டிரைவர் பார்டனர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்த ரேபிடோ! கோவிட்19 காலத்தில் மிகுந்த உதவியாக இருக்கபோகுது!

தனது டிரைவர் பார்ட்னர்களுக்கு வைரசின் இக்கட்டான காலத்தில் உதவும் விதமாக பல்வேறு சிறப்பு திட்டங்களை ரேபிடோ அறிவித்துள்ளது.

டிரைவர் பார்டனர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்தது ரேபிடோ! கோவிட்-19 காலத்தில் இது மிகுந்த உதவியாக இருக்கபோகுது!!

பைக் கால் டாக்சி சேவை நிறுவனமான ரேபிடோ, அதன் கேப்டன்களுக்காக (டிரைவர் பார்ட்னர்கள்) பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்திருக்கின்றது. 'தலைக்கவச கதாநயகன்களுக்கான உதவி' (Help For Helmet Heroes) என்ற பெயரில் நிறுவனம் சிறப்பு திட்டங்களை அறிவித்திருக்கின்றது.

டிரைவர் பார்டனர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்தது ரேபிடோ! கோவிட்-19 காலத்தில் இது மிகுந்த உதவியாக இருக்கபோகுது!!

காப்பீடு, தடுப்பூசி, சிறப்பு மருத்துவ ஆலோசனை, கடன் திட்டம், மருத்துவத்தில் சலுகை என ஒட்டுமொத்தமாக 7 விதமான சிறப்பு திட்டங்களை டிரைவர் பார்ட்னர்களுக்காக ரேபிடோ அறிவித்திருக்கின்றது. கோவிட்-19 வைரஸ் காலத்தில் உதவும் வகையில் இச்சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவர் பார்டனர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்தது ரேபிடோ! கோவிட்-19 காலத்தில் இது மிகுந்த உதவியாக இருக்கபோகுது!!

இதன் வாயிலாக சுமார் 1.5 மில்லியன் டிரைவர் பார்ட்னர்களும், அவர்களின் குடும்பத்தாரும் பலனடைவர் என நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது நிறுவனத்தின் வாடகை பைக் டாக்சி சேவை நாட்டின் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்பட்டு வருகின்றது.

டிரைவர் பார்டனர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்தது ரேபிடோ! கோவிட்-19 காலத்தில் இது மிகுந்த உதவியாக இருக்கபோகுது!!

மேலும், இந்த சேவையில் பல ஆயிரக் கணக்கானோர் தங்களை இணைத்து பணி புரிந்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் பலர் உடலாலும், மனதாலும் பெரும் சோகத்தில் உறைந்திருக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டே ரேபிடோ தலைக்கவச கதாநயகன்களுக்கான உதவி எனும் சிறப்பு திட்டத்தை நாட்டில் தொடங்கி வைத்திருக்கின்றது.

டிரைவர் பார்டனர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்தது ரேபிடோ! கோவிட்-19 காலத்தில் இது மிகுந்த உதவியாக இருக்கபோகுது!!

திட்டத்தின் நோக்கம்:

கோவிட் காப்பீடு:

ரூ. 117 என்ற தொடக்க பிரீமியத்தில் கோவிட்19 வைரசுக்கான காப்பீடு திட்டத்தை ரேபிடோ அதன் டிரைவர் பார்ட்னர்களுக்கு அறிவித்திருக்கின்றது. இக்காப்பீட்டின் வாயிலாக ரூ. 2 லட்சம் முதல் 3 லட்ச ரூபா வரையிலான பலனை நம்மால் பெற முடியும். இந்த காப்பீடானது டிரைவர் பார்ட்னர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தார்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவர் பார்டனர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்தது ரேபிடோ! கோவிட்-19 காலத்தில் இது மிகுந்த உதவியாக இருக்கபோகுது!!

தள்ளுபடி விலையில் மருந்து:

அப்போலோ பார்மசிஸ் நிறுவனத்துடன் இணைந்து தள்ளுபடி விலையில் மருந்துகளை வழங்கவும் ரேபிடோ திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள எந்தவொரு அப்போலோ பார்மஸியிலும் ரேபிடோ அடையாள அட்டையைக் காண்பித்து இந்த சலுகையைப் பெறலாம். ஐந்து முதல் 15 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பொருட்கள் (மருந்து மற்றும் இன்னும் சில மருத்துவ பொருட்கள்) வழங்கப்பட இருக்கின்றன.

டிரைவர் பார்டனர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்தது ரேபிடோ! கோவிட்-19 காலத்தில் இது மிகுந்த உதவியாக இருக்கபோகுது!!

கோவிட் கால கடன்:

நிதி நிறுவனங்களுடன் இணைந்து தங்களின் பார்ட்னர்களுக்கு நிதியுதவி (கடன்) வழங்கவும் ரேபோடோ திட்டமிட்டுள்ளது. 1.5 சதவீதம் எனும் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட இருக்கின்றது. அதிகபட்சம் ஒரு டிரைவர் பார்ட்னரால் ரூ. 8 ஆயிரம் வரை மட்டுமே கடன் பெற முடியும் என்பதுகுறிப்பிடத்தகுந்தது. இதனை மூன்று மாத தவணையாக செலுத்த வேண்டும்.

டிரைவர் பார்டனர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்தது ரேபிடோ! கோவிட்-19 காலத்தில் இது மிகுந்த உதவியாக இருக்கபோகுது!!

பயணங்களை ரத்து செய்யும் எண்ணிக்கை அதிகரிப்பு:

முன்பு வாடிக்கையாளர்களின் புக்கிங்கை இரண்டு முறை மட்டுமே ரத்து செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. தற்போது இதனை ஐந்தாக ரேபிடோ அதிகரிக்கச் செய்துள்ளது. ஆகையால், குறிப்பிட்ட பயணத்தை (புக்கிங்கை) விரும்பவில்லை என்றால் தொடர்ச்சியாக ஐந்து முறை ரத்து செய்து கொள்ளலாம்.

டிரைவர் பார்டனர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்தது ரேபிடோ! கோவிட்-19 காலத்தில் இது மிகுந்த உதவியாக இருக்கபோகுது!!

மின்சார வாகனம் வாடகைக்கு:

நீண்ட காலம் மற்றும் நற்மதிப்பு பெற்ற பார்ட்னர்கள் அடிப்படையில் அவர்களுக்கு மின்சார இருசக்கர வாகனங்களை வாடகைக்கு வழங்க இருப்பதாகவும் ரேபிடோ அறிவித்துள்ளது.

டிரைவர் பார்டனர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்தது ரேபிடோ! கோவிட்-19 காலத்தில் இது மிகுந்த உதவியாக இருக்கபோகுது!!

தொடர்ந்து, பைக் கோளாறு மற்றும் சர்வீஸில் உதவி வழங்க இருப்பதாகவும் ரேபிடோ தெரிவித்திருக்கின்றது. இந்த திட்டம் நிச்சயம் தனது ரைடர் பார்டனர்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் பெரும் உதவியாக இருக்கும் என நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rapido Launches India’s Most Comprehensive Care Program For Its Driver Partners. Read In Tamil.
Story first published: Saturday, June 26, 2021, 15:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X