இவரு அந்த நடிகையோட வீட்டுக்காரரா! 6 கோடி ரூபா காரில் முதல் முறையா வெளிய தலை காட்டியிருக்காரு!
இந்தியாவை சேர்ந்த திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரேஞ்ச் ரோவர் எல்டபிள்யூபி எஸ்வி (Range Rover LWB SV). இந்த காரின் விலை (Price) சுமார் 5.80 கோடி ரூபாய் ஆகும். எனவே திரையுலக நட்சத்திரங்கள் போன்ற செல்வந்தர்களிடம் மட்டுமே ரேஞ்ச் ரோவர் எல்டபிள்பி எஸ்வி கார் உள்ளது. இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் எல்டபிள்யூபி எஸ்வி காரை வைத்துள்ள பிரபலங்களில் ரன்வீர் சிங்கும் (Ranveer Singh) ஒருவராக இருந்து வருகிறார்.
பிரபல பாலிவுட் நடிகரான இவர், நடிகை தீபிகா படுகோனேவின் (Deepika Padukone) கணவர் ஆவார். ரன்வீர் சிங்-தீபிகா படுகோனே தம்பதிக்கு வெகு சமீபத்தில்தான் பெண் குழந்தை பிறந்தது. மகள் (Daughter) பிறந்ததை கொண்டாடும் வகையில்தான், ரேஞ்ச் ரோவர் எல்டபிள்யூபி எஸ்வி காரை அவர்கள் வாங்கியுள்ளனர்.

இந்த சூழலில் ரேஞ்ச் ரோவர் எல்டபிள்யூபி எஸ்வி காரில் மும்பை விமான நிலையத்திற்கு ரன்வீர் சிங் வந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது. புதிதாக வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் எல்டபிள்யூபி எஸ்வி காரில், ரன்வீர் சிங்கை நாம் பார்ப்பது இதுவே முதல் முறை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
நடிகர் ரன்வீர் சிங்கிடம் ஏற்கனவே மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் 600 (Mercedes Maybach GLS 600), லம்போர்கினி உருஸ் பியர்ல் காப்சூல் எடிசன் (Lamborghini Urus Pearl Capsule Edition) மற்றும் அஸ்டன் மார்டின் ரேபிட் (Aston Martin Rapide) போன்ற விலை உயர்ந்த கார்கள் எல்லாம் உள்ளன.

இந்த வரிசையில் தற்போது அவரது கார் கலெக்ஸனில் (Car Collection) ரேஞ்ச் ரோவர் எல்டபிள்யூபி எஸ்வி கார் இணைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த இந்த காரில், 4.4 லிட்டர் ட்வின் சர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 523 பிஹெச்பி மற்றும் 750 என்எம் ஆகும்.
இந்த இன்ஜின் உடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, இதன் மூலமாக, காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. 13.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், மெரிடியன் 3டி சவுண்ட் சிஸ்டம் உள்பட பல்வேறு வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் பின் இருக்கை பயணிகளுக்கு 13.1 இன்ச் அளவில் 2 பொழுதுபோக்கு திரைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ, யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், ரேஞ்ச் ரோவர் எல்டபிள்யூபி எஸ்வி காரில் வந்து இறங்கி, விமான நிலையத்திற்குள் ரன்வீர் சிங் செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.
ரேஞ்ச் ரோவர் எல்டபிள்யூபி எஸ்வி காருக்கு துணையாக டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் (Toyota Fortuner Legender) கார் வந்ததையும் நாம் வீடியோவில் காணலாம். மகள் பிறந்த சந்தோஷத்தில் ரன்வீர் சிங் எதிர்காலத்தில் இன்னும் நிறைய விலை உயர்ந்த கார்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாம் காணும் வீடியோவில், அடையாளம் தெரியாத அளவிற்கு, ரன்வீர் சிங் மாஸ்க் அணிந்து கொண்டு வந்துள்ளார். அவர் வாங்கியுள்ள புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் எல்டபிள்யூபி எஸ்வி கார், செயல்திறன் மிக்கது. அதே நேரத்தில் சொகுசான பயணத்தை வழங்க கூடியது. செயல்திறன் + சொகுசு என இரண்டும் கலந்த கலவையாக இருப்பதால்தான், ரன்வீர் சிங் இந்த காரை வாங்கியிருக்க கூடும்.


Click it and Unblock the Notifications








