ஓலா, உபேருக்கு ஆப்பு! ரேபிடோவும் களத்துல இறங்கிட்டாங்க! ரோட்டுல இனி இந்த காரை நீங்க பாக்கலாம்!

ரேபிடோ நிறுவனம் ஓலா உபேருக்கு போட்டியாக கேப் சேவையை துவங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தனியார் கேப் சேவை பிரபலமாகி வரும் நிலையில் ராபிடோ நிறுவனமும் அதில் இணைந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் ஆன்லைன் கேப் சேவை பிரபலமாகி வருகிறது. பயணிகள் தங்கள் வீட்டில் இருந்தே கேபை புக் செய்து அதில் ஏறி தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லலாம், இதற்கு ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி விடலாம் என்பது உள்ளிட்ட ஏகப்பட்ட வசதிகளை இந்த கேப் சேவையில் இருப்பதால் மக்கள் பலன் மத்தியில் இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

rapdio cab launch

சென்னை,பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் இந்த கேப் சேவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் பலர் ஆட்டோ அல்லது அங்கிருக்கும் காரை புக் செய்து செல்வதற்கு பதிலாக இந்த கேப் சேவையை தான் அதிகம் விரும்புகின்றனர். தற்போது இந்த கேப் சேவையில் ஓலா மற்றும் உபேர் ஆகிய நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ராப்பிடோ என்ற நிறுவனம் பைக் டாக்ஸி சேவையை வழங்கி வருகிறது. பைக் டாக்ஸி என்பது ஒரு பைக் ஓட்டுநர் தன்னுடன் சக பயணியை ஏற்றிக்கொண்டு அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று அவரை டிராப் செய்வதன் மூலம் அவருக்கு பணம் கிடைக்கும். இந்த பைக் டாக்ஸி சேவை தான் ரேபிடோ நிறுவனம் மிகப்பெரிய அளவில் செய்து வருகிறது.

ஆனால் இதற்கு முறையான அனுமதி இல்லாத நிலையில் ஆட்டோ சேவைகளையும் தன் வசப்படுத்தியது. ராப்பிடோ ஆட்டோக்கள் கூட பெருநகரங்களில் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரேபிடோ நிறுவனம் கேப் சேவையில் தனது கால் அடித் தடத்தை எடுத்து வைக்க முடிவு செய்துள்ளது. ஓலா உபேர் ஆகிய நிறுவனங்கள் எப்படி இந்தியாவில் கேப்ஸ் சேவையை வழங்குகிறதோ அதேபோல ராபிடோ நிறுவனமும் கேப் சேவையை வழங்க திட்டமிட்டு வருகிறது.

இதற்கான சோதனை முயற்சியாக தற்போது ஹைதராபாத் நகரில் தனது கேப் சேவையை துவங்கி உள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. மேலும் இந்த சேவையை அந்நிறுவனம் தொடர்ந்து சோதனை செய்து அதில் அந்நிறுவனத்திற்கு திருப்திகரமான முடிவுகள் கிடைக்கும் பட்சத்தில் இதை மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதனால் இந்தியாவில் விரைவில் போட்டியாக ரேபிடோ கேப் சேவையும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக பெருநகரங்களில் மட்டும் விரிவடையும் இந்த சேவை அடுத்ததாக டயர் 2 நகரங்களிலும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த கேப் சேவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏற்கனவே ஓலா மற்றும் உபேர் நிறுவனங்கள் இந்த கேப் சேவை வழங்கி வரும் நிலையில் அதில் ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்து வருவது நமக்கு தெளிவாக தெரிகிறது .இந்த கேப் சேவையில் வாகனம் ஓட்டும் டிரைவர்களுக்கும் அதில் பயணிக்கும் பயணிகளுக்கும் பெரிய அளவில் லாபம் இருப்பதாக தெரியவில்லை. பல டிரைவர்கள் வேறு வழியில்லாமல் இந்த கேப் சேவையில் இணைந்து வாகனம் ஓட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து அவர்கள் டிரைவர்களை சேர்க்கும் திட்டத்தை டிரைவர்களுக்கும் பயணிகளுக்கும் அதே நேரம் நிறுவனத்திற்கும் லாபமாக இருக்கும்படி வடிவமைத்தால் நிச்சயம் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களை தாண்டி பல கேப் ஓட்டுநர்கள் இந்த ரேபிடோ சேவையில் இணைய வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வழங்கப்படும் ஆன்லைன் கேப் சேவைகள் முறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. இதை அரசு தலையிட்டு அவ்வப்போது சில சட்ட விதிமுறை வகுத்தாலும் அது சரியாக பின்பற்றப்படுவதில்லை. இதனால் மத்திய மாநில அரசுகள் இந்த சேவையை ஒழுங்குபடுத்த முயற்சி செய்ய வேண்டும்.

Article Published On: Sunday, October 29, 2023, 7:00 [IST]
English summary
Rapido set to introduce cab services heres is the plan
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+