ஆட்டோ ரிக்ஷாக்களில் சீட்பெல்ட்? யாரும் யோசிக்காத விஷயத்தை செயல்படுத்தும் ராபிடோ!!
தனது சேவையில் உள்ள ஆட்டோகளில் சீட்பெல்ட்களை அறிமுகம் செய்யும் திட்டத்தில் பிரபல டாக்ஸி இணையத்தளமான ராபிடோ (Rapido) உள்ளது. இதுகுறித்தும், இதனால் கிடைக்க பெறும் நன்மைகள் குறித்தும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
டாக்ஸி இணையத்தளங்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகளவில் உயர்ந்துள்ளது. இந்த வரிசையில், சேவையை துவங்கிய நிறுவனம் தான் ராபிடோ ஆகும். பைக் மற்றும் ஆட்டோகள் மூலமாக டாக்ஸி சேவையை வழங்கி வரும் இந்த நிறுவனம், குறிப்பாக பைக் டாக்ஸி மூலமாக நாடு முழுவதும் பிரபலமாகி உள்ளது. அதிலிலும் குறிப்பாக, ராபிடோ செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெங்களூரில் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் தனது சேவையின் கீழ் இயங்கும் ஆட்டோகளில் சீட்பெல்ட் வசதியை கொண்டுவரும் திட்டத்தில் உள்ளதாக ராபிடோ அறிவித்துள்ளது. ராபிடோ நிறுவனம் தேசிய அளவில் பயணிகள் பாதுகாப்பு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களில் ஒரு பகுதியாகவே ராபிடோ ஆட்டோகளில் சீட் பெல்ட்கள் கொண்டுவரப்படுகின்றன. முதலாவதாக இந்த வசதி பெங்களூரில் இயங்கும் ராபிடோ ஆட்டோகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
விபத்துகளின் போதும், திடீர் பிரேக்குகளின் போதும் பயணிகளுக்கு ஏற்படும் காயங்களை சீட்பெல்ட்கள் தவிர்க்கும் என ராபிடோ நம்புகிறது. இந்த சீட்பெல்ட் திட்டத்துடன், தனது சேவையின் கீழ் பணியாற்றும் டிரைவர் கேப்டன்களை பற்றிய விபரங்களையும் கூடுதலாக சேகரிக்க ராபிடோ முடிவெடுத்துள்ளது. அதாவது, தற்போது உள்ள நடைமுறையை காட்டிலும் கூடுதலாக 4 சுய விபரங்களை ராபிடோவில் டிரைவர் கேப்டன்களாக இணைவோர் வழங்க வேண்டும்.
இதுவும் பயணிகளின் பாதுகாப்பு கருதியே கொண்டுவரப்படுகிறது. தங்களது டாக்ஸி சேவையில் பணியாற்றும் பெண் ரைடர்களை பற்றிய விபரங்கள் அவர்களது பாதுகாப்பு கருதி மொபைல் செயலியில் இருந்து மறைப்பதற்கான மென்பொருளை பயன்படுத்தி வருவதாக இந்த நிறுவனம் கூறுகிறது. ராபிடோவின் துணை இயக்குனர் பவன் குண்டுபல்லி கூறுகையில், "ராபிடோ மொபைல் செயலியின் பாதுகாப்பு வசதிகள் பயணிகளை பாதுகாப்பாக அவர்களது பயணம் முழுவதும் உணர வைக்கும்" என்றார்.

இருப்பினும், தற்போது கூடுதலாக மேலும் சில பாதுகாப்பு வழிமுறைகளை தனது மொபைல் செயலியில் ராபிடோ கொண்டுவந்துள்ளது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், ரைடர்களுக்கு கட்டாய பாதுகாப்பு பயிற்சி, தொடர் வாகன பராமரிப்பு சோதனைகள் மற்றும் ரியல்-டைம் ரைட் டிராக்கிங் உள்ளிட்டவற்றை சொல்லலாம். வாடிக்கையாளர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதும், சாலை பாதுகாப்பு பயிற்சிகளும் அனைத்து ராபிடோ டிரைவர்களுக்கும் கட்டாய முறையில் கற்பிக்கப்படுகிறது.
குறிப்பாக, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மதுரை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது எந்த அளவிற்கு கடினமானது என்பதை டிரைவர்களுக்கு புரிய வைக்கும் செயல்களிலும் ராபிடோ கடந்த காலங்களில் இருந்து ஈடுப்பட்டு வருகிறது. மேலும், நகர போக்குவரத்து போலீஸார்கள் உடன் இணைந்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ராபிடோ ஈடுப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சாலை பாதுகாப்பு விஷயத்தில் முனைப்புடன் இருக்கும் ராபிடோ தனது சேவையில் உள்ள ஆட்டோகளில் சீட்பெல்ட்டை கொண்டு வருவது ஆச்சிரியமில்லை. ஆனால் ஆட்டோவில் சீட்பெல்ட் என்பது நிச்சயமாக மக்களுக்கு புதுமையான உணர்வை வழங்கும். காரை விட ஆட்டோ ரிக்ஷாவிற்கே சீட்பெல்ட் கட்டாயம் என்பது, ஆட்டோவில் பயணித்துள்ள எவரொருவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து ஆகும்.


Click it and Unblock the Notifications








