ரத்தன் டாடாவின் கராஜில் இடம்பிடித்த டாடா நெக்ஸான் எஸ்யூவி!

ரத்தன் டாடாவின் கார் கராஜில் புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி இடம்பிடித்துள்ளது.

By Saravana Rajan

இந்தியாவின் மாபெரும் வர்த்தக சாம்ராஜ்யமாக விளங்கும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா கார் ஆர்வலர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அவரது கராஜில் ஃபெராரி, மஸராட்டி என பல விலை உயர்ந்த கார்கள் அலங்கரித்து வருகின்றன.

 ரத்தன் டாடாவின் கராஜில் இடம்பிடித்த டாடா நெக்ஸான் எஸ்யூவி!

இந்த நிலையில், டாடா நெக்ஸான் எஸ்யூவியையும் தனது கராஜில் இணைத்துள்ளார் ரத்தன் டாடா. அந்த நீல வண்ண நெக்ஸான் காருடன் ரத்தன் டாடா எடுத்துக்கொண்ட படமும் இணையதளங்களில் வெளிவந்துள்ளன.

 ரத்தன் டாடாவின் கராஜில் இடம்பிடித்த டாடா நெக்ஸான் எஸ்யூவி!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கார் தயாரிப்பில் முனைப்பு காட்டி வரும் இவ்வேளையில், அந்த நிறுவனத்தின் லேட்டஸ்ட் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக டாடா நெக்ஸான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி என்ற பெருமையும் நெக்ஸானுக்கு உண்டு.

 ரத்தன் டாடாவின் கராஜில் இடம்பிடித்த டாடா நெக்ஸான் எஸ்யூவி!

ரத்தன் டாடாவின் கராஜில் இடம்பிடித்திருக்கும் புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி டீசல் மாடல் என்பது தெரிய வந்துள்ளது. இந்த எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

Recommended Video

New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
 ரத்தன் டாடாவின் கராஜில் இடம்பிடித்த டாடா நெக்ஸான் எஸ்யூவி!

இந்த எஸ்யூவி லிட்டருக்கு 23.9 கிமீ மைலேஜ் தரும் என்பதும் கவனிக்கத்தக்க விஷயம். இந்த எஸ்யூவியில் 6.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கிறது. இதுதவிர, டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியும் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேரை சப்போர்ட் செய்யும். ரூ.7.20 லட்சம் என்ற மிக சவாலான விலையில் டீசல் மாடல் கிடைக்கிறது.

 ரத்தன் டாடாவின் கராஜில் இடம்பிடித்த டாடா நெக்ஸான் எஸ்யூவி!

டாடா நெக்ஸான் போன்றே, ஏற்கனவே தனது சொந்த நிறுவனத்தின் சில கார் மாடல்களை விரும்பி வாங்கி வைத்திருக்கிறார் ரத்தன் டாடா. அதில் எஸ்டேட் ரகத்தில் விற்பனை செய்யப்பட்ட டாடா இண்டிகோ மரினா காரும் உண்டு.

ஃபெராரி கார்

ஃபெராரி கார்

ரத்தன் டாடாவிடம் ஃபெராரி கலிஃபோர்னியா ஸ்போர்ட்ஸ் காரும் உள்ளது. MH01 AL111 என்ற பதிவு எண் கொண்ட அந்த காரை மும்பையின் கடலோரச் சாலைகளில் தானே ஓட்டிச் செல்வதை முன்பு வழக்கமாக வைத்திருந்தார். இந்த காரில் 453பிஎச்பி பவரை வழங்க வல்ல 4.3 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஹோண்டா சிவிக்

ஹோண்டா சிவிக்

ரத்தன் டாடாவிடம் ஹோண்டா சிவிக் செடான் காரும் உள்ளது. இந்த காரில் அலுவலகம் வரும்போது எடுக்கப்பட்ட படங்கள் அவ்வப்போது வெளிவருவது உண்டு. உலக அளவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களில் ஒன்று என்ற பெருமைக்கும் உரியது ஹோண்டா சிவிக். 10 தலைமுறைகளை தாண்டி விற்பனையில் தாக்குப் பிடித்து வருகிறது.

