ரத்தன் டாடா இதை பார்க்காமலேயே இறந்துட்டாரே!! இப்படி நடக்கும்னு சுத்தமா எதிர்பார்க்கல...

ரத்தன் டாடா (Ratan Tata) இதை பார்க்காமலேயே மறைந்துவிட்டாரே என சொல்லும் அளவிற்கு டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் ஒரு அதிரடியான விஷயத்தில் இறங்க உள்ளது. எலக்ட்ரிக் கார்களை பற்றியது தான் இந்த விஷயம் ஆகும். டாடா மோட்டார்ஸின் இந்த நடவடிக்கையால் டாடா எலக்ட்ரிக் கார்களின் விலைகள் கணிசமாக குறைவதற்கு வாய்ப்புள்ளது. இன்னும் சொல்லப்போனால், டாடா மோட்டார்ஸின் இந்த யோசனைக்கு விதை போட்டதே ரத்தன் டாடா தான் எனவும் கூறப்படுகிறது. அப்படி என்ன மாதிரியான நடவடிக்கையில் டாடா ஈடுப்பட உள்ளது என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

இன்று உலகம் முழுக்க பரவி இருக்கும் டாடா குழுமத்தை நிர்வகித்து, மிக பெரிய வரலாற்றுக்கு காரணமானவர்களுள் ஒருவராக இருப்பவர் ரத்தன் டாடா ஆவார். அவர் இயற்கை எய்திய செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த ரத்தன் டாடா அக்டோபர் 9ஆம் தேதி இரவு காலமாகினார்.

ratan tata passes away

1937ஆம் ஆண்டில் மும்பையில் பிறந்த ரத்தன் டாடா தனது 25வது வயதில் அமெரிக்காவில் கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்பு பொறியியல் படிப்பில் பட்டம் பெற்ற கையோடு இந்தியா வந்து தனது டாடா குடும்பத்தின் கீழ் இயங்கிவந்த டாடா ஸ்டீல் நிறுவனத்தில் தொழிலை கற்றுக் கொள்வதற்காக பணியில் அமர்ந்தார். அதன்பின், டாடா குழுமத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துவந்த ரத்தன் டாடா 1991ஆம் ஆண்டில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆகினார்.

அதுவரை கமர்ஷியல் வாகனங்களை மட்டுமே தயாரித்துவந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரத்தன் டாடாவின் முயற்சியில் கார்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. டாடா இண்டிகா, ரத்தன் டாடாவின் முயற்சியில் முழுக்க முழுக்க இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்ட முதல் கார் ஆகும். அதன்பின், அனைத்து விதமான மிடில்-கிளாஸ் மக்களும் கார் வாங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் டாடா நானோ காரை உருவாக்கியதும் ரத்தன் டாடாவின் யோசனையே ஆகும்.

ரத்தன் டாடாவின் சாதனைகளை சொல்லிக் கொண்டு சென்றால், இன்றைய நாள் போதாது. இத்தகைய மனிதரின் இறப்புக்கு இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி உள்பட அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து 2017ஆம் ஆண்டில் விலகிவிட்டாலும், அதன்பின் டாடா மோட்டார்ஸின் பல்வேறு முக்கியமான முடிவுகளில் ரத்தன் டாடாவின் பரிந்துரைகளும் இருந்தன.

ratan tata passes away

ஆனால், டாடா மோட்டார்ஸ் விரைவில் எடுக்க போகும் அதிரடியான நடவடிக்கை ஒன்றை பார்ப்பதற்கு முன்பே ரத்தன் டாடா காலமாகி உள்ளார். அந்த நடவடிக்கை வேறொன்றும் இல்லை, எலக்ட்ரிக் கார்களுக்கான BaaS (Battery As a Service) திட்டம் ஆகும். Baas திட்டத்தை ஏற்கனவே சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. சமீபத்தில் கூட, எம்ஜி மோட்டார் நிறுவனம் பாஸ் திட்டத்தை தனது எலக்ட்ரிக் காரில் அறிமுகம் செய்தது.

Baas என்பது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரியை வாடகைக்கு விடுவது போன்றதாகும். அதாவது, எலக்ட்ரிக் வாகனத்துடன் பேட்டரி வழங்கப்படாது. அதற்கு பதிலாக சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரியை குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த கட்டணம் பேட்டரிக்கானது அல்ல; அதனுள் இருக்கும் சார்ஜ்க்கானது ஆகும். பின்னர் சார்ஜ் காலியான பின், அந்த பேட்டரியை கொடுத்து சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரியை மறுபடியும் கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்.

இதன் மூலமாக, எலக்ட்ரிக் கார்களின் விலைகளை குறைவாக நிர்ணயிக்க முடியும் என டாடா மோட்டார்ஸ் நம்புகிறது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, டாடா எலக்ட்ரிக் கார்களின் விலைகள் 25%-இல் இருந்து 30% வரையில் குறையலாம். முதற்கட்டமாக குறிப்பிட்ட சில எலக்ட்ரிக் கார்களில் மட்டுமே இந்த திட்டத்தை செயல்படுத்தி பார்க்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாம். ஆனால் அதற்குள்ளாக தற்போது ரத்தன் டாடா காலமாகி உள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரத்தன் டாடா காலமாகி விட்டாலும், இந்த திட்டத்தை டாடா மோட்டார்ஸ் செயல்படுத்தாமல் விடாது என்றே நினைக்கிறோம். ஏனெனில், இவ்வாறான திட்டத்தை கையில் எடுக்க ரத்தன் டாடாவே கூட பரிந்துரைத்து இருக்கலாம். BaaS ஆனது இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களில் புதிய புரட்சியை செய்ய போகும் திட்டமாக பார்க்கப்படுகிறது. இத்தகைய புரட்சிக்கர திட்டத்தை டாடா மோட்டார்ஸ் கையில் எடுப்பதற்கு முன்னரே டாடாவின் நம்பிக்கையான ரத்தன் டாடா இயற்கை எய்திருப்பது கவலை அளிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 10, 2024, 8:00 [IST]
English summary
Ratan tata passes away ahead of tata motors game changer plan baas check all details here
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+