நடுவுல எங்குமே நிறுத்தல! குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்! நாடே பாராட்டுது

கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தையை மீட்பதற்காக ரயில் ஒன்று எங்குமே நிறுத்தாமல் இயக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடுவுல எங்குமே நிறுத்தல... குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்! நாடே பாராட்டுது!

நாட்டிலேயே முதல் முறையாக கடத்தப்பட்ட குழந்தையை மீட்பதற்காக ரயில் ஒன்று எங்கும் நிற்கப்படாமல் இயக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஒட்டு மொத்த நாட்டையுமே ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம், லலித்பூரில் இருந்து போபால் இடையே பயணிக்கும் ராப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயிலே நிற்காமல் இயக்கப்பட்டிருக்கின்றது.

நடுவுல எங்குமே நிறுத்தல... குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்! நாடே பாராட்டுது!

குழந்தையைக் கடத்தியதாகக் கூறப்பட்ட நபர் தற்போது ரயில்வே பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். மேலும், அவரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 3 வயது குழந்தையும் பாதுகாப்பாக பெற்றோரிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடுவுல எங்குமே நிறுத்தல... குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்! நாடே பாராட்டுது!

கடத்தப்படுவதற்கு முன்பு, அக்குழந்தை அவரது பெற்றோர்களுடன் லலித்பூர் ரயில் இருந்திருக்கின்றது. அப்போதே முகம் தெரியாத மர்ம நபர் குழைந்தையைக் கடத்தியிருக்கின்றார். குழந்தைக் கடத்தப்பட்டதை உணராத பெற்றோர்கள், அக்குழந்தைக் காணவில்லை என நினைத்து ரயில் நிலையம் முழுவதிலும் தேடினர். ஆனால், குழந்தைக் கிடைக்கவில்லை. எனவே லலித்பூர் ரயில்வே போலீஸாரிடத்தில் குழந்தைக் காணாமல் போனதைப் பற்றிப் தகவலளித்தனர்.

நடுவுல எங்குமே நிறுத்தல... குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்! நாடே பாராட்டுது!

இதற்கு உடனடி பதிலளிக்கும் விதமாக ரயில்வே போலீஸார், ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து சிசிடிவி கேமிராக்களையும் ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் ஒருவர் பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு புறப்பட தயாராக இருந்த ராப்திசாகர் ரயிலில் ஏறியது தெரிய வந்தது. குழந்தையை உடனடியாக மீட்டாக வேண்டும் என நினைத்த ரயில்வே போலீஸார், உடனடியாக போபால் ரயில்வே காவல் படையினருக்கு தகவல் அளித்தனர்.

நடுவுல எங்குமே நிறுத்தல... குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்! நாடே பாராட்டுது!

தொடர்ந்து, ரயில் பைலட்டைத் தொடர்புக் கொண்டு, ரயிலை எங்கும் நிறுத்த வேண்டாம், அடுத்ததாக போபாலில் நிறுத்துங்கள் என அறிவுறுத்தினர். குழந்தை விவகாரம் என்பதால் ராப்திசாகர் பைலட்டும் லலித்பூருக்கு அடுத்து எங்குமே நிறுத்தாமல் ரயிலை இயக்கினார். இதற்காக, பிற ரயில்கள் முன்கூட்டியே நிறுத்தப்பட்டு, ராப்தி சாகர் ரயிலுக்காக சிக்னல்கள் அனைத்தும் திறந்து வைக்கப்பட்டன.

நடுவுல எங்குமே நிறுத்தல... குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்! நாடே பாராட்டுது!

எனவே, அந்த ரயில் இடையில் எங்குமே நிற்காமல் போபாலை வந்தடைந்தது. அங்கு ஏற்கனவே பட்டாளமாக காத்திருந்த ரயில்வே போலீஸ் படையினர், கடத்தல்காரன் எந்த வழியிலும் தப்பித்துவிடக்கூடாது என்பதற்காக அனைத்து பாதைகளையும் சுற்றி வளைத்து நின்றுக் கொண்டிருந்தனர். தொடர்ந்து, திருடன் ஏறியிருந்த ரயில் பெட்டியின் வாசலிலேயே நின்று அதிரடியாகக் கைது செய்தனர். குழந்தையையும் பத்திரமாக மீட்டனர்.

