சொந்த பெயரில் இவ்ளோ விலையுயர்ந்த கார வாங்கிட்டாரா! உள்ள நுழஞ்சதும் ஒட்டுமொத்த ஆர்டிஓ-வும் உறஞ்சிருச்சு!

தெலுங்கு திரை உலகின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ராம் சரண்-ம் ஒருவர் ஆவார். இவரே தன்னுடைய 7.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை பதிவு செய்ய ஆர்டிஓ (RTO)-விற்கே நேரடியாக விசிட் கொடுத்திருக்கின்றார். 7.5 கோடி கொடுத்து அவர் வாங்கி ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே (Rolls-Royce Spectre) காரையே வாங்கி இருக்கின்றார். இது ஓர் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்தியாவில் இந்த காரை முதன் முதலில் வாங்கியது நம்முடைய சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர்தான் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.

பாஷ்யம் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் பாஷ்யம் யுவராஜ், இவரே இந்தியாவிலேயே முதல் ஆளாக ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே காரை வாங்கினார். இவர்களிடத்தில் ஒன்றல்ல இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே கார் மாடல்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. சமீபத்திலேயே பாஷ்யம் யுவராஜ் இரண்டாவது யூனிட்டு ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரேவையும் வாங்கியிருக்கின்றார்.

Ram charan at rto with rolls royce spetcre

எனவே இந்தியாவில் ஸ்பெக்ட்ரே எலெக்ட்ரிக் காரை முதல் நபராகவும், அதேவேளையில், இந்தியாவில் இரண்டு யூனிட்டுகள் ஸ்பெக்ட்ரேவை வைத்திருக்கும் நபராகவும் பாஷ்யம் யுவராஜ் மாறி இருக்கின்றார். இந்த நிலையிலேயே இந்த விலை உயர்ந்த சொகுசு காரை தெலுங்கு திரை உலகின் உச்ச நட்சத்திர நடிகரான ராம் சரண் தன்னுடைய சொந்த பெயரில் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவர் இந்த காரை பதிவு செய்ய ஆர்டிஓ-விற்கு விசிட் கொடுத்த வீடியோவே தற்போது வைரலாகிக் கொண்டிருக்கின்றது. வீடியோவில் ஆர்டிஓ அதிகாரிகள் அனைவரும் அவருடன் செல்ஃபி எடுக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. ஹைதராபாத்-இல் உள்ள கைரதாபாத் ஆர்டிஓ-வில் வைத்தே அவர் இந்த காரை பதிவு செய்திருக்கின்றார். ஏற்கனவே மிகப் பெரிய சொகுசு கார்கள் கலெக்சன் உரிமையாளரே இந்த தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் சரண் ஆவார்.

Ram charan at rto with 7 cr rs rolls royce spetcre

இந்த நிலையிலேயே தற்போது அவர் ரோல்ஸ் ராய்ஸ்-இன் 7.5 கோடி ரூபா மதிப்புள்ள சொகுசு காரை வாங்கி இருக்கின்றார். இது ஓர் முழு சார்ஜில் 530 கிமீ வரை பயணிக்கும். இந்த அதிகபட்ச ரேஞ்ச் திறனுக்காக ஸ்பெக்ட்ரே எலெக்ட்ரிக் காரில் 102 kWh திறன் கொண்ட மிகப் பெரிய பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன் அதிக பவர்ஃபுல் எலெக்ட்ரிக் மோட்டாரே இந்த காரில் பொருத்தப்பட்டு உள்ளது. வெறும் 4.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் எலெக்ட்ரிக் மோட்டாரே ஸ்பெக்ட்ரேவில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும்.

இதேபோல் நவீன கால ஆடம்பர அம்சங்களையும் மிக மிக அதிகளவில் இந்த கார் மாடல் அதனுள் தாங்கியிருக்கும். குறிப்பாக, காரின் உள்பக்க மேற்கூரையில் வான்வெளியை பிரதிபலிக்கும் வகையில் நட்சத்திர வடிவ குட்டி லைட்டுகள் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுதவிர, லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், அமைதியான சூழலை வழங்கும் உள்பக்கம் என பெரும் செல்வந்தர்கள் விரும்பக் கூடிய பலதரப்பட்ட ஆடம்பர வசதிகளையும் இந்த கார் தாங்கியிருக்கும்.

இதனால்தான் ராம் சரண் போன்ற கோடியில் புரளும் பெரும் வசதிப் படைத்தவர்களின் பிரியமான கார் மாடலாக ஸ்பெக்ட்ரே மாறி இருக்கின்றது. இந்தியாவில் இந்த காரை இன்னும் சில பிரபலங்களும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது. ராம் சரண் மிகப் பெரிய ஆடம்பர கார் விரும்பியாக இருக்கின்றார்.

அவர் இடத்தில் ஏற்கனவே கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள் பல உள்ளன. அந்தவகையில், மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 கார் (Mercedes Maybach GLS 600) மாடலும் அவரிடத்தில் உள்ளது. இதன் ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 4 கோடி ஆகும்.

இதுதவிர, ரூ. 3.50 கோடி மதிப்புள்ள ஃபெர்ராரி போர்டோஃபினோ (Ferrari Portofino), ரூ. 3.2 கோடி மதிப்புள்ள ஆஸ்டன் மர்டின் வின்டேஜ் வி8 (Aston Martin Vantage V8) மற்றும் ரூ. 2.75 கோடி மதிப்புள்ள லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி (Range Rover Autobiography) உள்ளிட்ட கார் மாடல்களையே அவர் பயன்படுத்தி வருகின்றார்.

இதுதவிர, அவரிடத்தில் ரூ. 1.75 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series) மற்றும் ரூ. 1 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 450 ஏஎம்ஜி கூபே (Mercedes Benz GLE 450 AMG Coupe) வகை சொகுசு கார்களும் பயன்பாட்டில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த மிகப் பெரிய கார் கலெக்சனைக் கொண்டிருக்கும் ஓர் நபரே ராம் சரண் ஆவார். இதுபோன்று இன்னும் பல சொகுசு வாகனங்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையிலேயே ரூ. 7.5 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரையும் அவர் தன்னுடைய சொகுசு கார் சேகரிப்பில் இணைத்திருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 24, 2024, 5:00 [IST]
English summary
Ram charan visited khairatabad rto to register his rs 7 5 cr rolls royce spectre e car
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X