நமக்கு எப்படி ஸ்விஃப்ட் காரோ.. நடிகர்களுக்கு இந்த காரு.. ஒருத்தரு ரெண்டு பேரு இல்ல நிறைய பேரு வாங்குறாங்க!

பட்ஜெட் கார் பிரியர்களின் மனம் கவர்ந்த வாகனமாக எப்படி ஸ்விஃப்ட் (Swift) உள்ளிட்ட கார் மாடல்கள் இருக்கின்றனவோ, அதுபோலவே, இந்தியாவின் உச்ச நட்சத்திர நடிகர்களின் பிரியமான கார் மாடலாக லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி (Land Rover Range Rover SUV) இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக பாலிவுட் திரை உலகின் உச்ச நட்சத்திர நடிகரான ரன்வீர் சிங் அக்கார் மாடலை தற்போது வாங்கி இருக்கின்றார். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார் மாடல்களில் ஒன்றாக லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காட்சியளிக்கின்றது.

இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 2.36 கோடி ஆகும். அது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த கார் மாடல் அதிகபட்சமாக ரூ. 4.98 கோடி வரையிலான விலையில் விற்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

Ranveer singh and deepika padukone buys range rover suv

இத்தகைய உச்சபட்ச விலைக் கொண்ட சொகுசு கார் மாடலையே ரன்வீர் சீங் தற்போது வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கார் மாடலை ஏற்கனவே இந்தியாவில் அர்ஜூன் கபூர், சுஷ்மிதா சென், கியாரா அத்வானி, சஞ்சய் தத், ரன்பீர் கபூர், ஆலியா பட், நிம்ரத் கவுர், ஆதித்யா ராய் கபூர், பூஜா ஹெக்டே, மஹேஷ் பாபு மற்றும் மோகன்லால் உள்ளிட்ட நடிகர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுபோன்று பிரபலங்கள் மற்றும் இந்திய தொழிலதிபர்கள் மத்தியில் இந்த காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே லேண்ட் ரோவர் நிறுவனம் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி சொகுசு காரின் உற்பத்தியை உள்ளூர் மயமாக்கி இருக்கின்றது. இதன் டெலிவரி பணிகள் கூட சமீபத்திலேயே தொடங்கின.

இந்த நிலையிலேயே ஒவ்வொரு பிரபலங்களாக இந்த கார் மாடலை டெலிவரி எடுக்கத் தொடங்கி இருக்கின்றனர். அவர்களில் ஒருவராகவே தற்போது ரன்வீர் சிங் மற்றும் தீபிக படுகோன் ஜோடி இணைந்துள்ளனர். சமபீத்திலேயே தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் ஜோடிகளுக்கும் பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையிலேயே அவர்கள் புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் காரை வாங்கி இருக்கின்றனர். தங்கள் பெண் குழந்தை வீட்டுக்கு வந்திருப்பதை கொண்டாடும் விதமாக அவர்கள் இந்த காரை வாங்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இந்த நட்சத்திர ஜோடிகள் வீட்டில் மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர கார்கள் பல பயன்பாட்டில் இருக்கின்றன.

அந்தவகையில், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 600 (Mercedes-Benz GLS600), மெர்சிடிஸ் மேபேக் எஸ்500 (Mercedes-Benz S500), பென்ஸ் ஜிஎல்எஸ் 350டி (Mercedes-Benz GLS 350d), அஸ்டன் மார்டின் ரேபிடே எஸ் (Aston Martin Rapide S), லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) என ஏகப்பட்ட கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இதுதவிர இன்னும் பல கார் மாடல்கள் இந்த ஜோடிகளிடத்தில் இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இவற்றுடனே தற்போது ரேஞ்ச் ரோவர் சொகுசு காரும் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இது மிக மிக அதிக ஆடம்பர அம்சங்கள் மற்றும் நவீன கால தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கி கார் மாடல் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என இந்தியாவில் தனித்துவமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பல லட்சக் கணக்கான ஃபேன்களைக் கொண்டிருக்கும் திரை நட்சத்திரங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர். இதற்கு சான்றாகவே ஒரு பெரும் நடிகர்கள் பட்டாளமே இந்த பிராண்டின் தயாரிப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 23, 2024, 16:11 [IST]
English summary
Ranveer singh and deepika padukone buys range rover suv following birth of their daughter
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+