ஒரு காலத்தில் தமிழ்நாட்டை கலக்கிய நடிகையின் மகளா இது! சின்ன வயசுலயே ஒன்னே கால் கோடி ரூபா கார்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வரும் கார்களில் ஒன்று லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender). மிகவும் விலை உயர்ந்த சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரக காரான இது, திரையுலக நட்சத்திரங்கள் அதிகமாக விரும்பி பயணிக்கும் வாகனம் ஆகும். குறிப்பாக பாலிவுட் திரையுலகை சேர்ந்த பலரும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வைத்துள்ளனர். அமிதாப் பச்சன் (Amitabh Bachchan) மற்றும் அர்ஜூன் கபூர் (Arjun Kapoor) போன்ற நட்சத்திரங்களை இதற்கு உதாரணமாக கூற முடியும்.
பொது இடங்களுக்கு லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் வருவதை பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் விரும்புகின்றனர். இந்த வரிசையில் வளர்ந்து வரும் இளம் பாலிவுட் நடிகை ஒருவர் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் வந்து இறங்கிய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் நாம் காணும் நபர், 19 வயதே ஆன ரஷா தடானி (Rasha Thadani) ஆவார். தற்போதைய நிலையில் ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டுமே ரஷா தடானி நடித்துள்ளார். ஆஷாத் (Azaad) என்ற அந்த திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் வெளியானது. ஆனால் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரஷா தடானி சமூக வலை தளங்களில் மிகவும் பிரபலம்.
ஏனெனில் இவர் பிரபல பாலிவுட் நடிகையான ரவீனா டான்டனின் மகள் (Raveena Tandon's Daughter) ஆவார். பாலிவுட் நடிகையாக இருந்தாலும் 1994ம் ஆண்டில் வெளிவந்த சாது, 2001ம் ஆண்டு வெளிவந்த ஆளவந்தான் ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் ரவீனா டான்டன் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே தமிழ்நாட்டிலும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது அவரது மகள் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் வந்து இறங்கிய வீடியோ மும்பை (Mumbai) நகரில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மும்பையில் அது என்ன இடம்? என்பது உறுதியாக தெரியவில்லை. அதேபோல் அவர் பயன்படுத்தியது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் எந்த வேரியண்ட்? என்பதும் சரியாக தெரியவில்லை.
இருப்பினும் அது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் 2.0 110 X-Dynamic HSE வேரியண்ட்டாக இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். தற்போதைய நிலையில் 1.04 கோடி ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-Showroom Price) இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 1.25 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். மிகவும் விலை உயர்ந்த இந்த காரில், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 296 பிஹெச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் என இந்த காரில் ஏராளமான வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரஷா தடானி பயன்படுத்திய லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார், ஆஃப் ரோடு சாகச பயணங்களுக்கு மிகவும் ஏற்றது. செயல்திறன் மற்றும் சொகுசு என 2 முக்கியமான அம்சங்களும் ஒருங்கிணைந்த இந்த காரை, அடிக்கடி ஆஃப் ரோடு சாகச பயணங்களை மேற்கொள்ள கூடியவர்கள் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








