ரொம்ப காஸ்ட்லி! கருப்பு கலர் கார்ல ஏறிப்போனது இவ்ளோ பெரிய ஆளா! அதான் அவரோட எல்லா கார் நம்பரும் 6969-னு இருக்கா
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் (Toyota Fortuner Legender). கடந்த 2021ம் ஆண்டுதான், டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வழக்கமான டொயோட்டா ஃபார்ச்சூனர் காருடன் ஒப்பிடும்போது, இது சற்று வித்தியாசமானது.
டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் காரில் டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. அது 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 204 பிஹெச்பி பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். அவை 4x2 ஆட்டோமேட்டிக் மற்றும் 4x4 ஆட்டோமேட்டிக் ஆகியவை ஆகும். இதில் 4x2 ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் விலை (Price) 43.22 லட்ச ரூபாய் ஆகவும், 4x4 ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் விலை 46.94 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.
இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். எனவே 2 வேரியண்ட்களின் ஆன் ரோடு விலையும் 50 லட்ச ரூபாய்க்கு மேல் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்ந்த காரை பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் (Ranveer Singh) சமீபத்தில் வாங்கியுள்ளார். ஆனால் நமக்குதான் இது விலை உயர்ந்த கார்.

ரன்வீர் சிங்கை பொறுத்தவரையில் இதுதான் அவரிடம் இருப்பதிலேயே மிகவும் விலை குறைவான கார் ஆகும். ஏனெனில் அவரிடம் மெர்சிடிஸ்-மேபேக் ஜிஎல்எஸ்600 (Mercedes-Maybach GLS600), லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus), ஜாகுவார் எக்ஸ்ஜே (Jaguar XJ) மற்றும் அஸ்டன் மார்டின் ரேபிட் (Aston Martin Rapide) போன்ற விலை உயர்ந்த கார்கள் ஏராளமாக இருக்கின்றன.
ஆனால் இந்த விலை உயர்ந்த கார்களுடன் மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) கார் ஒன்றையும், ரன்வீர் சிங் வைத்திருந்தார். எனினும் அந்த காரை அவர் விற்பனை செய்து விட்டார். எனவே தற்போதைய நிலையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர்தான், ரன்வீர் சிங்கின் விலை குறைவான கார் ஆகும்.
இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ரன்வீர் சிங்கின் கார்கள் அனைத்தும் '6969' என்ற பதிவு எண்ணை தாங்கியிருக்கும். அந்த வரிசையில் அவரது புதிய காரான டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டரும், '6969' என்ற பதிவு எண்ணைதான் பெற்றுள்ளது. '69' என்ற எண், ரன்வீர் சிங்கிற்கு மிகவும் விருப்பமானதாக கருதப்படுகிறது.
எனவேதான் '6969' என்ற பதிவு எண்ணை அவர் தனது கார்களுக்கு தொடர்ச்சியாக வாங்கி வருகிறார். இந்த சூழலில் கட்டிடம் ஒன்றில் இருந்து வெளியே வந்து, தனது புத்தம் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் காரில் ஏறி ரன்வீர் சிங் பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. செய்தியின் முடிவில் அந்த வீடியோவை நீங்கள் காணலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் ரன்வீர் சிங்கை பொறுத்தவரையில், டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் ஒரு சாதாரணமான கார்தான். ஆனால் எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார், அவருக்கு பாதுகாப்பான மற்றும் சௌகரியமான பயணத்தை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. இதன் காரணமாகவே டொயோட்டா ஃபார்ச்சூனர் இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








