ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...?

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை இந்திய ராணுவம் ரசியமாக பயன்படுத்துவதாகவும், பிரதமர் மோடியும், மனோகர் பாரீக்கபரும் ராமர் பிள்ளையை அழைத்து அதை பெற்றுக்கொண்டதாகவும், இந்திய ராணுவமே மூலிகை பெட்ரோலுக்கு சான்று வழங்கியதாகவும் ராமர் பிள்ளை முன்னர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த செய்தியில் ராமர் பிள்ளை யார்? மூலிகை பெட்ரோல் என்றால் என்ன? அது நடைமுறையில் சாத்தியமா? என்பதை முழுமையாக பார்க்கலாம் வாருங்கள்.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

1996ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடெங்கும் பரபரப்பாக ஒரு செய்தி பரவியது. பொதுமக்கள், பத்திரிக்கைகள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகளின் கவனம் முழுவதும் தமிழ்நாட்டை சேர்ந்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தின் பக்கம் திரும்பியது. அங்குதான் நடக்கவிருந்தது ஒரு அதிசயம். டீக்கடை முதல் கார்ப்பரேட் அலுவலகங்கள் வரை எங்கு பார்த்தாலும் அந்த பேச்சுதான் நிலவியது.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

இந்த செய்தியால் பொதுமக்கள் மட்டும் பரபரப்படையவில்லை. பல கார்ப்பரேட் நிறுவனங்களும் பரபரப்படைந்தன. அவர்கள் பெரும் முதல் போட்டு துவங்கிய தொழிலை சுக்குநூறாக அடித்து நொறுக்கும் வகையில் அமைந்திருந்தது அந்த செய்தி. பத்திரிக்கைகள், ஆங்கில டிவிகள் என எல்லோரும் ராஜபாளையத்தை நோக்கி படையெடுக்க துவங்கினர்.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

ராஜபாளையத்ததை அடுத்த இடையன்குளம் என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர்தான் ராமர் பிள்ளை. இவர் அறிவித்த மூலிகை பெட்ரோல் குறித்த செய்திதான் அது. அதாவது மூலிகைகளை கொண்டு சாதாரண தண்ணீரை எரிபொருளாக மாற்ற முடியும் என இவர் கூறிய விஷயம்தான் இத்தனை பரபரப்பிற்கும் காரணம்.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

ஆம் இன்று பல ஆயிரம் கோடியில் விற்பனையாகும் பெட்ரோலை உங்கள் வீட்டின் பின் வாசலில் வைத்து நீங்களே தயாரிக்கலாம் என்றால் பரபரப்பு ஏற்படாதா என்ன? இன்று இந்திய அரசிற்கு பெரும் சவாலாக இருக்கும் விஷயத்தை ஒன்றுமே இல்லாமல் ஆக்கும் விஷயம்தானே அது.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

10 கிராம் மூலிகையை தண்ணீரில் கொதிக்க வைப்பதன் மூலம் மூலிகை பெட்ரோலை தயாரிக்க முடியும் என ராமர் பிள்ளை கூறினார். அப்பொழுதே அவர் தமிழ்தேவி என்ற பெயரில் அந்த மூலிகைகளை விற்பனை செய்ய துவங்கினார்.

MOST READ: பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ..

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

ராமர் பிள்ளை தெரிவித்த முறையின் மூலம் சில மூலிகைகளை கொதிக்கும் தண்ணீரில் கலப்பதன் மூலம் தண்ணீரை விட எரிபொருள் லேசாகிறது என்றும், இதனால் தண்ணீர் கீழே சென்று எரிபொருள் மேலே வருவதாகவும் அதை பில்டர் செய்வதன் மூலம் எரிபொருளை தனியாக பிரித்தெடுக்க முடியும் எனவும் கூறப்பட்டது.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

இந்த எரிபொருள் எப்படி உருவாகிறது என்றால் தண்ணீரில் அந்த மூலிகை கலந்தவுடன் அது காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடு மூலக்கூறுகளை உறிஞ்சி அதை ஹைட்ரோ கார்பன் மூலக்கூறுகளாக மாற்றுகிறது. பின்னர் இது எரிபொருளாக உருவாவதாக தெரிவிக்கப்பட்டது.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

இதையெயல்லாம் கேள்விப்பட்ட அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி இவரை சென்னைக்கு அழைத்து அங்கு வைத்து அவர் முன்னிலையில் இந்த மூலிகை பெட்ரோலை தயாரித்து காட்டும்படி கோரியுள்ளார். அப்பொழுது அதை செய்து காட்டியுள்ளார். மூலிகை பெட்ரோலும் தயாராகியுள்ளது.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

உடனடியாக கருணாநிதி மத்திய அரசிற்கு ராமர் பிள்ளையின் கண்டுபிடிப்பு மிகவும் உன்னதமானது. அதை தயாரிக்க அவருக்கு காப்புரிமையை பெற்று தர மத்திய அரசு உதவ வேண்டும். என்றும் மேலும் ராமர் பிள்ளை தொடர்ந்து இந்த மூலிகை பெட்ரோலை தயார் செய்ய இடம் தருவதாகவும், அதில் தினமும் குறைந்தது 50 லிட்டர் பெட்ரோலையாவது ராமர் பிள்ளை தயார் செய்ய வேண்டும் என கோரினார்.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

இதற்கிடையில் ராமர் பிள்ளையும் பலருக்கு மூலிகை பெட்ரோலை தயாரித்து விற்பனை செய்யும் வேலையையும் செய்து கொண்டே இருக்கிறார். அவர் வழங்கிய மூலிகை பெட்ரோலும் வாகனங்களில் சிறப்பாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

MOST READ: உலகின் விலை உயர்ந்த கார்கள், சொந்த விமானங்கள், கப்பல்கள் வைத்திருக்கும் கோடீஸ்வரரை பற்றி தெரியுமா?

