இந்த ரயில் வந்ததுக்கு அப்புறம் யாரும் ஃப்ளைட்ல போக மாட்டாங்க.. விமானத்தையே மட்டம் தட்டும் அம்சம் கொண்ட ரயில்!

இந்தியாவின் முதல் ரேபிட் (விரைவு) ரயில் வெகுவிரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. இந்த ரயிலில் விமானத்திற்கு இணையான வசதிகளும், சிறப்புகளும் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் விமானத்தையே தோற்கடிக்கும் சிறப்பு வசதிகள் இந் ரயிலில் வழங்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்தகைய ரயிலே வெகு விரைவில் நாட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. காசியாபாத்தில் உள்ள சாஹிதாபாத் தொடங்கி துஹாய் டெபோ-வை இணைக்கும் வகையில் இந்தியாவின் முதல் விரைவு ரயில் பயன்படுத்தப்பட இருக்கின்றது. 2023 மார்ச் மாதம் முதல் இந்த ரயில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது.

ரயில்

மணிக்கு 180 கிமீ வேகத்துல போகும்

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களும் இதையே உறுதிப்படுத்துகின்றன. 17 கிமீ தூரம் இடைவெளிக் கொண்டதே சாஹிதாபாத் - துஹாய் டெபோ வழித்தடம் ஆகும். இந்த வழித்தடத்தில் மணிக்கு சுமார் 180 கிமீ வேகத்தில் விரைவு ரயில் பயணிக்க இருக்கின்றது. இந்த ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட்டை செல்போன் வாயிலாகவும் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஃபுல் ஏசி வசதிக் கொண்டது

ரயில் பயணிப்பதற்கான பிரத்யேக வழித் தடங்கள் உருவாக்கப்பட்டு, அது தற்போது தயார் நிலையில் இருக்கின்றது. இந்த ரயிலில் விமானத்திற்கு இணையான வசதி வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருந்தோம். இதை உறுதிப்படுத்தும் விதமாக அதிக சொகுசான இருக்கைகள், பிரீமியம் இன்டீரியர், ஃபுல் ஏசி வசதி, ஆட்டோமேட்டிக் டூர் கன்ட்ரோல் சிஸ்டம், லக்கேஜிற்கு தனி ஸ்டோரேஜ், டிரைவர் இன்டராக்சன் சிஸ்டம் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும்.

ரயில்

ஒய்-ஃபைலாம் இருக்கும்

இதுதவிர டைனமிக் ரூட் மேப், சிசிடிவி, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒய்-ஃபை, செல்போனுக்கான யுஎஸ்பி சார்ஜர், பயணத்தின்போது வெளிப்புறத்தைக் கண்டுகளிக்கும் விதமாக பெரிய விண்டோ போன்ற மனம் கவரும் அம்சங்கள் இந்த ரயிலில் எக்கசக்கமாக வழங்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்று விமான பயணத்தையே மிஞ்சும் அளவிற்கான அம்சங்கள் பல புதிய விரைவு ரயிலில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்தகைய ரயிலே வெகு விரைவில் காசியாபாத்தில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது.

நோயாளிகளுக்கு என தனி பெட்டி

இந்த ரயில் சில சிறப்பு வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக எந்தவொரு ரயிலிலும் இல்லாத வகையில் ஸ்டிரெச்சர் வசதி ரயிலின் கடைசி பெட்டியில் வழங்கப்பட்டு இருக்கின்றது. உடல்நிலை முடியாத நோயாளிகள் குறைவான கட்டணத்தில், பாதுகாப்பாக இடம் பெயர இந்த வசதி மிகுந்த உதவியாக இருக்கும். இதுதவிர, பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு என தனி கோச்சுகளும் ஒதுக்கப்பட்டிருக்கும்.

ரயில்

இருக்கையை மடிச்சுக்கலாம்

கூடுதல் சிறப்பாக இந்த ரயிலில் சில இருக்கைகளை மடித்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதிகப்படியானோர் நின்று பயணிக்க ஏதுவாக இந்த வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த ரயில்களை நிறுத்தி வைப்பதற்காக துஹாய் ரயில் நிலையத்தில் ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தயார் நிலையில் இருக்கின்றது. 13 ரயில்கள் ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்க முடியும். முதற்கட்டமாக 13 ரேபிட் ரயில்களே காசியாபாத்தில் பயன்படுத்தப்பட உள்ளன.

டெல்லிக்கும் தயாராகுது

அதேநேரத்தில், டெல்லி மீரட் இடையிலும் விரைவு ரயிலை இயக்குவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இந்த வழித்தடம் முழுமையாக தயாரான பின்னர் மொத்தம் 30 ரேபிட் ரயல்கள் இந்த தடத்தில் இயக்கப்படும். டெல்லி - மீரட் இடையில் விரைவு ரயிலுக்காக தயார் செய்யப்பட்டு வரும் வழித்தடம் 2025 ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை மூன்று கட்டங்களாக ரயில்வேத்துறை கட்டமைத்து வருகின்றது.

30 ஆயிரத்து 274 கோடி ரூபாய் மதிப்பில் விரைவு ரயிலுக்கான வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மத்திய மற்றும் உபி மாநில அரசின் கூட்டு முயற்சியிலேயே இது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்திற்காக உபி மாநில அரசு மேலும் 1,326 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. மக்களின் விரைவான பயணத்திற்கு உதவும் விதமாக இரு அரசுகளும் விரைவில் ரயில் அதி-தீவிரம் காண்பித்து வருகின்றன.

காற்று மாசு குறையும்

குறிப்பாக, தற்போது பெருமளவில் அதிகரித்துக் காணப்படும் காற்று மாசைக் கட்டுப்படுத்துவதும் அரசின் முக்கிய இலக்காக இருக்கின்றது. இந்த புதிய அதி விரைவு ரயில்களால் தனி நபர் வாகன பயன்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே விரைவு ரயில் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது முழுமையாக பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில் கிமீட்டருக்கு 2 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரைவேட் நிறுவனம்தான் பராமரிக்கபோகுது

தனியார் ஏஜென்சியே இந்த ரயில் சேவையை பரமாரிக்க இருக்கின்றது. இந்த கட்டணத்தை உயர்த்த ஏஜென்சிக்கு உரிமை வழங்கப்படாது என இப்போது அரசுகள் தெரிவித்த வண்ணம் இருக்கின்றன. இதேபோல், தற்போது பயன்பாட்டில் இருக்கும் மெட்ரோவைப் போலவே விரைவு ரயில்களுக்கான கட்டணத்தையும் நீதிபதி தலைமையிலான குழுவே நிர்ணயிக்க இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 14, 2023, 17:40 [IST]
English summary
Rapid rail gets amenities similar to an airplane
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+