ராஜா-ராணி போல 5கோடி ரூபா காரில் வந்திறங்கிய நட்சத்திர ஜோடி.. ரெண்டு பேரும் இப்பவும் லவ்வர்ஸ போல சுத்துறாங்க!

ராஜா, ராணி சாரட்டு வண்டியில வந்து இறங்குவது போல இங்கே இரண்டு நடிகர்கள் ஐந்து கோடி ரூபா காரில் வந்திறங்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ரன்பீர் கபூர் மற்றும் அவரது மனைவி ஆலியா பட் இவர்களே அந்த காரில் வந்தவர்கள் ஆவர். திருமணமானதை மறந்து இப்போதும் இவர்கள் காதல் ஜோடிகளை ஒன்றாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். எங்கே சென்றாலும் இருவரும் இணைய பிரியா ஜோடியை ஒன்றாகவே வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையிலேயே சமீபத்தில் மும்பை நகரத்தின் முக்கிய சாலை ஒன்றில் இருவரும் ஓர் சொகுசு காரில் வலம் வந்திருக்கின்றனர். அதுவும் அண்மையில் புதிதாக வாங்கிய ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள காரில் அவர்கள் வலம் வந்திருக்கின்றனர். பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT) இதுவே அவர்கள் வலம் வந்த ஆடம்பர கார் மாடல் ஆகும்.

Ranbir kapoor alia bhatt bentley continental gt

இந்த காரை வாங்கிய பின்னர் இருவரும் அதில் ஒன்றாக வலம் வருவது இதுவே முதல் முறை என தெரிகின்றது. இதனாலேயே இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த ஜோடிகள் இடத்தில் ஏற்கனவே மிக அதிக எண்ணிக்கையில் ஆடம்பர கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த நிலையிலேயே சமீபத்தில் இந்த ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள காரையும் தங்களின் லக்சூரி வாகன சேகரிப்பில் இணைத்தனர். பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஓர் இரண்டு டோர்களை மட்டுமே கொண்ட ஸ்போர்ட்ஸ் கூபே வகை கார் மாடல் இதுவாகும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 330 கிமீட்டருக்கும் அதிகம் ஆகும்.

இத்தகைய ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட காரிலேயே ஹாயாக இந்த நட்சத்திர ஜோடி வலம் வந்திருக்கின்றது. திறனை வெளிப்படுத்துவதில் மட்டும் அல்ல சொகுசு அம்சங்களைத் தாங்கி இருப்பதிலும் இந்த இரண்டு டோர்களைக் கொண்ட பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார் சிறப்பான வாகனமாக காட்சியளிக்கின்றது.

இந்த காரில் அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் 4.0 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜட் வி8 பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 542 பிஎச்பி மற்றும் 770 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

Ranbir kapoor and alia bhatt s luxury car

8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் வாயிலாகவே நான்கு வீல்களுக்கும் இயங்கும் திறன் கடத்தப்படுகின்றது. ரன்பீர் கபூர் இடத்தில் இந்த கார் மாடல் மட்டும் அல்ல இன்னும் பல ஆடம்பர கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

அந்தவகையில், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி, ஆடி ஏ8 எல் டபிள்யூ12 மற்றஉம் ஆடி ஆர்8 உள்ளிட்ட கார் மாடல்களையே அவர் வைத்திருக்கின்றார். இதுமட்டுமல்ல அவர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எம்பிவி ரக கார் மாடலான லெக்சஸ் எல்எம் 350எச் மாடலையும் அவர் பயன்படுத்தி வருகின்றார்.

இந்த கார் அவர் மிக சமீபத்திலேயே வாங்கினார் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் மதிப்பு ரூ. 2.62 கோடி ஆகும். இதுபோன்று இன்னும் பல கார் மாடல்களை ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஜோடிகள் தங்களுக்கு சொந்தமாக வைத்திருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: திரைப்படத்தில் ஜோடியாக நடித்து நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக மாறியவர்களில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்-ம் ஜோடியும் ஒன்றாகும். இவர்கள் ஏகப்பட்ட ஆடம்பர கார்களுக்கு உரிமையாளர்களாக இருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது. இதில் ஒன்றான இந்த பென்ட்லீ காரில் அவர்கள் தற்போது வலம் வந்திருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Sunday, February 23, 2025, 5:00 [IST]
English summary
Ranbir kapoor and alia bhatt spotted bentley continental gt couple s most expensive car
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+