 மஸராட்டி க்வாட்ரோபோர்ட்டே

மஸராட்டி க்வாட்ரோபோர்ட்டே

ரத்தன் டாடாவின் இல்லத்தின் கராஜிற்கு மதிப்பு சேர்க்கும் மாடல்களில் ஒன்று மஸராட்டி க்வாட்ரோபோர்ட்டே. 1963ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட உலகின் மிகவும் பாரம்பரிமிக்க ஸ்போர்ட்ஸ் செடான் கார் மாடல் இது என்பதும் ரத்தன் டாடாவை கவர்ந்த விஷயமாக இருக்கிறது.

 கேடில்லாக் எக்ஸ்எல்ஆ

கேடில்லாக் எக்ஸ்எல்ஆ

கேடில்லாக் எக்ஸ்எல்ஆர் கார் மாடலும் ரத்தன் டாடாவிடம் உள்ளது. இந்த காரில் 320 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 4.6 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது ஒரு கன்வெர்ட்டிபிள் ரக கார் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மெர்சிடிஸ் பென்ஸ் 500எஸ்எல்

மெர்சிடிஸ் பென்ஸ் 500எஸ்எல்

கடலோர சாலைகளில் கூரை இல்லாத அமைப்புடைய கார்களில் வலம் வருவதை ரத்தன் டாடா அதிகம் விரும்புகிறார். அதன்படி, அவரது கராஜில் அடுத்து இருக்கும் ஒரு கன்வெர்ட்டிபிள் மாடல்தான் மெர்சிடிஸ் பென்ஸ் 500எஸ்எல். இந்த காரில் இருக்கும் 5.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 306 பிஎச்பி பவரை அளிக்க வல்லது.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ்

உலகின் மிகவும் சிறந்த சொகுசு கார் மாடலாக வர்ணிக்கப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரும் ரத்தன் டாடாவிடம் உள்ளது. இடவசதி, தொழில்நுட்ப வசதிகள், சக்திவாய்ந்த எஞ்சின் என அனைத்திலும் வாடிக்கையாளர்களை வசியப்படுத்தும் அம்சங்களை பெற்றிருக்கிறது.

ஜாகுவார் எஃப் டைப்

ஜாகுவார் எஃப் டைப்

தனது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்பான எஃப்- டைப் கார் மாடலையும் ரத்தன் டாடா வாங்கி வைத்திருக்கிறார். உலகின் அழகிய கார் மாடல்களில் ஒன்றாகவும் பாராட்டப்படுகிறது. கன்வெர்ட்டிபிள் கார்கள் மீதான ரத்தன் டாடாவின் காதலுக்கு இந்த அழகியும் ஒரு சான்றுதான். இந்த காரில் 488 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஜாகுவார் எக்ஸ்எஃப்ஆர்

ஜாகுவார் எக்ஸ்எஃப்ஆர்

ரத்தன் டாடா அதிகம் பயன்படுத்தும் கார் மாடல். செடான் காரின் சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் காரின் செயல்திறனை பெற்றிருக்கிறது. இந்த காரிலும் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 503 பிஎச்பி பவரையும், ,625என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர்

லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர்

டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் இங்கிலாந்தை சேர்ந்த லேண்ட்ரோவர் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் சொகுசு எஸ்யூவி மாடல்தான் ஃப்ரீலேண்டர். ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் ரத்தன் டாடாவை கவர்ந்துள்ளது.

க்றைஸ்லர் செப்ரிங்

க்றைஸ்லர் செப்ரிங்

ரத்தன் டாடாவிடம் க்றைஸ்லர் செப்ரிங் கார் மாடலும் உள்ளது. அவரது கராஜில் இருக்கும் தனித்துவமான கார் மாடல்களில் இதுவும் ஒன்று. தனது கராஜில் உள்ள பல கார்களை சொந்தமாக ஓட்டி பார்ப்பதில் ரத்தன் டாடா ஆர்வமாக இருப்பவர். பெரும்பாலான நேரங்களில் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை.

Via- Cartoq

Most Read Articles
English summary
Ratan Tata Gets Tata Nexon SUV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X