ரத்தன் டாடா தன்னுடைய கடைசி காலத்தில் எந்த காரை பயன்படுத்துனாரு தெரியுமா?.. இவ்ளோ எளிமை ஆகாதுங்க!
மிகப் பெரிய போராட்டாங்களுக்கு மத்தியில் யாருமே எதிர்பார்த்திராத விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஓர் கார் மாடலே டாடா நானோ (Tata Nano) ஆகும். இது ரத்தன் டாடாவின் கனவு வாகனம் என்றே கூறலாம். இதனாலேயே என்னமோ இந்த காரையே அவர் தன்னுடைய கடைசி காலம் வரை பயன்படுத்தி வந்திருக்கின்றார். மாபெரும் சாம்ராஜ்யமான டாடா குழுமத்தைக் கட்டியாண்ட மற்றும் அதனை பல்வேறு வெற்றிகளுக்கு உயர்த்தியதில் ரத்தன் டாடாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இத்தகைய மாமனிதர் தற்போது இந்த உலகத்தில் இல்லை.
தன்னுடைய 86 ஆவது வயதில் அவர் இந்த மண்ணை விட்டு மறைந்திருக்கின்றார். டாடா மோட்டார்ஸ் வாயிலாக இந்தியாவிற்காகவும், இந்தியர்களுக்காகவும் பலதரப்பட்ட கார் மாடல்களை தயாரித்து வழங்கிய இந்த ஜாம்பவான் மனிதர் தன்னுடைய கடைசி காலத்தில் இந்தியாவின் ஏழை மக்களுக்காக தயாரிக்கப்பட்ட நானோ காரையே பயன்படுத்தி வந்தார்.

ஒரு நாளை மழை காலத்தில் ரத்தன் டாடா சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஓர் குடும்பம் மழையில் நனைந்தபடி இரண்டு சக்கர வாகனத்தில் பயணிப்பதைக் கண்டார். தாய், தந்தை மற்றும் குழந்தைகள் என அனைவரும் அந்த ஒரே வாகனத்தில் நனைந்தபடி பயணித்தது, அவரின் மனதை மிகப் பெரிய அளவில் பாதிக்கச் செய்திருக்கின்றது.
இந்த நிலையிலேயே அனைவருக்குமான காரை தயாரிக்க வேண்டும் என்கிற சிந்தனை அவருக்கு தோன்றியிருக்கின்றது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே நானோ ஆகும். இந்த காரை லாபம் நோக்கமின்றியே டாடா மோட்டார்ஸ் நாட்டில் விற்பனைக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது. சொல்லப்போனால், இந்த காரை விற்றதில் நிறுவனத்திற்கு பெருத்த நஷ்டமே கிடைத்திருக்கின்றது.
இருப்பினும், டாடா தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அந்த காரை புக் செய்த அனைவருக்கும் விற்பனைக்கு வழங்கினார். ஆனால், காலப் போக்கில் நானோ காருக்கு கிடைத்துக் கொண்டிருந்த வரவேற்புக் குறையத் தொடங்கியது. இந்த நிலையிலேயே அக்காரின் விற்பனையை டாடா மோட்டார்ஸ் நிறுத்தியது.
குறிப்பாக, ஒரு சிலர் இந்த காரின் விலை குறைவு என்கிற காரணத்தினால், அதன் தரத்தை குறைத்து எடைப்போட்டு வாங்க தயங்கினர். ஆனால், ரத்தன் டாடாவோ இந்த காரையே கடைசி காலத்தில் தன்னுடைய பிரதான வாகனமாக பயன்படுத்தினார். பல இடங்களுக்கு அந்த காரிலேயே அவர் வலம் வந்தார். இந்த காரின் சிறப்பு என்னவென்றால், அது மின்சார வாகனமாக மாற்றப்பட்ட நானோவாகும்.
இதையே வெகுநாட்களுக்கு சொகுசு கார்களை தவிர்த்துவிட்டு ரத்தன் டாடா பயன்படுத்தி இருக்கின்றார். எலெக்ட்ரா இவி, இந்த நிறுவனமே ரத்தன் டாடாவிற்காக நானோவை மின்சார வாகனமாக மாற்றி தந்திருக்கின்றது. இது ஓர் புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். 72 வோல்ட் திறன் கொணட் எலெக்ட்ரானிக் சிஸ்டமே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இத்தகைய திறன் கொண்ட நானோ எலெக்ட்ரிக் காரையே பெரிய அளவில் பந்தா இல்லாமல் ரத்தன் டாடா பயன்படுத்தி வந்தார். இன்றைய காலத்தில் ஒரு சில தொழிலதிபர்கள் தங்களுடைய வருமானத்தையே மிஞ்சும் விலைக் கொண்ட காரை வாங்கி பயன்படுத்துவதை நம்மால் காண முடிகின்றது.
இவர்கள் மத்தியில் ரத்தன் டாடா ஓர் அரிய நபராக காட்சியளிக்கின்றார். இதற்கு சான்றாகவே அவரிடத்தில் பயன்பாட்டில் இருந்த நானோ மற்றும் நெக்ஸான் உள்ளிட்ட கார் மாடல்கள் இருக்கின்றன. இதுபோன்று இன்னும் சில எளிய கார்களே ரத்தன் டாடாவின் கராஜில் பயன்பாட்டில் இருந்தன. புதிதாக விலை உயர்ந்த காரை அவர் சமீபத்தில் வாங்கியதாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரத்தன் டாடாவின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருத்த அதிர்ச்சியை ஏறப்டுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கினை ஆற்றியவராக ரத்தன் டாடா அறியப்படுகின்றார். இந்த விலை மதிப்பற்ற மாணிக்கத்தையே இன்று இந்தியா இழந்திருக்கின்றது. இது இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் சோகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









