சாந்தனு வாங்கிய புத்தம் புதிய காரை ஆச்சரியத்துடன் பார்வையிட்ட ரத்தன் டாடா.. இணையத்தில் வைரலாகும் படம்!
சாந்தனு என்ற உடன் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்த சாந்தனு ரத்தன் டாடாவின் கேர் டேக்கர் ஆவார். இவர் ரத்தன் டாடாவின் மேனஜராக பணியாற்றி வருகின்றார். அத்துடன், ரத்தன் டாடாவின் நிதி உதவியுடன் குட் ஃபெல்லோஸ் (Goodfellows) எனும் நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகின்றார்.
இந்த நிறுவனம், வயதானோரை பார்த்துக் கொள்ளும் நிறுவனம் ஆகும். இதில், படிக்கும் இளம் இளைஞர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய புகழுக்கு உரிய ஓர் நபரே தற்போது டாடா மோட்டார்ஸின் பிரமாண்ட தயாரிப்புகளில் ஒன்றான சஃபாரி காரை வாங்கி இருக்கின்றார். இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடலாகும்.

Source: Team BHP சமீபத்திலேயே இந்த மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் டெலிவரி பணிகளும் நாட்டில் தொடங்கிவிட்டன. இந்த நிலையிலேயே சமீபத்தில் டாடா சஃபாரி காரை வாங்கிய சாந்தனு, அதனை ரத்தன் டாடாவிடம் காண்பித்து இருக்கின்றார். அப்போது எடுக்கப்பட்ட படமே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
தன்னுடைய நிறுவனத்தின் தயாரிப்பை தன்னுடைய மேனஜர் வாங்கி இருப்பதை மிகுந்த ஆர்வத்துடன் அவர் பார்வையிடுவதை நம்மால் காண முடிகின்றது. கடந்த காலங்களில் டாடா நானோ காரை பயன்படுத்தி வந்தவரே சாந்தனு ஆவார். இத்தகைய எளிய கார் பயன்பாட்டில் இருந்தே அவர் உடனடியாக தற்போது சஃபாரி எஸ்யூவிக்கு மாறி இருக்கின்றார்.

முந்தைய வெர்ஷன் சஃபாரி எஸ்யூவி காருக்கு கிடைத்ததைப் போலவே சிறப்பான ரெஸ்பான்ஸ் சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஃபேஸ்லிஃட் சஃபாரி எஸ்யூவி-க்கும் கிடைக்கத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலே சாந்தனு இந்த காரை வாங்கி அசத்தி இருக்கின்றார்.
டாடாவின் பிரபல கான்செப்ட் மாடலான கர்வ்-ஐ தழுவியே டாடா மோட்டார்ஸ் அதன் சமீபத்திய அறிமுகங்களான நெக்ஸான், சஃபாரி மற்றும் ஹாரியர் ஆகியவற்றை அது புதுப்பித்தது. கர்வ்-ஐ தழுவி உருவாக்கியதன் காரணத்தினாலேயே இந்த அனைத்து கார் மாடல்களும் மிக மிக கவர்ச்சியான கார்களாக மாறி இருக்கின்றன.

ஏற்கனவே கவர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் பெயர்போன கார் மாடல்களே இவை ஆகும். இந்த நிலையிலேயே கூடுதல் சிறப்பு சேர்த்தது, டாடா மோட்டார்ஸ். டாடா சஃபாரியின் உயர் நிலை வேரியண்டான அக்காம்ப்ளிஷ்டு பிளஸ் தேர்வையே சாந்தனு வாங்கி இருக்கின்றார். இந்த காருக்கு யூகி என்கிற பெயரை அவர் வைத்திருக்கின்றார்.
மிகுந்த கவரக் கூடிய தோற்றத்தில் இந்த கார் இருக்கின்ற காரணத்தினாலேயே தான் இந்த காரை வாங்கி இருப்பதாக சாந்தனு கருத்து தெரிவித்து இருக்கின்றார். டாடா சஃபாரி ரூ. 16.19 லட்சம் தொடங்கி ரூ. 25.49 வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
சஃபாரியில் டாடா நிறுவனம் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனையும் வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் ரூ. 20.69 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த காரில் வழங்கப்படுகின்றன.
எஞ்ஜினைப் பொருத்த வரை 2.0 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜினே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும். மேனுவல் கியர்பாக்ஸ் வெர்ஷன் ஒரு லிட்டருக்கு 16.30 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் 14.50 கிமீ மைலேஜையும் வழங்கும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கின்றது.
இந்த காரில் ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், டச் வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் திரை, முழு டிஜிட்டல் வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஒளிரும் டாடா லோகோ அடங்கிய ஸ்டியரிங் வீல், ஆம்பியன்ட் லைட்டுகள், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட் வசதிக் இருக்கைகள் மற்றும் அடாஸ் தொழில்நுட்பம் என ஏகப்பட்ட அம்சங்களை இந்த காரில் டாடா வாரி வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர காலை அசைத்தால் திறக்கும் டெயில்-கேட்டும் சஃபாரியில் கொடுக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் மத்தியில் எஸ்யூவி ரக கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் மஹிந்திரா போன்ற சில முன்னணி நிறுவனங்கள் முழுமையாக எஸ்யூவி கார் உற்பத்தி மாறி இருக்கின்றன. ஆனால், டாடா எஸ்யூவி மட்டுமின்றி ஹேட்ச்பேக் மற்றும் செடான் வகை கார்களையும் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications









