மழைக்காலத்தில் காரை எடுக்கும்போது இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! ரத்தன் டாடா கூறும் முக்கிய அறிவுரை

மழைக்காலத்தில் கார் ஓட்டும்போது இந்த விஷயத்தை கண்டிப்பாக அனைவரும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா டுவிட்டரில் ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார். அப்படி என்ன அவர் கூறினார்? மழைக்காலத்தின்போது ஏன் அதை பின்பற்ற வேண்டும்? என்ற கேள்விகளுக்கான பதில்களை இனி பார்க்கலாம்.

கோடையில் வறண்ட போன நீர்நிலைகளை நிரப்பி, பூமியை செழிப்படைய செய்வது மழை தான். என்றாலும், மழைக்காலத்திலும் சில பல இன்னல்கள் ஏற்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. மழைநீர் வீடுக்குள் புகுந்துவிடுவது, மண் சரிவு, சாலைகளில் மழைநீர் தேங்குவது என இந்த லிஸ்ட்டை சொல்லிக் கொண்டே போகலாம்.

ratan tata advises for driving car during monsoon

ஆட்டோமொபைல் வாகனங்களை பொறுத்தவரையில், சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் ஆட்டோமொபைல் வாகனங்களின் என்ஜின் உள்பட இயந்திர பாகங்கள் பாதிப்பு அடையக்கூடும். மழைக்காலத்தில் கார், வேன், பேருந்து மற்றும் லாரி போன்ற வாகனங்களே தெரு நாய்களுக்கும், பூனைகளுக்கும் தற்காலிக இருப்பிடமாக விளங்கும். மழையில் நெனைந்துவிட கூடாது என்பதற்காக வாகனங்கள் அடியில் அவை தஞ்சம் புகுவது வழக்கம்.

இதுகுறித்த ஓர் முக்கிய அறிவுரையை தான் ரத்தன் டாடா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் ரத்தன் டாடா கூறியதாவது, "தற்போது பருவமழை பெய்து வருவதால், ஏராளமான தெரு நாய்கள் மற்றும் பூனைகள் நமது கார்களுக்கு அடியில் தஞ்சம் அடைகின்றன. தஞ்சம் புகும் அந்த விலங்குகளுக்கு காயம் ஏற்படுவதை தவிர்க்க, காரை இயக்குவதற்கு முன் வாகனத்தை சுற்றிலும் சரிபார்த்து விடுவது முக்கியம்.

வாகனங்களுக்கு அடியில் அவை இருப்பது தெரியாமல் வாகனத்தை எடுத்தால், அவை கடுமையாக காயமடையலாம், ஊனமடையலாம் அல்லது கொல்லப்படலாம். இந்த பருவ காலத்தில் மழை பெய்யும்போது நாம் அனைவரும் அவைகளுக்கு தற்காலிக தங்குமிடம் வழங்கினால் அது மனதிற்கு இதமாக இருக்கும்" என்பதாகும். அத்துடன் இந்த டுவிட்டர் பதிவில் நாய் ஒன்றின் புகைப்படத்தையும் ரத்தன் டாடா பதிவிட்டுள்ளார்.

ரத்தன் டாடாவின் இந்த டுவிட்டர் பதிவிற்கு பலரும் தங்களது பாராட்டுகளையும், கூடுதல் அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர். ரத்தன் டாடாவின் டுவிட்டர் பதிவிற்கு நெட்டிசன் ஒருவர், "ஒரு சிறந்த சிந்தனை தலைவரிடம் இருந்து ஒரு சிறந்த சிந்தனை செயல்முறை... மிகவும் பாராட்டத்தக்கது" என கமெண்ட் செய்துள்ளார்.

ratan tata advises for driving car during monsoon

மற்றொரு, "மழைக்காலங்களில் அலைந்து திரியும் விலங்குகள் மீது இரக்கம் காட்டுவது, அவற்றின் நிலையை பார்த்து தற்காலிக தங்குமிடம் வழங்குவது மனதை கவரக்கூடியது. அருமையான பகிர்வு" என பதிவிட்டுள்ளார். வேறொரு நெட்டிசன், "உங்களது பரிந்துரை மக்களின் மனதை கவரக்கூடியது மற்றும் விலங்குகள் மீதான இரக்கத்தை ஊக்குவிக்கிறது" என கமெண்ட் செய்துள்ளார்.

ரத்தன் டாடா டுவிட்டரில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கக்கூடியவர் என சொல்ல முடியாது. கடந்த ஜூன் மாத இறுதியில், கிரிப்டோ கரன்சியில் தனது பெயரை வைத்து மோசடிகள் நடைபெறுவதாக ட்விட் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதற்கு முன்பு கடைசியாக அவர் டுவிட்டரில் பதிவிட்டது அவரது நெருங்கிய நண்பரின் மரணத்தை பற்றி ஆகும். அந்த பதிவு கடந்த ஜனவரி 2ஆம் தேதி பதிவிடப்பட்டு இருந்தது.

ratan tata advises for driving car during monsoon

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ரத்தன் டாடா கூறுவதுபோல், மழைக்காலத்தில் தெரு நாய் மற்றும் பூனைகளுக்கு சாலையில் நிற்கும் வாகனங்களே தற்காலிக இருப்பிடமாகும். பெரும்பாலானோர் அத்தைய நேரத்திலும் அத்தகைய பிராணிகளை வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை என்பது கசப்பான உண்மையே. ஆதலால் முடிந்தவரையில், மழைக்காலத்தில் வாகனத்தை எடுக்கும் முன் ஏதேனும் பிராணிகள் உள்ளனவா என வாகனத்தை சுற்றிலும் பார்ப்பது நல்லது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 5, 2023, 22:18 [IST]
English summary
Ratan tata advises for driving car during monsoon
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X