பல தலைமுறைக்கு சொத்து சேத்தாச்சு.. இப்ப ஜாலியா வாழ்றாரு! மயக்கம் தர மாதிரியான விலை கொண்ட காரையும் வாங்கிட்டாரு

பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவர் ரன்பீர் கபூர். இவரிடத்தில் ஏற்கனவே விலை உயர்ந்த ஆடம்பர கார்கள் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையிலேயே அவர் மேலும் ஓர் சொகுசு கார் மாடலை அவருடைய கார் கலெக்சனில் இணைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல் 55 ஏஎம்ஜி (Mercedes SL55 AMG) எனும் கார் மாடலையே அவர் வாங்கி இருக்கின்றார். இது ஓர் 2+2 இருக்கை அமைப்பைக் கொண்ட கன்வெர்டபிள் கார் மாடல் ஆகும்.

இந்தியாவில் இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே இரண்டரை கோடியை நெருங்கும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய விலை உயர்ந்த சொகுசு பென்ஸ் காரையே இந்தி பட நடிகர் தற்போது வாங்கி இருக்கின்றார். இவ்வளவு விலை உயர்ந்த காரில் வந்த போதிலும், கெத்துக் காட்டிக் கொள்ளாமல் சாலை ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்த தன்னுடைய ரசிகர்களுக்காக ஜன்னலைத் திறந்து அவர்களுக்கு கை காட்டிவிட்டு சென்றார்.

Ranbir kapoor 3 crore rs benz sports car

இந்த வீடியோவே தற்போது இணைய்ததில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. ரன்பீரின் சொத்து மதிப்பு 345 கோடி ரூபாய்க்கும் அதிகம் என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே அவர் ஆடம்பர கார்களை அதிக அளவில் வாங்கிக் குவிக்கத் தொடங்கி இருக்கின்றார். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் சேர்த்து வைத்த பணத்திற்கு புதிய கார்களை வாங்குவதன் வாயிலாக அவர் வேலை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

சமீபத்திலேயே அவர் பென்ட்லீ (Bentley) மற்றும் லெக்சஸ் எல்எம் 350எச் (Lexus LM 350h) ஆகிய சொகுசு கார் மாடல்களை வாங்கினார். இந்த சூழலிலேயே தற்போது 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் எஸ்எல் 55 ஏஎம்ஜி காரையும் அவர் வாங்கி இருக்கின்றார். இது ஆன்-ரோடு விலை ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை-தான் ரூ. 2.35 கோடி ஆகும்.

Ranbir kapoor car

சிபியூ வாயிலாகவே இந்த காரை பென்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் இதன் விலை மிகவும் அதிகமாக உள்ளது. விலைக்கு ஏற்ப கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதீத ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட காராகவும் பென்ஸ் எஸ்எல்55 ஏஎம்ஜி காட்சியளிக்கின்றது.

இந்த காரில் 4.0 லிட்டர், ட்வின் டர்போ வி8 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகட்சமாக 476 எச்பி மற்றும் 700 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். இதன் இயக்கத்தை மேலும் சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 4 மேட்டிக் பிள்ஸ் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 295 கிமீ ஆகும். இதுமட்டுமல்ல, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்ட இந்த காருக்கு வெறும் 3.9 செகண்டுகளே போதுமானதாக உள்ளது. இதுமாதிரியான தரமான திறனை வெளியேற்றக் கூடிய காரிலேயே ரன்பீர் கபூர் தற்போது காட்சியளித்திருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: செல்வம் கொழித்த முன்னணி நடிகர்களில் ஒருவராக ரன்பீர் கபூர் இருக்கின்றார். இந்த நிலையிலேயே தன்னுடைய செல்வ செழிப்பை கார்கள் வாயிலாகக் காண்பிக்கும் விதமாக அவர் ஆடம்பர கார்களை அதிக அளவில் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றார். இவர் வாங்கும் ஒவ்வொரு காரின் விலையும் மயக்கம் வர வைக்கின்ற வகையில் இருப்பதுதான் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 11, 2025, 5:00 [IST]
English summary
Ranbir kapoor spotted with mercedes amg sl55 sports car valued at inr 3 crore
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+