ரெண்டு பேருக்கு இப்படி ஒரு காரா! 2.5 கோடி ரூபா மதிப்பில் கப்பல் மாதிரியான காரை வாங்கிய நட்சத்திர தம்பதியினர்!
முன்னணி நட்சத்திர ஜோடிகளான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதியினர் இந்தியாவின் மிக மிக விலையுயர்ந்த சொகுசு எம்பிவி ரக காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் என்ன காரை வாங்கி இருக்கின்றனர்? அதன் விலை என்ன? மற்றும் சொகுசு எம்பிவி காரின் சிறப்புகள் என்ன? என்ன மாதிரியான லக்சூரி அம்சங்களை அது தாங்கி இருக்கின்றது? என்பது போன்ற முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
பாலிவுட் பிரபலங்களான இந்த தம்பதியினரிடத்தில் ஏற்கனவே அதிகப்படியான விலை உயர்ந்த மற்றும் அதிக சொகுசு அம்சங்கள் நிரம்பிய ஆடம்பர கார்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையிலேயே அவர்கள் மேலும் ஒரு சொகுசு காரை இணைந்திருக்கின்றனர். லெக்சஸ் எல்எம் (Lexus LM) சொகுசு எம்பிவி (MPV) ரக காரையே இந்த ஜோடியினர் வாங்கி இருக்கின்றனர்.

இதனால் அவர்களிடம் சொகுசு கார்களின் எண்ணிக்கு சற்றே உயர்ந்திருக்கின்றது. இந்த லக்சூரி எம்பிவி காரின் விலை ரூ. 2.5 கோடிக்கும் அதிகம் ஆகும். இதன் சில்வர் நிற தேர்வையே அவர்கள் வாங்கி இருக்கின்றனர். இது 'எம்02 ஜிஜி 2800' எனும் ஃபேன்சி எண்ணால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த காரை நட்சத்திர ஜோடி வீட்டிற்கு எடுத்து வரும் வீடியோவே தற்போது வெளஇயாகி இருக்கின்றது. அந்த வீடியோவை வரீந்தர் சாவ்லா எனும் நபர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் நட்சத்திர ஜோடிகள் இருப்பது துள்ளியமாக தெரியவில்லை. எனவே அவர்கள் பின்னால் அமர்ந்திருக்கலாம் என தெரிகின்றது.

அவர்கள் லெக்சஸ் எல்எம் மாடலின் 350எச் தேர்வையே வாங்கி இருக்கின்றனர். இது டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire)-க்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது. இதுவும் மிக சிறந்த சொகுசு அம்சங்கள் நிறைந்த ஆடம்பர எம்பிவி ஆகும். அதேவேளையில், லெக்சஸ் நிறுவனம் தன்னுடைய இந்த எல்எம் 350எச் மாடலை வெல்ஃபைய் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டே உறுவாக்கி இருக்கின்றது.
இருந்தாலும், வடிவமைப்பு விஷயத்தில் இந்த கார் வேறுபடுகிறது. அறுகோண வடிவங்களுடன் கூடிய பெரிய முன் கிரில், நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்ட எல்இடி ஹெட்லைட், மேலும், பம்பரில் செங்குத்தாக அடுக்கப்பட்ட எல்இடி பனி மின் விளக்குகள் ஆகியவை இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.
இதுதவிர, எல்இடி பகல்நேர மின் விளக்குகளும் இந்த காரில் இடம் பெற்றிருக்கும். இந்த காரில் லக்சூரி டிராவல் அனுபவத்தை வழங்கும் விதமாக பல்வேறு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், மிக முக்கியமான அதன் இருக்கை இருக்கின்றது. இந்த காரை 4 மற்றும் 7 இருக்கைகள் தேர்வில் வாங்கிக் கொள்ள முடியும்.
இந்த நட்சத்திர ஜோடி எந்த பதிப்பைத் தேர்ந்தெடுத்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதன் 4-சீட்டர் வெர்ஷன் பின் பக்கத்திற்கு மிக சிறந்த தனிமையை வழங்கும். இதன்படி, டிரைவர் பகுதியையும், பயணிகள் பகுதியையும் பிரிக்கும் பொருட்டு இடையில் ஓர் மங்கலான கண்ணாடி பேனல் வழங்கப்பட்டு இருக்கும். இந்த பேனலை பயணிகளின் விருப்பட்தின் அடிப்படையில் ஏற்றி-இறக்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இருக்கைகளைத் தொடர்ந்து கூடுதல் சிறப்பம்சமாக 48 அங்குல டிவி, விமானங்களில் இருப்பதைப் போல ரிக்லைனர் இருக்கைகள், 23-ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், மடித்துக் கொள்ளும் வசதிக் கொண்ட டேபிள்கள், சூடாகும் ஆர்ம்ரெஸ்ட்கள், ஓட்டோமான்கள், வயர்லெஸ் செல்ஃபோன் சார்ஜர், ஃப்ரிட்ஜ், பின்பக்கத்தில் க்ளோவ் பாக்ஸ்கள், டிஜிட்டல் ரியர்வியூ மிரர் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
பாதுகாப்பு விஷயத்திலும் இந்த கார் மேம்பட்டுக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், மிக முக்கியமான சிறப்பு வசதியாக அடாஸ் (ADAS) தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக, வாகனங்களின் இருப்பைக் கண்டறிந்து அதற்கு ஏற்ப எச்சரிக்கை வழங்குதல், டைனமிக் ரேடார் பயணக் கட்டுப்பாடு, லேன் புறப்படும் எச்சரிக்கை, லேன் டிரேசிங் உதவி, தானியங்கி உயர் பீம், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக உதவி செய்வது உள்ளிட்டவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.
எஞ்சினைப் பொருத்த வரை எல்எம் 350எச் சொகுசு காரில் 2.5 லிட்டர், 4 சிலிண்டர், வலுவான ஹைபிரிட் பெட்ரோல் எஞ்சினே வழங்கப்பட்டு இருக்கின்றது. அதாவது, பெட்ரோல் இயந்திரம் மற்றும் மின்சார மோட்டார் இரண்டும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கிறது. இது வழக்கமான பெட்ரோல் என்ஜின்களை விட அதிக செயல்திறன்மிக்கது.
இரண்டும் ஒருங்கிணைந்து 250 பிஎஸ் மற்றும் 239 என்எம் டார்க் வரையிலான ஆற்றலை வெளியிடும். இத்துடன், இ-4 வீல் டிரைவ் சிஸ்டத்தைப் பயன்படுத்தி நான்கு சக்கரங்களுக்கும் சக்தியை விநியோகிக்கும் வசதிக் கொண்ட இ-சிவிடி கியர்பாக்ஸ் (e-CVT gearbox) இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு எம்பிவி ரக கார்களுக்கு கணிசமான அளவிலேயே வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பணக்காரர்கள் மற்றும் முன்னணி திரை நட்சத்திரங்கள் மத்தியிலேயே இந்த வகை கார்களுக்கு டிமாண்ட் உள்ளது. இதற்கு சான்றாகவே ரன்பீர் கபூர்- ஆலியா பட் ஜோடி லெக்சஸ் எல்எம் 350எச் சொகுசு எம்பிவி காரை வாங்கிய நிகழ்வு அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








