2 பிரபலங்கள் கல்யாணம் பண்ணிக்கிட்டா எவ்ளோ விலை உயர்ந்த காரா இருந்தாலும் அசால்டா வாங்கிட முடியும் போலையே!
இரண்டு முன்னணி ஜோடி நடிகர்கள் ஓர் காரில் வேக வேகமாக ஏறி பயணிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. சும்மா சிட்டாக பறந்த அந்த கார் மாடல் என்னது? அதன் சிறப்புகள் என்ன? மேலும், அது யாருடைய கார் என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
அனிமல் திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து பிரபல நடிகர் ரன்பீர் கபூர் புத்தம் புதிய சொகுசு கார் மாடல் ஒன்றை வாங்கி இருந்தார். பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT) சூப்பர் சொகுசு காரையே அவர் வாங்கினார். இந்த காரிலேயே அவரும், பிரபல நடிகையும் வேக வேகமாக பயணிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.

உடன் சென்ற நடிகை வேறு யாரும் அல்ல. முன்னணி இந்தி பட நடிகையும், அவரது மனைவியுமான ஆலியா பட்-தான் அவர் ஆவார். இவர்கள் பயணித்த அந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை ரூ. 6 கோடிக்கும் அதிகம் ஆகும். இத்தகைய விலை உயர்ந்த காரிலேயே ஜோடி நடிகர்கள் வலம் வந்திருக்கின்றனர்.
சுற்றி ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களும், ரசிகர்களும் இருந்ததால் அவர்கள் உடனடியாக அந்த இடத்தில் இருந்து சிட்டென புறப்பட்டு சென்றிருக்கின்றனர். பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஓர் இரண்டு கதவுகள் கொண்ட கூபே வகை சொகுசு கார் மாடல் ஆகும். இந்த காரை வாங்கி சில நாட்களே ஆகின்றன.

இந்த நிலையிலேயே கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து பயணிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. இதுவே அவர்கள் இருவரும் இணைந்து இந்த காரில் பயணிக்கும்போது கேமிராவின் கண்களில் சிக்குவது முதல் முறை என்றும் கூறப்படுகின்றது. எனவேதான் அந்த வீடியோ தற்போது மிக வேகமாக இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக, ஆலியா மற்றும் ரன்பீர் கபூர் ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோ காட்டு தீயைப் போல் பரவிக் கொண்டிருக்கின்றது. இந்த காரில் சொகுசு அம்சங்களும் அதிகம், அதேபோல், அதிக எஞ்சின் திறனையும் அது வெளியேற்றும். இதனால்தான் இந்த காருக்கு சொகுசு கார் காதலர்களிடம் இருந்து மட்டுமின்றி ஸ்போர்ட்ஸ் கார் விரும்பிகளிடம் இருந்தும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார் மாடலில் லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 542 பிஎச்பி மற்றும் 770 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 8 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
மேலும், இது ஓர் 4 வீல்கள் இயங்கும் வசதிக் கொண்ட கார் மாடலாகவும் காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலை இந்தியாவில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் மட்டுமே பயன்படுத்தவில்லை. இவர்களை போல இன்னும் பல செல்வந்தர்கள் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், அம்பானி குடும்பத்தினர், கிரிக்கெட் வீரர் விராத் கோலி, யுவராஜ் சிங் மற்றும் ஜாக்கி ஸ்ரோஃப் என ஏகப்பட்ட பிரபலங்களும், தொழிலதிபர்களும் இந்தியாவில் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரை பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் இந்திய செல்வந்தர்கள் பலரின் பிரியமான கார் மாடல்களில் ஒன்றாக பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காட்சியளிக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் ஒன்றாக பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காட்சியளிக்கின்றது. அதேவேளையில், இதன் விலை மிக மிக அதிகம் என்பதால் அரிதினும் அரிதாகவே சாலையில் அது தென்படுகின்றது. அந்தவகையிலேயே தற்போது ரன்பீர் கபூர் - ஆலியா பயணிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications









