விபத்தில் உருக்குலைந்த இன்னோவா! உள்ளே இருந்தவரை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மக்கள்! அவருக்கா இப்படி ஆகணும்

இந்திய சாலைகளில் எப்போது என்ன நடக்கும்? என்றே சொல்ல முடியாது. திடீர் திடீரென மற்ற வாகனங்களோ, கால்நடைகளோ அல்லது மனிதர்களோ உங்கள் வாகனத்தின் குறுக்கே வரலாம். இப்படியான ஒரு சூழல் ஏற்பட்டால், 'சடன் பிரேக்' பிடிக்க வேண்டியதிருக்கும். இது பயங்கரமான சாலை விபத்துக்களுக்கு (Road Accidents) வழிவகுக்கும்.

இதை தவிர்க்க வேண்டுமென்றால் மிதமான வேகத்தில் வாகனங்களை ஓட்ட வேண்டும். அப்போதுதான் அவசர சூழல்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான கால அவகாசம் இருக்கும். ஆனால் இதை செய்ய தவறிய மத்திய அமைச்சர் (Union Minister) ஒருவரின் கார் தற்போது சாலை விபத்தில் சிக்கியுள்ளது.

Ramdas Athawale

இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்தில் சிக்கியது, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே (Ramdas Athawale) ஆவார். மஹாராஷ்டிரா (Maharashtra) மாநிலம் சதாரா (Satara) மாவட்டத்தில் உள்ள வாய் (Wai) பகுதியில் இருந்து, மும்பை (Mumbai) நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது அவர் விபத்தில் சிக்கியுள்ளார்.

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பயணம் செய்தது, இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) கார் ஆகும். எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த இந்த கார், அரசியல்வாதிகள் (Politicians) பலருக்கும் விருப்பமான ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டில் (Tamil Nadu) கூட பல்வேறு அரசியல்வாதிகள் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Ramdas Athawale Car Accident

சம்பவத்தன்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பயணம் செய்த டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் அதிவேகத்தில் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் (Container Truck) டிரைவர் 'சடன் பிரேக்' பிடித்தார். இதனால் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை நிறுத்துவதற்கு போதிய நேரமில்லை.

இதன் காரணமாக கன்டெய்னர் லாரியின் பின் பகுதியில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் முன் பகுதி பயங்கரமாக சேதமடைந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மற்றும் டிரைவர் உள்பட காருக்கு உள்ளே இருந்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பிவிட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 லோக்சபா தேர்தல் (2024 Lok Sabha Election) வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில், இந்தியா முழுக்க நன்கு பரிட்சயமான அரசியல்வாதிகளாக உள்ள பலரும் அடுத்தடுத்து விபத்துக்களில் சிக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கினார்.

ஆனால் மம்தா பானர்ஜி காயமடைந்தது சாலை விபத்தில் அல்ல என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. வீட்டில் தவறி விழுந்த காரணத்தினாலேயே மம்தா பானர்ஜிக்கு காயம் ஏற்பட்டதாக அவர் தலைமை வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் (Trinamool Congress) கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த 2 விபத்து சம்பவங்கள் தொடர்பாகவும், காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: முன்னால் செல்லும் வாகனங்கள் திடீரென பிரேக் பிடித்தால், நாம் செல்லும் வாகனத்தை உடனடியாக நிறுத்த கூடிய வேகத்தில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்பதையே மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் சாலை விபத்து நம் அனைவருக்கும் உணர்த்துகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, March 22, 2024, 17:45 [IST]
English summary
Ramdas athawale car accident all you need to know
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+