அந்த நடிகை பெத்த பொண்ணா இது... அழகுல அம்மாவையே ஓரங்கட்டிட்டாங்க... மனசை பறிகொடுத்த இளசுகள்...

இந்தியாவை சேர்ந்த திரையுலக நட்சத்திரங்கள் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் வலம் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு ரஷா தடானியும் (Rasha Thadani) விதிவிலக்கு அல்ல. இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் அதிகமாக உலாவி கொண்டிருப்பவர்களுக்கு இவரை தெரிந்திருக்கலாம். இன்ஸ்டாகிராம் தளத்தில் மட்டும் இவரை 1 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பின் தொடர்கின்றனர். அதாவது 10 லட்சத்திற்கும் அதிகமானோர், ரஷா தடானியை பின் தொடர்ந்து கொண்டுள்ளனர். எனவே நிறைய பேருக்கு இவரை நன்றாக தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்காக ஒரு சிறிய விளக்கத்தை வழங்கி விடுகிறோம்.

இவர் பிரபல பாலிவுட் நடிகையான ரவீனா டாண்டனின் (Raveena Tandon) மகள் ஆவார். பிரபல நடிகையின் மகள் என்பதால், இயல்பாகவே ரஷா தடானிக்கு ஊடக வெளிச்சம் கிடைத்து விட்டது. இந்த சூழலில் ரஷா தடானியின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

Rasha Thadani Spotted In Land Rover Defender

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) காரில் வந்து இறங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. கடை அல்லது அலுவலகம் ஏதாவது ஒன்றுக்கு வந்தபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் ஆரம்ப விலை 97 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 2.85 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

Raveena Tandon

ஆனால் ரவீனா டாண்டனின் மகள் ரஷா தடானி வந்தது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் எந்த வேரியண்ட்? என்பது உறுதியாக தெரியவில்லை. லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் மொத்தம் 5 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

அவை 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (300 பிஎஸ்/400 என்எம்), 48V மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 3.0 லிட்டர் டீசல் (350 பிஎஸ்/700 என்எம்), மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 4.4 லிட்டர் பெட்ரோல் (635 பிஎஸ்/750 என்எம்), 5.0 லிட்டர் பெட்ரோல் (425 பிஎஸ்/550 என்எம்) மற்றும் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு பெட்ரோல் (525 பிஎஸ்/625 என்எம்) ஆகியவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: லேண்ட் ரோவர் டிஃபெண்டர், எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கரடு முரடான ஆஃப்ரோடு சாகச பயணங்களை, லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் எளிமையாக மேற்கொள்ளும். அத்துடன் இதில், சொகுசு வசதிகளுக்கும் பஞ்சமில்லை. எனவே சொகுசு வசதிகள் நிரம்பிய ஒரு முரட்டுத்தனமான எஸ்யூவி காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

11.4 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம், மெரிடியன் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் போன்றவை எல்லாம் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும். அத்துடன் டிரைவரின் பணியை எளிமையாக்கும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளும் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, August 2, 2024, 14:11 [IST]
English summary
Rasha thadani spotted in land rover defender viral video
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+