ராம்சரண் தேஜாவுக்கு ரூ.2 கோடி காரை பரிசாக கொடுத்த பெண் வீட்டார்!
தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜாவுக்கு ரூ.2 கோடியில் அஸ்டன் மார்ட்டின் காரை கல்யாண பரிசாக கொடுத்துள்ளனர் மணமகள் வீட்டார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம்சரண் தேஜாவுக்கும் அப்போலோ மருத்துமனை நிறுவனர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தி உபாஸானாவுக்கும் இன்று திருமணம் நடக்கிறது.
மணமகன் ராம்சரண் தேஜாவுக்கு ஏராளமான பரிசுகளை மணமகள் வீட்டார் வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஜேம்ஸ்பாண்டு சினிமா புகழ் அஸ்டன் மார்ட்டின் வி8 வான்டேஜ் காரை மணமகன் ராம்சரணுக்கு பெண் வீட்டார் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கார் ரூ.2 கோடியில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரில் 4.8 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சம் 420 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும் மணி்ககு அதிகபட்சம் 290 கிமீ வேகத்தில் பறக்கும்.
டோலிவுட் சினிமா உலகில் ராம்சரணுக்கு இந்த கார் வழங்கப்படுவது தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. கார்கள் மீது எனக்கு தீராத காதல் உண்டு என்று அடிக்கடி ராம்சரண் கூறிவந்த நிலையில், இந்த கார் அவருக்கு சரியான கல்யாண பரிசாகவே இருக்கும் என்கின்றனர் டோலிவுட் சினிமா வட்டாரங்கள்.


Click it and Unblock the Notifications









