பெரிய நடிகர் மாதிரியா தெரிகிறார்? சாதாரணமாக காரில் ஏறி சென்றவர் இந்த பிரபல நடிகரா?
ரன்தீப் ஹூடா (Randeep Hooda), பாலிவுட்டில் சிறப்பாக நடிக்கக்கூடிய நடிகர்களுள் ஒருவர். அதாவது, ஒரு சில நடிகர்கள் தேர்வு செய்யக்கூடிய கதைகள் எல்லாமே வித்தியாசமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் அல்லவா. நம் தமிழில் கூட கமல், விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் இருக்கின்றனர். அதேபோல், பாலிவுட்டில் முழுக்க முழுக்க கதை களத்தை நம்பி நடிக்கக்கூடிய நடிகர், ரன்தீப் ஹூடா ஆவார். இவர் புதியதாக ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார் ஒன்றை வாங்கியுள்ளார். மேலும், தற்போது அந்த காரில் காட்சி தந்துள்ளார். நடிகர் ரன்தீப் ஹூடா வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் காரை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
சமீபத்தில் திரைக்குவந்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த இந்தி திரைப்படம், 'ஸ்வாதந்ர்யா வீர் சாவர்க்கர்'. சுதந்திர போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக எடுக்கப்பட்ட இதில், வீர் சாவர்க்கராக நடித்திருந்தார் நடிகர் ரன்தீப் ஹூடா. சாவர்க்கரின் முக அமைப்பு கணக்கச்சிதமாக ரன்தீப் ஹூடாவுக்கு பொருந்தி இருந்தது.

இந்த வீர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் மட்டுமல்ல... அதற்கு முன் நடித்த 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை', 'ஹைவே' உள்ளிட்ட திரைப்படங்களிலும் தனது நடிப்பு திறனை வெளிக்காட்டி இருந்த நடிகர் ரன்தீப் ஹூடா, அதன் மூலமாக பாலிவுட் சினிமா வட்டாரத்தில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளார். இதனை தக்க வைத்துக்கொள்ள அவ்வப்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் துணை நடிகராகவும் நடிக்கிறார்.
இந்த நிலையில், நடிகர் ரன்தீப் ஹூடா மும்பையில் தனது புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் கார் உடன் காட்சி தந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில், ரன்தீப் ஹூடாவின் மனைவி லின் லாய்ஷ்ராம் அவர்களையும் காணலாம். இந்த வீடியோவில், ரன்தீப் ஹூடாவை காட்டிலும் நம்மை வெகுவாக கவர்ந்திழுப்பது, அவரது கருப்பு நிறத்திலான புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் கார் ஆகும்.

வீடியோவில், காரின் பளபளப்பை பார்க்கும்போதே உங்களுக்கு தெரிந்திருக்கும் இதனை ரன்தீப் ஹூடா சமீபத்தில்தான் வாங்கியிருக்க கூடும் என்று. ஆம்... இந்த விலைமிக்க ரேஞ்ச் ரோவர் காரை கடந்த ஆண்டு இறுதியில்தான் இவர் வாங்கினார். அப்போது காரின் படங்களை கூட நடிகர் ரன்தீப் ஹூடா தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு இருந்தார். இந்த நடிகர் வைத்திருப்பது, ரேஞ்ச் ரோவர் காரின் ஆட்டோபயோகிராபி (Autobiography) வேரியண்ட்டை ஆகும்.
ரேஞ்ச் ரோவர் கார்களை லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனம் உற்பத்தி செய்கிறது. லேண்ட் ரோவர் நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாக கூடிய கார்களாக ரேஞ்ச் ரோவர் கார்கள் விளங்குகின்றன. குறிப்பாக, ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரை நடிகர் ரன்தீப் ஹூடாவை போன்று சினிமா நட்சத்திரங்கள் பலரும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.

ரேஞ்ச் ரோவர் கார்கள் அவற்றின் சவுகரியமான மற்றும் விசாலமான கேபின் வசதிகளுக்காக பெயர் போனவை ஆக விளங்குகின்றன. இந்த கார்களில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் உடன் 35-ஸ்பீக்கர் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இது இயங்கும்போது காரின் சக்கரங்கள் மற்றும் என்ஜினில் இருந்து ஏற்படும் அதிர்வுகளை கூட தடுக்கக்கூடியதாக உள்ளது.
தற்போதைய ரேஞ்ச் ரோவர் காருக்கு உள்ளே புதிய 13.1-இன்ச் ஃப்ளோட்டிங் இன்ஃபோடெயின்மெண்ட் திரை மற்றும் ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், டிரைவரின் தலைக்கு மேலே டிஸ்பிளே, மல்டி-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 4-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கும் பொழுதுப்போக்கு திரை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் ரன்தீப் ஹூடாவிடம் ஏற்கனவே நிறைய சொகுசு கார்கள் உள்ளன. இருப்பினும், அவரிடம் இருப்பதிலேயே விலை உயர்ந்த காராக இந்த ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் இருக்கலாம். இதன் ஆன்-ரோடு விலை தற்சமயம் ரூ.3 கோடிக்கும் அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications









