சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...!

ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் ரக விமானத்தை நடிகர் ஒருவர் வாங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வங்கிய நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

நம்ம ஊரில் உள்ள பெரும்பாலான நடிகர்கள் தங்களது வருமானத்தின் பெரும் பகுதியை ஆடம்பரமான வாழ்கைக்கு செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்தவகையில், அவர்கள் சினிமாவில் நடிக்கும் வாழ்க்கையை நிஜ உலகத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் விதமாக சொகுசு பங்களா, சொகுசு கார், ஆடம்பர உடை என பல்வேறு வகையில் பணத்தை வீணடிப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வங்கிய நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

அதிலும் சிலர் ஒருவருக்கொருவர் போட்டியாக நினைத்து, தன் சக நடிகருக்கு ஈடான அல்லது அதற்கும் அதிகமான செலவில் வாழ வேண்டும் என்ற போட்டியில், அவர்களுக்கு எதிராக பெரும் பொருட்செலவிலான பல்வேறு சொகுசு வசதிகளை மேற்கொள்வதில் குறிக்கோளாக இருந்து வருகின்றனர். இதுபோன்ற சூழல் தற்போதைய காலக்கட்டத்தில் அதிகரித்து வருகின்றது.

சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வங்கிய நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

இந்நிலையில், பிரபல ஹாலிவுட் திரையுலகின் முக்கிய புள்ளியான ராப்பர் டிரேக், தனது சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்பிலான 767-300எஃப் ரகத்திலான போயிங் விமானத்தை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விமானத்தை தனக்கென பிரத்யேக டிசைனில் வடிவமைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வங்கிய நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

அபுரே ட்ரேக் கிரஹாம் (Aubrey Drake Graham) என்ற இவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர் ராப் பாடல் இசைப்பதில் மிகவும் பிரபலமானவர். இதுமட்டுமின்றி, பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பல அவதாரங்களை மேற்கொள்ளும், மல்டி டேலண்ட் நபராக அவர் வளம் வந்துக்கொண்டிருக்கிறார்.

சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வங்கிய நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமாக திகழும் இவர், தனக்கென பயன்படுத்திக்கொள்ளும் வகையில், 30 இருக்கைகளை மட்டுமே கொண்டுள்ள, போயிங் ரக விமானத்தை வாங்கியுள்ளார். இந்த 30 இருக்கைகளையும் தனது வசதிக்கேற்ப, பிரத்யேமாக வடிவமைத்துள்ளார். மேலும், இந்த விமானத்தில் பல்வேறு சொகுசு வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளார்.

MOST READ: முகேஷ் அம்பானி எப்படி வேலைக்கு செல்வார் தெரியுமா? ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பாதுகாப்பு ரகசியங்கள்...

சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வங்கிய நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

அந்தவகையில், விமானத்தின் இன்டீரியர் ராயல் லுக்கில், 5 நட்சத்திர சொகுசு விடுதியைப் போன்று உருவாக்கியுள்ளார். இத்துடன், இந்த விமானத்தின் மேற்பரப்பில், சில பிரத்யேக ஸ்டிக்கர்களையும் அவர் ஒட்டியுள்ளார். அது அவரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் லோகோ (சின்னம்) ஆகும். அவ்வாறு, விமானத்தின் வால் பகுதி மற்றும் முன்பக்க பக்கவாட்டு பகுதிகளில் இரு கைகள் கூப்பி வணங்குவதைப் போன்ற வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது.

MOST READ: உலக கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ கார்... இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நிஸான் கிக்ஸ்

சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வங்கிய நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

இந்த விமானத்தைப் பயன்பாட்டை அடுத்து நிறுத்தி வைக்கும் விதமாக, கனடா நாட்டு விமான நிலையங்களுடம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். ஆகையால், விமானம் பயன்பாட்டை அடுத்து மற்ற வேலைகளில் கனடியன் ஏர்லைன் கார்கோஜெட் நிறுத்தி வைக்க தனியாக இடம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

MOST READ: இந்தியாவிற்கு மோடி செய்யப்போகும் நல்ல காரியம் இதுதான்... அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது...

சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வங்கிய நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

இதுகுறித்த வீடியோவை ட்ரேக் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோதான் ஹாலிவுட் திரையுலகின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. டிரேக்கின் இந்த செயலானது, உள்நாட்டு வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

View this post on Instagram

A post shared by champagnepapi (@champagnepapi) on May 10, 2019 at 3:56am PDT

இதற்கு முன்னதாகவும் இதுபோன்று, பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. முக்கியமாக அண்மையில், ரூ. 132 கோடி மதிப்பிலான லா வோய்டர் நோய்ர் சூப்பர் காரை, போர்ச்சுக்கலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ வாங்கியதாக தகவல்கள் பரவின. ஆனால், இந்த தகவலை அந்த கார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வங்கிய நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

இவ்வாறு, பல்வேறு விஷயங்களை நாம் கூறிக் கொண்ட போகலாம், அதற்கேற்ப திரையுலகம் மற்றும் தொழிலதிபர்கள் பலர் அவர்களின் வாழ்க்கை பயணத்தை ஆடம்பரமாக மேற்கொள்ள பெருமளவிலான பணத்தை செலவழித்து வருகின்றனர். இதையே சந்தோஷம் என்றும் அவர்கள் நம்பி வருகின்றனர். அதேசமயம், ஒரு வேலை உணவுகூட இல்லாமல் அவதிக்குள்ளாகும் மக்களும் இந்த உலகில் இருக்கிறார்கள் என்பது நாம் மறுக்க முடியாத உண்மை.

Most Read Articles

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rapper Drake Unveils His Private Boeing. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more