25-30 வருஷத்துக்கு முன்னால தமிழகத்தை கலக்கிய நடிகையா 1.70 கோடி ரூபா கார்ல வந்தது! இன்னமும் அப்படியே இருக்காங்க
இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனத்தின் கார்களுக்கு மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் இருந்து வருகிறது. குறிப்பாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS) காரை திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வைத்துள்ளனர். இது மிகவும் விலை உயர்ந்த ஃபுல்-சைஸ் சொகுசு எஸ்யூவி (Full-size Luxury SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். எனவே நல்ல விசாலமான இடவசதி கொண்ட சொகுசு கார்களில் ஒன்றாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் அறியப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கார், 7 இருக்கைகளை கொண்டதாகும்.
எனவே நிறைய பேர் தாராளமாக பயணம் செய்ய முடியும். கடந்த காலங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு காரை பயன்படுத்திய பல்வேறு பிரபலங்கள் பற்றிய செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் நீங்கள் வாசித்திருக்கலாம். இந்த வரிசையில் மற்றொரு பிரபலம் ஒருவர் தற்போது இந்த காரை பயன்படுத்தியுள்ளார்.

மும்பையில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் அந்த வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது, ரவீனா டாண்டன் (Raveena Tandon) ஆவார். பிரபல பாலிவுட் நடிகையான இவர், தமிழ் திரைப்படங்களிலும் கூட நடித்துள்ளார்.
இதற்கு கடந்த 1994ம் ஆண்டு வெளியான சாது (Saadhu) மற்றும் 2001ம் ஆண்டு வெளியான ஆளவந்தான் (Aalavandhan) போன்ற திரைப்படங்களை உதாரணமாக கூற முடியும். ரவீனா டாண்டனுக்கு தற்போது 52 வயதாகிறது. அவரது மகள் ரஷா தடானியும் (Rasha Thadani) தற்போது திரைப்படங்களில் நடிக்க தொடங்கி விட்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ரவீனா டாண்டன் தற்போது பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் கார், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி மிகவும் விலை உயர்ந்தது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-showroom Price) 1.34 கோடி ரூபாயாக உள்ளது.
மறுபக்கம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையோ 1.39 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த காரின் ஆரம்ப நிலை மற்றும் டாப் என 2 வேரியண்ட்களின் ஆன்-ரோடு விலையும் (On-Road Price) சுமார் 1.70 கோடி ரூபாய்க்கு நெருக்கமாக வரும்.
ரவீனா டாண்டன் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பதால், அவரது கார் கலெக்ஸனும் பெரியதாக உள்ளது. ஜாகுவார் எக்ஸ்ஜே (Jaguar XJ), ஆடி க்யூ7 (Audi Q7), மெர்சிடிஸ் பென்ஸ் 350டி (Mercedes Benz 350D) மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) போன்றவை எல்லாம் அவரிடம் உள்ள குறிப்பிடத்தக்க கார்கள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரவீனா டாண்டன் இன்று பளபளக்கும் புத்தம் புதிய கார்களில் பயணம் செய்து கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அவர் செகண்ட் ஹேண்ட் கார்களை பயன்படுத்தியவர் ஆவார். தெளிவாக சொல்வதென்றால், மசாடா மியாட்டாதான் (Mazda Miata), ரவீனா டாண்டனின் முதல் கார் ஆகும்.
இது செகண்ட் ஹேண்ட் கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தன்னுடைய முதல் சம்பளத்தில் ரவீனா டாண்டன் இந்த காரை வாங்கினார். இதில் இருந்து தொடங்கிய பயணம் தற்போது ஏராளமான கார்களுடன் விரிவடைந்துள்ளது. இது ரவீனா டாண்டனின் உழைப்பு மற்றும் வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