நடுவுல எங்குமே நிறுத்தல... குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்! நாடே பாராட்டுது!

இந்திய ரயில்வே வரலாற்றிலேயே கடத்தப்பட்ட ஓர் குழந்தையை மீட்பதற்காக இந்திய ரயில்வேத்துறை இத்தகைய செயலைச் செய்வது இதுவே முதல் முறையாகும். லலித்பூர்-போபால் இடையே ராப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயில் எந்த ரயில் நிலையத்திலும் நிற்காது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம், இந்த இரு ரயில் நிலையங்களுக்கும் இடையே சுமார் 201 கிமீ இடைவெளி உள்ளது.

நடுவுல எங்குமே நிறுத்தல... குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்! நாடே பாராட்டுது!

இம்மாதிரியான சூழ்நிலையில் பிற ரயிலின் நுழைவிற்காக (கிராஸிங்கிற்காக) ராப்திசாகர் நிறுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன. இதைப் பயன்படுத்தி திருடன் தப்பிக்க நேரிடலாம். எனவேதான், இடையில் ரயில் எங்குமே நிற்காத வண்ணம் மற்ற ரயில்கள் தடுக்கப்பட்டு தொடர்ச்சியாக ராப்திசாகர் இயங்கும் வகையில் வழி வகைச் செய்யப்பட்டது. மேலும், திருடன் தப்பித்துவிடக் கூடாது என்பதற்காக உடனடியாக அனைத்து போலீஸாரும் தயார் நிலையில் சூழ வைக்கப்பட்டது.

நடுவுல எங்குமே நிறுத்தல... குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்! நாடே பாராட்டுது!

இவ்வாறே மூன்று வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட மூன்றே மணி நேரங்களில் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றது. வழக்கமான நேரங்களில் லலித்பூரில் இருந்து போபாலை வந்தடைய ராப்திசாகர் ரயில் சுமார் 3.15 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும். ஆனால், குழந்தையை மீட்பதற்காக அதி வேகத்தில் எங்கும் நிற்காமல் இயக்கப்பட்டிருக்கின்றது.

நடுவுல எங்குமே நிறுத்தல... குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்! நாடே பாராட்டுது!

எனவேதான் இந்த நிகழ்வு ஒட்டு மொத்த நாட்டு மக்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. மேலும் பலர் ரயில்வே போலீஸார் மற்றும் ரயிலை இயக்கிய பைலட்டிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கின்றனர். மூன்று நாட்கள் தொடர்ந்து பயணிக்கும் இந்த (ராப்திசாகர் எக்ஸ்பிரஸ்) ரயில், உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம் வரை இயக்கப்படுகின்றது. இதன் ஒட்டுமொத்த பயண தூரம் 3,253 கிலோமீட்டர்கள் ஆகும்.

நடுவுல எங்குமே நிறுத்தல... குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்! நாடே பாராட்டுது!

இந்த ரயிலையே கொள்ளையன் குழந்தையுடன் தப்பிப்பதற்காக பயன்படுத்தியிருக்கின்றார். ஆனால், அவருடைய முயற்சி ரயில்வே போலீஸாரின் உடனடி நடவடிக்கைகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் தங்களது உடைமைகள் மற்றும் குழந்தைகளை பெற்றோர்கள்தான் பாதுகாப்பாக காத்துக்கொள்ள வேண்டும் என இந்த சம்பவம் பாடம் புகட்டியுள்ளது. இதுகுறித்து பலமுறை விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டும் அதை யாரும் கடைபிடிக்காத சூழலேக் காணப்படுகின்றது. இதன் விளைவாக இந்த கடத்தல் சம்பவம் தற்போது அரங்கேறியிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rapti Sagar Train Made To Run Non-Stop To Nab Kidnapper. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X