சொகுசு கப்பல் மாதிரி சாலையில் மிதந்து வந்த கார்.. சிரஞ்சீவி குடும்பத்திடம் இப்படி ஒரு காரா!..

உலகின் மிக மிக விலையுயர்ந்த கார் மாடல்களில் ஒன்றாக ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே (Rolls Royce Spectre) இருக்கின்றது. இந்த கார் மாடலையே சிரஞ்சீவி குடும்பத்தினர் தற்போது வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் ராம் சரண் அந்த காரில் குடும்பத்துடன் வரும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அதிகாரப்பூர்வமாக இந்த சொகுசு கப்பல் மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இதற்கு முன்னரே இந்த காரை இந்திய பணக்காரர்கள் சிலர் வாங்கி இந்தியாவிற்கு கொண்டு வந்துவிட்டனர்.

பாஷ்யம் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த பாஷ்யம் யுவராஜ் இந்த காரை வாங்கினர். இவர்களே இந்த காரை இந்தியாவில் முதல் நபர்கள் ஆவார்கள். இவர்களுக்கு அடுத்தபடியே இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி குடும்பத்தினர் வாங்கினர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர்களைத் தொடர்ந்தே தற்போது சிரஞ்சீவி குடும்பத்தினர் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே காரை வாங்கி இருக்கின்றனர்.

Rolls royce spectre

இது அல்லு கொனிடேலா குடும்பத்தினர் இரண்டாவது ரோல்ஸ் ராய்ஸ் கார் மாடல் ஆகும். இந்தியாவில் இந்த கார் ரூ. 7.5 கோடி என்கிற மிக மிக அதிக விலையிலேயே விற்கப்படுகின்றது. விமான நிலையத்திற்கு இந்த காரில் வந்ததன் வாயிலாகவே ராம் சரண் இந்த காரை வாங்கி இருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது.

ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே ஓர் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த காரில் ஒரு முழு சார்ஜில் 530 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த அதீத ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 102 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது.

எலெக்ட்ரிக் மோட்டார்களைப் பொருத்த வரை இந்த காரில் முன் மற்றும் பின் ஆக்சில்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இது அதிகபட்சமாக 575 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும்.

இதுமட்டுமில்லைங்க, வெறும் 4.5 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை இந்த கார் மாடல் எட்டிவிடும். இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட காரையே தற்போது ராம் சரண் வாங்கி இருக்கின்றார். இந்த காரில் சொகுசான ரைடு அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக பலதரப்பட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Ram charan buys rolls royce spectre

அந்தவகையில், ஆக்டீவ் சஸ்பென்ஷன் மற்றும் 4 வீல்களுக்குமான ஸ்டியரிங் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மாதிரியான அம்சங்களை இந்த காரில் பயணிக்கும்போது கப்பலில் மிதப்பதைப் போன்ற அனுபவத்தை அதன் பயணிகளுக்கு வழங்கும். இந்த எலெக்ட்ரிக் காரை அலுமினியம் ஆர்கிடெக்சர் மற்றும் புதிய ஸ்பிரிட் சாஃப்ட்வேர் ஆர்கிடெக்சர் ஆகிய தளங்களைக் பயன்படுத்தியே ரோல்ஸ் ராய்ஸ் உருவாக்கி இருக்கின்றது.

இதுவே ஸ்பெக்ட்ரேவை கூடுதல் சொகுசானதாகவும் கவர்ச்சியானதாகவும் தயாராக்கி இருக்கின்றது. மேலும், மற்ற ரோல்ஸ் ராய்ஸ் கார் மாடல்களில் இருந்து வேறுபடும் விதமாக சில தனித்துவமான அம்சங்களையும் ரோல்ஸ் ராய்ஸ் வழங்கி இருக்கின்றது. உதாரணமாக, காரில் பயணிகள் பக்கம் ஸ்பெக்ட்ரே என ஒளிரும் இலுமினேட்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதை கார் இயக்கமற்ற நிலையில் பார்க்க முடியாது. இயக்க நிலையில் இருக்கும்போது மட்டுமே அதைக் காண மிடியும். மேலும், காரின் உட்பக்கத்தை கூடுதல் பிரீமியமானதாக மாற்றும் விதமாக ஸ்டார்லைட் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த வசதிக்காக மென்மையாக ஒளிரக் கூடிய 4,796 நட்சத்திர லைட்டுகள் காரின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ளன.

இதுபோன்று இன்னும் பல ஆடம்பர மற்றும் பிரீமியம் அம்சங்களை இந்த காரில் மிக தாராள மனதுடன் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது. இதனால்தான் இதன் விலை ரூ. 7 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இந்த கார் மாடலையே தற்போது ராம் சரண் வாங்கி இருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராம் சரண் இடத்தில் இதுபோன்று இன்னும் பல சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன, இந்த நிலையிலேயே அவற்றின் வரிசையில் தற்போது ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரோ இணைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த காருக்கு அம்பானி குடும்பத்தினர் போன்ற பெரும் பணக்காரர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, July 12, 2024, 10:19 [IST]
English summary
Ram charan and family welcome rolls royce spectre ev
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+