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

அப்பொழுது ராமர்பிள்ளையை சென்னை ஐஐடியை சேர்ந்த சில பேராசியர்கள் தொடர்பு கொண்டு தங்கள் முன் இந்த மூலிகை பெட்ரோலை செய்து காண்பிக்கும் படி கோரினர். அவரும் அவர்கள் முன்னிலையில் தண்ணீரை கொதிக்க வைத்து அவர் வைத்திருந்த மூலிகைகளை சேர்த்து ஒரு குச்சியை கொண்டு கலக்க துவங்கினார்.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

அப்பொழுது குறுக்கிட்ட ஐஐடி பேராசிரியர்கள் அவர் வைத்திருந்த குச்சியை வாங்கி விட்டு அவர்கள் வைத்திருந்த கண்ணாடி குச்சியை கொண்டு அதை கொண்டு அந்த மூலிகை பெட்ரோலை தயார் செய்ய சொன்னார்கள். அப்பொழுது மூலிகை பெட்ரோல் தயாராகவில்லை.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

அதன் பின் அவர் வைத்திருந்த அதே குச்சியை வழங்கினர். அதை வைத்து அவர் செய்த போது மூலிகை பெட்ரோல் உருவானது என தகவல்கள் பரவியது.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

இது குறித்து ராமர் பிள்ளை சமீபத்தில் கூறும் போது ஐஐடி பேராசியர்கள் நீங்கள் தயாரித்தது மூலிகை பெட்ரோல் இல்லை. இது எரிபொருள்தான் இதை கொண்டு வாகனங்களை இயக்க முடியும். ஆனால் பெட்ரோலுக்கான அனைத்து பயன்பாட்டையும் பூர்த்தி செய்ய முடியாது என்று கூறியதாக தெரிவித்தார்.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

ஆனால் ஆய்வில் ஈடுபட்ட ஐஐடி பேராசிரியர்கள் அவர் வைத்திருந்த குச்சியில் டொலுவின், நாப்தா போன்ற பெட்ரோலிய பொருட்களை வைத்திருக்கலாம். அதனை மெழுகு கொண்டு அடைத்திருக்கலாம் எனவும், அவர் கொதிக்கும் நீரில் அதை கொண்டு கலக்கும் போது அந்த மெழுகு உருகி டொலுவின், நாப்தா போன்ற பொருட்கள் அந்த தண்ணீருடன் கலப்பதால் அது எரிபொருளாக மாற வாயப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

MOST READ: பார்ச்சூனருக்கு போட்டியாக புதிய எஸ்யூவி காரை களமிறக்குகிறது மஹிந்திரா.. மிரண்டு கிடக்கும் டொயோட்டா

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

இதற்கிடையில் ஐஐடி பேராசியர்கள் ஆய்வுக்கு பின் சிபிஐ ராமர் பிள்ளையின் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதில் ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்து விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

இந்த வழக்கு சுமார் 20 ஆண்டுகள் நடந்தது. பின் ராமர் பிள்ளை உட்பட 5 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அறிவித்து கோர்ட் உத்தரவிட்டது. மேலும் ராமர் பிள்ளை ஒரு மோசடிக்காரர் என்ற தகவலும் பொதுமக்கள் மத்தியில் அதிகமாக பரவியது.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

இதற்கிடையில் மீண்டும் மீடியாவில் ஒரு புயலை கிளப்பினார் ராமர் பிள்ளை. தான் செய்தது சரியான எரிபொருள்தான். அதை நான் மூலிகை பெட்ரோல் என்று அறிவித்ததுதான் தவறு என்றும், அது எரிபொருள் என்றும், தான் அதை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாகவும் அறிவித்தார்.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

மேலும் கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடியும், அப்போதைய ராணுவ அமைச்சர் மனோகர் பாரீக்கரும் தனது மூலிகை பெட்ரோல் ஆய்வை பார்த்ததாகவும், ராணுவத்தில் தனது மூலிகை பெட்ரோல்கள் பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கு ராணுவத்தினர் சான்று வழங்கியதாகவும் அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

மேலும் அதே பேட்டியில் கடந்த 1996க்கு பின்பு ஒரு பெரிய அரசியல்வாதி தன்னை தொடர்பு கொண்டு 75 ஆயிரம் லிட்டர் மூலிகை பெட்ரோலை வாங்கி கொண்டு அதற்கான பணம் தராமல் ஏமாற்றிவிட்டதாகவும் அது குறித்து கேட்கும் போது எங்களுக்கு இலவசமாக தாருங்கள் மற்றவர்களுக்கு காசு வாங்கி கொள்ளுங்கள் என்ற பொருளில் அவர் பேசியதாகவும் கூறினார். அது அது எந்த அரசியல்வாதி என்று அவரால் கூற முடியவில்லை.

