தன்னை நோக்கி எறியப்பட்ட கற்களை வைத்து டாடா நிறுவனத்தை கட்டமைத்த ரத்தன் டாடா!
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாடா நிறுவனத்தின் சேர்மேனாக இருந்த ரத்தம் டாடா உடல்நல குறைவு காரணமாக தனது 86வது வயதில் உயிரிழந்துள்ளார். இவர் குறித்த சாதனைகளை தற்போது பலர் பேசி வருகிறார்கள். இவர் தன்னை நோக்கி வீசப்பட்ட கற்களை எல்லாம் பயன்படுத்தி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பெரிய அளவில் கட்டமைத்தார். இவரிடம் இன்றைய தலைமுறையினர் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கிறது. இந்த விபரங்களை விரிவாக காணலாம் வாருங்கள்.
ரத்தன் டாடா 1991ம் ஆண்டு டாடா குழுமத்தின் சேர்மேனாக நியமிக்கப்பட்டார் அதன் பிறகு இவர் பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில் முக்கியமானது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதுவரை கமர்சியல் வாகனங்களை மட்டுமே தயாரித்து வந்தது. ரத்தன் டாடா தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இனி பயணிகள் வாகனங்களையும் தயாரிக்க வேண்டும் என்ற யுக்தியை கையில் எடுத்தார்.

இதற்காக அவர் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டால் இறுதியாக 1998ம் ஆண்டு இந்தியாவிலேயே முழுமையாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட டாடா இண்டிகா காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்தது. இதற்கு பின்னால் ரத்தன் டாடாவின் உழைப்பு மிகப்பெரியதாக இருந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த காரை தயாரித்த அறிமுகப்படுத்தும் போது மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை.
இதனால் போதுமான அளவுக்கு நிதி இல்லாமல் இந்த நிறுவனம் தடுமாறியது. இந்த நேரத்தில் டாடா நிறுவனம் தனது பயணிகள் கார் பிரிவை வேறு நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்தது. எப்படி அப்பொழுது உலக அளவில் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக ஃபோர்டு நிறுவனத்தை டாடா நிறுவனம் அணுகியது. அப்பொழுது தங்களது பயணிகள் கார் பிரிவை ஃபோர்டு நிறுவனம் வாங்கிக் கொள்ள வேண்டும் என ரத்தன் டாடா வேண்டுகோள் விடுத்தார்.

இதற்காக அவர் ஃபோர்டு நிறுவனத்தின் தலைவர் பில் ஃபோர்டை நேரில் சந்தித்து பேசினார். சுமார் 3 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்தது என்ன பேசினார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவை ஃபோர்டு நிறுவனம் வாங்குவது குறித்து சில கடுமையான வார்த்தைகளை பில் ஃபோர்டு பேசியதாக தெரிகிறது.
டாடா குழுமத்திற்கு கார்கள் குறித்து எந்த விதமான புரிதலும் இல்லை. அவர்கள் கார்கள் தயாரிக்க தகுதி இல்லாதவர்கள் எனவும், தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் பிரிவை வாங்கினால் அது அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்றும், அவர் பேசியதாக கூறப்படுகிறது. இது ரத்தன் டாடாக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமரியாதையாக அவர் கருதினார்.

இந்த சந்திப்பிற்கு பிறகு ரத்தன் டாடா குழுமத்தின் பயணிகள் கார் செக்மென்டை விற்பனை செய்யும் முடிவை கைவிட்டார் தானே அந்த தொழிலை மேம்படுத்தி லாபகரமான தொழிலாக மாற்ற முடிவு செய்தார். இதை எடுத்து போடு நிறுவனம் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவை வாங்கும் முடிவு ரத்தானது.
ரத்தம் தாத்தா உடனடியாக டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பை எப்படி எல்லாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என யோசித்தார் மக்களுக்கான தேவைகளை புரிய துவங்கினார் அதற்காக தங்கள் தயாரிப்புகளை சிறிது மாற்றியமைத்தார் படிப்படியாக மக்கள் மத்தியில் டாடா இண்டிகா கார் நல்ல பெயரை பெற்றது.
குறிப்பாக வாடகை கார் செக்மெண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா இண்டிகா கார் மிக அதிக அளவில் விற்பனையானது இந்த காரை சொந்தமாக வாங்கிய பலர் இதை தங்கள் வாழ்வாதாரமாக கருதி டாக்ஸி பிசினஸை நடத்தினார்கள். இது மிகப்பெரிய அளவில் இந்தியாவில் வெற்றி பெற்று பலரது குடும்ப வாழ்வாதாரமாகவே இந்த டாடா இண்டிகா கார் மாறியது. இதனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் நல்ல லாபத்தை சம்பாதித்தது.
சுமார் 9ஆண்டுகள் கழித்து 2008ம் ஆண்டு ஃபோர்டு நிறுவனம் சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்தது ஃபோர்டு நிறுவனம் நடத்தி வந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் மிகப்பெரிய தள்ளாட்டத்தில் இருந்தது அப்பொழுது ஃபோர்டு நிறுவனம் அந்த ஜாகுவார் நிறுவனத்தை வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்தது. அப்பொழுது கடும் நஷ்டத்தில் சென்று கொண்டிருந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தை வாங்க தயாராக இருந்தது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தான்.
இறுதியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ2.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தை கைப்பற்றியது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஃபோர்டு நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட்ரோவர் பிரண்டை வாங்கிய போது ஃபோர்டு நிறுவனத்தின் தலைவர் பில் போர்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் போர்டு நிறுவனத்திற்கு செய்யும் மிகப்பெரிய உதவி என பேசி உள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரத்தன் டாடா தன் மீது வீசப்பட்ட கற்களை வைத்தே தனது நிறுவனத்தை கட்டமைத்து பின்னர் தன் மீது கல் வீசியர்களுக்கே பெரும் உதவியை செய்துள்ளார். வாழ்க்கையில் பல விஷயங்களில் துவண்டு போகும் நாம் அவர் போது நமக்கு வரும் சவால்களை எல்லாம் எதிர்கொண்டு உழைத்தால் நிச்சயம் வெற்றி உறுதி!


Click it and Unblock the Notifications









