கொண்டிருந்த கார் இதுவாகும். அதுமட்டுமின்றி, நிறைய என்ஜின் ஆப்ஷன்ஸும் மெர்சிடிஸின் இந்த லக்சரி எஸ்யூவி காரில் வழங்கப்படுகிறது.

luxury cars of new couple

மெர்சிடிஸ்-மேபக் எஸ்500 (Mercedes-Maybach S500): நடிகை ரகுல் மற்றும் அவரது கணவர் ஜாக்கி இருவரிடமும் உள்ள விலையுயர்ந்த மெர்சிடிஸ் கார் இது. பொதுவாகவே, மேபக் கார்கள் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களை காட்டிலும் விலையுயர்ந்தவை ஆகும். அதாவது, அந்த அளவிற்கு நிறைய விஷயங்கள் மிகவும் சொகுசான பயணத்துடன் மெர்சிடிஸ்-மேபக் கார்களில் கிடைக்கும். இதில், மேபக் எஸ்500 காரும் எந்த விதத்திலும் சளைத்தது இல்லை.

luxury cars of new couple

மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்600 (Mercedes-Maybach GLS600): மேலே கண்ட மெர்சிடிஸ்-மேபக் கார் சில வருடங்களுக்கு முன்பு வரையில் பாலிவுட்டை ஆதிக்கம் செலுத்திவந்தது. ஆனால், சமீப ஆண்டுகளாக சினிமா துறையினர் அதிக எண்ணிக்கையில் வாங்கும் காராக ஜி.எல்.எஸ்600 விளங்குகிறது. திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு இந்த காரில் இவர்கள் இருவரும் ஜோடியாக வந்து இறங்கினர்.

luxury cars of new couple

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பினும், நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஓர் பக்கா பாலிவுட் மாடல். அதாவது, காரை தேர்வு செய்வதில் இருந்து கணவரை தேர்வு செய்யும் வரையில் பாலிவுட் சினிமாக்காரர்களின் இரசனை ரகுல் ப்ரீத் சிங்கிடம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 22, 2024, 8:00 [IST]
English summary
Rakul preet singh weds jackky bhagnani luxury cars of new couple
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X