MOST READ: அன்பார்ந்த கார், பைக் ரசிகர்களே..! உங்களுக்கு ஒரு நற்செய்தி..!

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

மேலும் தான் ஒரு படிக்காதவன் என்பதாலும், தனது ஜாதியை குறித்தும், மேலும் கார்ப்பரேட்களின் சதியும்தான் இந்த மூலிகை பெட்ரோலை வெளி வரவிடாமல் தடுப்பதாகக சொல்லி வருகிறார்.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

இதற்கிடையில் இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து பெட்ரோல் தயாரிக்கவுள்ளதாகவும், கடந்த ஆக்ஸ்ட் மாதம் 15ம் தேதியே அதை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாகவும் அறிவித்தார். ஆனால் அன்றைய தினம் அவரை போலீசார் கைது செய்தனர்.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

லைசென்ஸ் இல்லாமலேயே பெரிய அளவில் விளம்பரம் செய்து, அரசு அனுமதியில்லாத ஒரு பொருளை விற்பனை செய்ய முயன்றதற்காகதான் அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

தற்போது ராமர் பிள்ளையின் நிலை என்ன? அவர் மூலிகை பெட்ரோலை கொண்டு வருவாரா மாட்டாரா? என்ற தகவல் குறித்து எதுவும் தெரியவில்லை. ராமர் பிள்ளை படிக்காவிட்டாலும் விஞ்ஞானிகளை மிஞ்சிய அறிவு இவரிடம் இருக்கிறது. இந்த கார்ப்பரேட் சமூகம்தான் அவரின் வளர்ச்சியை தடுப்பதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

சிலர் அவர் ஒரு ஏமாற்று பேர் வழி என்றும் அவர் வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே இவ்வாறு பேசி வருகிறார் என்றும், அவர் பேசியதை ஒரு போதும் செயலில் காண்பிப்பது இல்லை என்றும் புகார் கூறி வருகின்றனர்.

MOST READ: மோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்.. இந்தியா மீது போர் தொடுக்கிறது அமெரிக்கா?

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

உண்மையில் மூலிகைகள் மூலம் எரிபொருளை தயாரிக்க முடியுமா? என்று யாராலும் இதுவரை உறுதிபடுத்த முடியவில்லை. ராமர் பிள்ளை தனது நண்பர்கள் சிலர் ஆயில் ரிபைனரியில் பணியாற்றிய அனுபவத்தை கொண்டு என்னென்ன வேதி பொருட்கள் கலக்கப்படுகிறது என்பதை தெரிந்து இதை இதில் ரகசிய இடுபொருட்கள் என்ற பெயரில் கலப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

சிலர் ராமர் பிள்ளையிடம் பெட்ரோலை வாங்கி வாகனங்களை இயக்கியது யார்? யார்? அவர்களின் அனுபவங்கள் என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ராமர் பிள்ளையிடம் இருந்து பெட்ரோலை வாங்கியவர்களின் வாகனங்களின் நிலை குறித்தும் அறியமுடியவில்லை என தெரிவித்துள்ளார்.

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

இந்த பிரச்னைக்களுக்கு எல்லாம் ஒரே தீர்வு அந்த மூலிகை எரிபொருளை எப்படி தயாரிப்பது என்பதை அவர் சமூக ஊடகம் வழியாக வெளியே கொண்டு வருவதுதான். அவ்வாறாக கொண்டு வரும் பட்சத்தில் அதை பலர் பரிசோதித்து பார்ப்பார்கள். பல உலக விஞ்ஞானிகளின் கவனத்திற்கு இது செல்லும்

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

இது உண்மையிலேயே எரிபொருள்தான் என்றும், இதை வாகனங்களில் எந்த பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்தலாம் என்றால் நேரடியாக இந்த மூலிகை எரிபொருளின் மூலம் மக்கள் பயன்பெறுவார்கள்.

MOST READ: உலகின் முதல் நீண்ட தூர ஏர் ஆம்புலன்ஸ்.. 'தெறிக்க விட்ட' தல அஜீத்தின் டீம் தக்ஷா..

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...? ரூ 5க்கு பெட்ரோல் சாத்தியமா?

மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் பிற்காலத்தில் அது நடைமுறை சாத்தியம் என்பது நிரூபிக்கப்பட்டாலும் அதற்கான காப்புரிமையை ராமர் பிள்ளையே பெற முடியும். அவர் 1996ம் ஆண்டு முதலே இதை செய்யும் விஷயம் பிரபலமானது என்பதால் இது சாத்தியமே..

Image Source: Puthiyathalaimurai TV, Thanthi TV

Most Read Articles

Tamil
மேலும்... #ஆஃப் பீட்
English summary
ramar-pillais-herbal-petrol-really-workout-or-just-publicity
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more