Just In
- 40 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- News
நல்ல கூட்டம் வேறு.. மாஸ்க் அணியாத மோடி.. குவியும் விமர்சனங்களும், அக்கறை அறிவுரைகளும்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இப்போ இருக்க நிலைமைல இது வேறயா? தமிழக டோல்கேட்களில் கட்டணம் உயருது... எவ்ளோனு தெரிஞ்சா கோவப்படுவீங்க
தமிழகத்தில் உள்ள சுங்கசாவடிகளில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்கிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சுங்கசாவடிகள் என்ற பெயரில், கட்டண கொள்ளை அரங்கேற்றப்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல், சுங்கசாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டு. சுங்கசாவடிகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக உள்ளது.

ஆனால் லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் இந்த கோரிக்கைக்கு அரசு தற்போது வரை செவி சாய்க்கவில்லை. அதற்கு மாறாக சுங்கசாவடிகளில் வழக்கம் போல், சீரான இடைவெளியில் கட்டணம் உயர்த்தப்பட்டு கொண்டே வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக அதிருப்தியடைந்துள்ளனர்.

பொதுவாக தமிழகத்தில் உள்ள சுங்கசாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் மாற்றியமைக்கப்படும். குறிப்பிட்ட சுங்கசாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதியும், குறிப்பிட்ட சுங்கசாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதியும் புதிய கட்டணங்கள் அமலுக்கு வருவது வழக்கம். இதன்படி தமிழகத்தில் இருக்கும் 26 சுங்கசாவடிகளில், கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

ஏப்ரல் 1 முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, ஏப்ரல் 20ம் தேதி முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. இந்த வரிசையில் தமிழகத்தில் உள்ள மேலும் 21 சுங்கசாவடிகளில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.

இந்த கட்டண உயர்வு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வேலையிழப்பு, சம்பளம் குறைப்பு என பொருளாதார ரீதியில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலில் கட்டண உயர்வு அமலுக்கு வர இருப்பதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த கட்டண உயர்வு இல்லத்தரசிகளுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தால், பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வதை போல், சுங்கசாவடி கட்டணம் உயர்ந்தாலும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வதற்கான அபாயம் உள்ளது. சரக்கு வாகனங்கள் அதிக கட்டணம் செலுத்த நேரிடும் என்பதால், இந்த விலை உயர்வு ஏற்படும்.

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஏற்கனவே பணப்பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்தால் இன்னும் சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும் என இல்லத்தரசிகள் புலம்பி வருகின்றனர். கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ள 21 சுங்கசாவடிகளின் விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

1. புதூர் பாண்டியபுரம்
2. எலியார்பதி
3. ராசம்பாளையம்
4. ஓமலூர்
5. சமயபுரம்
6. வீரசோழபுரம்
7. மேட்டுப்பட்டி
8. கொடை ரோடு
9. வேலன்செட்டியூர்
10. பாளையம்

11. விஜயமங்கலம்
12. திருமந்துறை
13. செங்குறிச்சி
14. மொரட்டாண்டி
15. வாழவந்தான் கோட்டை
16. நத்தக்கரை
17. மணவாசி
18. வைகுந்தம்
19. விக்கிரவாண்டி
20. திருப்பறைத்துறை
21. பொன்னம்பலப்பட்டி
Note: Images used are for representational purpose only.