வீடியோ வைரல் ஆனதால் வாகன ஓட்டிக்கு ஏற்பட்ட சோகம்... என்ன ஆச்சுனு தெரியுமா?

அபாயகரமான முறையில் பைக் ஓட்டிய வீடியோ வைரல் ஆனதால், வாகன ஓட்டி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வீடியோ வைரல் ஆனதால் வாகன ஓட்டிக்கு ஏற்பட்ட சோகம்... என்ன ஆச்சுனு தெரியுமா?

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை அதிகாரிகள் தற்போது தீவிரமாக கண்காணிக்க தொடங்கியுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் மூலமும், சமூக வலை தளங்களில் பதிவிடப்படும் வீடியோக்கள் மூலமும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் கேரளாவை சேர்ந்த இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ வைரல் ஆனதால் வாகன ஓட்டிக்கு ஏற்பட்ட சோகம்... என்ன ஆச்சுனு தெரியுமா?

பைக்கை அவர் அபாயகரமான முறையில் ஓட்டும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியானது. இதன் அடிப்படையில் அவரது ஓட்டுனர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. Green Punk46 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஒரு சிலர் பைக்கில் பயணம் செய்வதை இந்த வீடியோ நமக்கு காட்டுகிறது.

வீடியோ வைரல் ஆனதால் வாகன ஓட்டிக்கு ஏற்பட்ட சோகம்... என்ன ஆச்சுனு தெரியுமா?

இதில் மற்ற பைக் ஓட்டிகள் அனைவரும் லேன் விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனர். ஆனால் அவர்களில் ஒருவர் மட்டும் பைக்கை அபாயகரமான முறையில் ஓட்டினார். எனவே அவர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சமூக வலை தளங்களில் வெளியாகும் வீடியோக்களின் அடிப்படையில் வாகன ஓட்டிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இது முதல் முறை கிடையாது.

வீடியோ வைரல் ஆனதால் வாகன ஓட்டிக்கு ஏற்பட்ட சோகம்... என்ன ஆச்சுனு தெரியுமா?

குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் மீது கூட சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் அபாயகரமான முறையில் பைக் ஓட்டும் வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகியிருந்தது. இதன் அடிப்படையில் அவருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அவர் தலை கவசம் அணியாமல் சாலையில் பைக் மூலம் ஸ்டண்ட் செய்திருந்தார்.

வீடியோ வைரல் ஆனதால் வாகன ஓட்டிக்கு ஏற்பட்ட சோகம்... என்ன ஆச்சுனு தெரியுமா?

இந்த வரிசையில் கேரளாவில் பைக் ரைடர் அபாயகரமான முறையில் பைக் ஓட்டிய வீடியோவும் சமூக வலை தளங்களில் வைரலானது. எனவே அதிகாரிகள் உடனடியாக அவருக்கு அபராதம் விதித்ததுடன், ஓட்டுனர் உரிமத்தையும் சஸ்பெண்ட் செய்தனர். ஆனால் அவருக்கு எவ்வளவு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது? என்பது சரியாக தெரியவில்லை.

வீடியோ வைரல் ஆனதால் வாகன ஓட்டிக்கு ஏற்பட்ட சோகம்... என்ன ஆச்சுனு தெரியுமா?

சாலையில் அபாயகரமான முறையில் வாகனங்களை ஓட்டுவது தவறானது. தற்போதைய நிலையில் சூப்பர் பைக்குகளில் ஸ்டண்ட் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதில், நீங்களும் ஒருவர் என்றால், பாதுகாப்பான இடங்களில் ஸ்டண்ட் செய்யலாம். அப்போது தலை கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பது அவசியம்.

வீடியோ வைரல் ஆனதால் வாகன ஓட்டிக்கு ஏற்பட்ட சோகம்... என்ன ஆச்சுனு தெரியுமா?

அதை விடுத்து விட்டு, பொது சாலையில் ஸ்டண்ட் செய்வதோ, மற்றவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டுவதோ தவறானது. இது உங்களுக்கு மட்டுமல்லாது, சாலையில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். இதை குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. வாகன ஓட்டிகளான நாம் போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றுவதன் மூலம் அரசின் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவது அவசியம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rash Driving: RTO Suspends Biker's Driving License. Read in Tamil
Story first published: Tuesday, April 27, 2021, 13:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X