6 கோடி ரூபாய் காருக்கு உள்ளே இருந்து பணத்தை நீட்டிய கை! முகத்தை பாத்ததும் ஆடிப்போன முதியவர்! வந்தது அவரா!
பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் பலரும் மிகவும் விலை உயர்ந்த கார்களில் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு ரன்பீர் கபூரும் (Ranbir Kapoor) விதிவிலக்கு அல்ல. அனிமல் (Animal) திரைப்படத்திற்கு பிறகு, இந்தியா முழுக்க இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது.
ரன்பீர் கபூரிடம் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover), மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes Benz G63 AMG), ஆடி ஏ8 எல் (Audi A8 L) மற்றும் ஆடி ஆர்8 (Audi R8) என்று ஏராளமான விலை உயர்ந்த கார்கள் இருந்து வருகின்றன. இந்த வரிசையில், நடிகர் ரன்பீர் கபூரின் சொகுசு கார் கலெக்ஸனில் (Luxury Car Collection) மற்றொரு விலை உயர்ந்த கார் ஒன்று தற்போது புதிதாக இணைந்துள்ளது.

அது பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT) கார் ஆகும். ரன்பீர் கபூர் வாங்கியிருப்பது, பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரின் வி8 (V8) வெர்ஷன் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 5.23 கோடி ரூபாய் வருகிறது. ஆன்-ரோடு விலை (On-road Price) சுமார் 6 கோடி ரூபாய் வரும்.
பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரின் வி8 வெர்ஷனில் பொருத்தப்பட்டிருப்பது, 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 542 பிஹெச்பி பவர் மற்றும் 770 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த சக்தி வாய்ந்த இன்ஜின் உடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, இந்த 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மூலமாக , காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய தனது புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரில், நடிகர் ரன்பீர் கபூர் பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது.
இந்த வைரல் வீடியோவில், சாலையோரமாக நின்று கொண்டிருந்த முதியவர் ஒருவருக்கு ரன்பீர் கபூர் பணம் கொடுத்து விட்டு செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வீடியோ எடுக்கப்பட்டபோது ரன்பீர் கபூர்தான் காரை ஓட்டி கொண்டிருந்தார். ஆனால் அவர் அந்த முதியவருக்கு எதற்காக பணம் கொடுத்தார்? என்பது உறுதியாக தெரியவில்லை.
எனினும் மிகவும் விலை உயர்ந்த காரில் வந்த ரன்பீர் கபூரை பார்த்ததும், அந்த முதியவர் ஆச்சரியமடைந்திருக்க கூடும். திடீரென்று ஒரு விலை உயர்ந்த கார் வந்து நிற்பதும், அதன் உள்ளே இருந்து பிரபல நடிகர் ஒருவர் பணத்தை கொடுப்பதும் எந்தவொரு நபருக்கு நிச்சயமாக ஆச்சரியத்தையே ஏற்படுத்தும். அனேகமாக ரன்பீர் கபூர், அந்த முதியவருக்கு உதவி செய்யும் நோக்கில் பணம் வழங்கியிருக்கலாம்.
இதற்கு முன்பாக இதே அனிமல் திரைப்படத்தில், ரன்பீர் கபூரை விட அதிகமாக ஸ்கோர் செய்த பாபி தியோலும் (Bobby Deol), காரில் இருந்தபடியே பெண் வியாபாரி ஒருவருக்கு பணத்தை கொடுத்து சென்றது இங்கே குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு செய்தியாக வழங்கியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரன்பீர் கபூர் தற்போது புதிதாக வாங்கியுள்ள பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரானது, செயல்திறன் மற்றும் சொகுசு என இரண்டும் கலந்த கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே பலருக்கும் கனவாக உள்ள இந்த காரில், சீறிப்பாய்ந்து கொண்டே சௌகரியமான பயணத்தை ரன்பீர் கபூரால் அனுபவிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








