பாருங்கோ... மாயமில்லே, மந்திரமில்லே...பேப்பர் பாலத்தை அசால்ட்டாக கடந்த ரேஞ்ச்ரோவர் புலி!

Written By:

பேப்பர் கட்டுகளால் அமைக்கப்பட்ட பாலத்தை வெகு லாவகமாக கடந்து அசத்தியிருக்கிறது ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி.

கிழக்கு வெனிஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் சீனாவின் சூசோ என்ற இடத்தில்தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த சாதனை நிகழ்வு குறித்த பல சுவையான தகவல்கள், படங்களை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

இங்கிலாந்தை சேர்ந்த லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி உலக அளவில் பிரபலமான சொகுசு எஸ்யூவி மாடல். 1970ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதத்தில், இந்த சாதனை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரத்யேக ரேஞ்ச்ரோவர்

பிரத்யேக ரேஞ்ச்ரோவர்

இந்த சாதனை நிகழ்வுக்காக, 60 லட்சமாவது ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியாக உற்பத்தி பிரிவிலிருந்து வெளிவந்த கார் பயன்படுத்தப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள ஜாகுவார் லேண்ட்ரோவர் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு, அந்த ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கட்டுமானம்

கட்டுமானம்

ப்ளைவுட் பலகைகளால் அமைக்கப்பட்ட வளைவான மேடையின் மீது 54,390 தாள்களை அடுக்கி இந்த பாலம் அமைக்கபப்பட்டது. பின்னர், அந்த பிளைவுட் பலகைகள் நீக்கப்பட்டு, காகித கட்டுகளின் இறுக்கத்தில், பாலம் நிற்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. பசை பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேப்பர் சப்ளை

பேப்பர் சப்ளை

இந்த பாலத்திற்கான தரமான பேப்பர்களை இங்கிலாந்தை சேர்ந்த ஜேம்ஸ் கிராப்பர் பிஎல்சி என்ற காகித தயாரிப்பு நிறுவனம் அனுப்பியிருந்தது.

 கட்டுமான காலம்

கட்டுமான காலம்

மூன்று நாட்களில் இந்த பேப்பர் பாலம் கட்டமைக்கப்பட்டது. ஸ்டீவ் மேஸம் என்ற வடிவமைப்பு நிபுணர் இந்த பாலத்தை வடிவமைத்து கொடுத்தார்.

சாகச மேடை

சாகச மேடை

ஏறும்போதான பாலத்தின் மேற்பகுதி 34.7 டிகிரி சரிவுடனும், இறங்குவதற்கான பகுதி 29.6 டிகிரி சரிவுடனும் அமைக்கப்பட்டிருந்தது.

சாதனை

சாதனை

2,374 கிலோ எடை கொண்ட ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி மிக லாவகமாக தனது தொழில்நுட்ப வித்தைகளை பயன்படுத்தி, அந்த பாலத்தை வெகு லாவகமாக கடந்து சாதனை படைத்துள்ளது.

பெருமிதம்

பெருமிதம்

இதிலே, மாயமில்லே, மந்திரமில்லே, ஆனா, ரேஞ்ச்ரோவரில் இருக்கும் Terrain Response- 2 என்ற தொழில்நுட்பம் இருக்கு சார் என்று ஜாகுவார் லேண்ட்ரோவர் எஞ்சினியரிங் பிரிவு அதிகாரி நிக் ரோஜர்ஸ் கூறுகிறார். மேலும், இலகுவான ஸ்டீல்கள் பயன்படுத்தப்பட்டதால், இந்த நான்காம் தலைமுறை ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியின் எடை 430 கிலோ வரை குறைந்ததும், இந்த காரில் இருக்கும் அனைத்து நில அமைப்புகளையும் எதிர்கொள்ளத்தக்க தொழில்நுட்பங்களுமே, இந்த சாதனையை நிகழ்த்த பேரூதவி புரிந்தது என்றும் அவர் கூறினார்.

மறுசுழற்சி

மறுசுழற்சி

இந்த சாதனைக்கான பேப்பர் பாலத்தில் பயன்படுத்தப்பட்ட காகிதங்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படும் என்று ஜாகுவார் லேண்ட்ரோவர் தெரிவித்திருக்கிறது.

ஓட்டியவர்

ஓட்டியவர்

பேப்பர் பாலத்தின் மீது லேண்ட்ரோவரின் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியை லாவகமாக ஓட்டியவர் அந்த நிறுவனத்தின் சாகச நிகழ்வுகள் பிரிவு தலைமை பயிற்றுனர் க்றிஸ் சோவு என்பது குறிப்பிடத்தக்கது.

 
English summary
Land Rover celebrates 45 years of Range Rover innovation with a creative collaboration by driving its flagship Range Rover luxury SUV across a bridge made of paper. By accomplishing this jaw-dropping drive, the Luxury-SUV now completes the world's first drive across a one-off paper bridge.
Story first published: Thursday, November 19, 2015, 16:36 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark