ரஜினி பட நடிகையின் கணவர் வாங்கிய காஸ்ட்லி கார்! அம்பானி கிட்டயே இந்த கார் கிடையாது!
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு புதிய காஸ்ட்லியான எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த கார் டெலிவரி செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து கார் இவ்வளவு வித்தியாசமாக இருக்கிறதே பலர் புகழ்ந்து வருகின்றனர். இந்த நடிகர் யார் என தமிழ்நாட்டில் பலருக்கு தெரியவில்லை. இவர் ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனேவின் கணவர் தான் இவர் வாங்கிய கார் குறித்து பார்ப்போமா?
பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் ரன்வீர் சிங், இவர் கடந்த 6ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நாளில் இவர் தனக்கென சொந்தமாக ஹம்மர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை வாங்கியுள்ளார். CS12 Vlogs என்ற யூடியூப் சேனிலில் இந்த கார் டெலிவரி செய்யப்படும் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஹம்மர் இவி கார் வாங்கப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. ஆனால் முதன் முறையாக ஒரு பிரபலம் மற்றம் நடிகர் இந்த காரை வாங்கியள்ளார். இந்த கார் அவரது கார்களிலேயே உள்ள முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த வீடியோவில் ஒரு ஹம்மர் இவி கார் லாரியில் வருகிறது. மற்றொரு ஹம்மர் இவி கார் அதை பின் தொடர்ந்து வருகிறது அதில் Friday Night Cars என எழுதப்பட்டுள்ளது. இந்நிறுவனம் வெளிநாட்டிலிருந்து கார்களை இறக்குமதி செய்து வழங்கும் நிறுவனம் ஆகும்.
ரன்வீர் சிங்கிற்கு இந்த நிறுவனம் தான் காரை இறக்குமதி செய்து கொடுத்திருக்கும் என தெரிகிறது. பின்னர் கார் லாரியில் இருந்து இறக்கப்பட்டு கார் டெலிவரிக்காக செல்கிறது. இந்த வீடு ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனே வசிக்கும் வீடாகும்.

ஹம்மர் இவி கார் நேரடியாக இந்தியாவில் விற்பனையில் இல்லை. வெளிநாட்டில் வாங்கி தான் இந்தியாவில் இறக்குமதி செய்ய வேண்டும். இந்த காரை தயாரிக்கும் ஜிஎம்ஜி நிறுவனம் சர்வதேச அளவில் ஹம்மர் இவி காரை 2 விதமான வெர்ஷன்களில் தயாரிக்கின்றனர். இந்த காரின் வெளிப்புற டிசைன் அதன் கம்பஷன் இன்ஜின் காரை போலேவே அந்நிறுவனம் வடிவமைத்துள்ளது.
முக்கியமாக 2X மற்றும் 3X ஆகிய 2 விதமான வேரியன்ட்களில் இந்த கார் விற்பனையாகிறது. இந்த காரில் 2X வேரியன்டில் டுயல் அல்டிம் மோட்டார் பொருத்தப்பட்டு ஆல் வீல் டிரைவ் செட்டப் வழங்கப்ட்டுள்ளது. இது 625 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். 3X வேரியன்ட் கார் 830 பிஎச்பி பவரை 15,591 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.

இந்த காரில் 178kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் போட்டால் 505 கி.மீ வரை பயணிக்க முடியும். இந்த கார் சுமார் 4500 கிலோ எடை கொண்டது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3.5 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டது . இந்த காரில் உள்ள 12.3 இன்ச் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஜிஎம்ஜி சூப்பர் க்ரூஸ், 13.4 இன்ச் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், வென்டிலேட்டட் சீட்டுகள், முக்கியமாக கிரப் வாக் வசதி இருக்கிறது.
இந்த கார் அமெரிக்காவில் இந்திய மதிப்பில் வெறும் ரூ84 லட்சத்திற்கு தான் விற்பனையாகிறது. ஆனால் இந்தியாவில் இறக்குமதி வரி எல்லாம் சேர்த்து இந்த கார் ரூ3.8 கோடி முதல் ரூ4.5 கோடி என்ற விலையில் தான் விற்பனைக்கு வரும். ரன்வீர் சிங் இந்த காரில் கஸ்டமைசேஷன் செய்திருந்தால் அதற்கான கட்டணம் தனியாக வரும். இந்த காரை வாங்க அவர் எவ்வளவு செலவு செய்தார் என்ற சரியான விபரம் தெரியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாலிவுட் பிரபலம் ஒருவர் இந்த ஹம்மர் இவி காரை வாங்குவது இது தான் முதன் முறை இதற்கு முன்னர் ஹம்மர் காரை பலர் வைத்திருந்தனர். ஆனால் அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இனி பிரபலங்கள் பலர் ஹம்மர் இவி காரை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









