திடீர்னு வந்து நின்ன 3 கோடி ரூபா கார்! உள்ள இருந்தவரை பார்த்ததும் மிரண்ட மக்கள்! முதல் முறையா வந்திருக்காரு!
இந்தியாவின் முன்னணி நடிகர், நடிகைகள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்குவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். ஒரு சில விலை உயர்ந்த கார்களை வாங்குவதுடன் மட்டும் அவர்கள் நின்று விடுவதில்லை. நிறைய கார்கள் இருந்தாலும் கூட, பல்வேறு புதிய கார்களை தொடர்ச்சியாக வாங்கி கொண்டே உள்ளனர். இதற்கு ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) ஒரு உதாரணம். பாலிவுட்டில் பிரபல நடிகராக இருந்தாலும், நாட்டின் மற்ற பகுதிகளில் இவரை பெரிதாக தெரியாது. ஆனால் 2023ம் ஆண்டு வெளியான அனிமல் (Animal) திரைப்படம், இவரை நாடு முழுக்க பிரபலமாக்கி விட்டது.
பென்ட்லீ கான்டினென்டல் (Bentley Continental), மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி 63 (Mercedes AMG G 63), லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Land Rover Range Rover Autobiography), லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் (Land Rover Range Rover Vogue), பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series) உள்ளிட்ட கார்களை எல்லாம் ரன்பீர் கபூர் வைத்துள்ளார்.

இவை எல்லாம் தவிர, ஆடி ஏ6 (Audi A6), ஆடி க்யூ5 (Audi Q5), ஆடி க்யூ7 (Audi Q7), ஆடி ஏ8 எல் (Audi A8 L) என போதும் போதும் என சொல்லும் அளவிற்கு, ரன்பீர் கபூரிடம் கார்கள் இருக்கின்றன. இந்த வரிசையில் தற்போது மற்றொரு விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை ரன்பீர் கபூர் வாங்கியுள்ளார்.
அது லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் (Lexus LM 350h) ஆகும். இது சொகுசு எம்பிவி (Luxury MPV) ரகத்தை சேர்ந்தது. 48 இன்ச் டிவி, 23 ஸ்பீக்கர் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், பிரிட்ஜ், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் என ஏகப்பட்ட வசதிகள் லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன.

செயல்திறனை பொறுத்தவரையில், 2.5 லிட்டர் 4 சிலிண்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைந்த பவர் அவுட்புட் 250 பிஎஸ் மற்றும் 239 என்எம் டார்க் ஆகும். இந்த இன்ஜின் உடன் இ-சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, இதன் மூலமாக காரின் நான்கு சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. 4 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என 2 விதமான இருக்கை அமைப்புடன், லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் கார் கிடைக்கிறது. இதில், ரன்பீர் கபூர் வாங்கியிருப்பது 4 சீட்டர் வெர்ஷன் ஆகும்.
இதன் விலை 2.50 கோடி ரூபாய் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டுமே. ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 3.10 கோடி ரூபாய் வரும். இவ்வளவு விலை உயர்ந்த காரில், ரன்பீர் கபூர் வந்து இறங்கும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது.
திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் என பல முகங்களை கொண்ட சஞ்சய் லீலா பன்சாலியின் (Sanjay Leela Bhansali) அலுவலகத்திற்கு ரன்பீர் கபூர் வந்தபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அனேகமாக லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் காரில், ரன்பீர் கபூர் பொது மக்களுக்கு காட்சி தருவது இதுவே முதல் முறை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஏகப்பட்ட சொகுசு வசதிகள் நிரம்பிய ஒரு எம்பிவி ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் மிகவும் ஏற்றது. தொழில் அதிபர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் சோர்வு இல்லாமல் பயணிக்க ஏற்ற காராக இது இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








