தேவதை மாதிரி இருக்காங்க! 3 கோடி ரூபாய் காரில் ஹோட்டலுக்கு வந்தது அவரா! இது நடிகைகள் அடிக்கடி வர்ற இடமாச்சே!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள நடிகைகளில் (Actress) ஒருவர் ரவீனா டாண்டன் (Raveena Tandon). பாலிவுட் திரைப்படங்களில்தான் (Bollywood Movies) ரவீனா டாண்டன் அதிகமாக நடித்து வருகிறார். எனினும் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இவருக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் மட்டும் இவரை சுமார் 84 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இதில் இருந்தே ரவீனா டாண்டன் எவ்வளவு பிரபலமானவர்? என்பதை புரிந்து கொள்ள முடியும். அவரது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

Raveena Tandon Spotted In Mercedes-Benz GLS Luxury SUV

யூடியூப் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், ரவீனா டாண்டன் ஒரு காரில் இருந்து இறங்கி, ஒரு கட்டிடத்தின் உள்ளே செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. ரவீனா டாண்டன் வந்து இறங்கியது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes-Benz GLS) கார் போல் தெரிகிறது. இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

மும்பை (Mumbai) நகரின் பந்த்ரா (Bandra) பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் உள்ளே சென்றது மிசு ரெஸ்டாரெண்ட் (Mizu Restaurant) ஆகும். இது மும்பை நகரில் மிகவும் பிரபலமான ஹோட்டல்களில் ஒன்றாக திகழ்கிறது. திரைப்பட நடிகைகளை இங்கு அடிக்கடி பார்க்க முடியும்.

Raveena Tandon Spotted In Mercedes-Benz GLS

தீபிகா படுகோன் (Deepika Padukone) போன்ற நடிகைகள் கூட, இந்த ஹோட்டலுக்கு வந்து சென்றுள்ளனர். சரி, விஷயத்திற்கு வருவோம். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், ரவீனா டாண்டன் இந்த ஹோட்டலுக்கு வர பயன்படுத்தியது, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் கார் ஆகும். இது மிகவும் விலை (Price) உயர்ந்த கார்களில் ஒன்றாக இருக்கிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் (Variant) விலையே 1.31 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 2.96 கோடி ரூபாயாக இருக்கிறது. இத்தனைக்கும் இவை எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும்.

ரவீனா டாண்டன் பயன்படுத்தியது எந்த வேரியண்ட்? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் இது டாப் வேரியண்ட் ஆக இருக்கலாம். மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் 4.0 லிட்டர் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஒன்றாகும். மற்றொன்று 3.0 லிட்டர் டீசல் (Diesel) இன்ஜின் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் காரானது, திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் (Cricket Players) மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா (Rohit Sharma), மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் காரை வைத்துள்ளார்.

இதுதவிர கேஜிஎஃப் திரைப்பட இயக்குனர் பிரஷாந்த் நீல் (KGF Movie Director Prashanth Neel) கூட, இந்த காரை வைத்துள்ளார். மேலும் நடிகை ஹூமா குரேஷி (Huma Qureshi) வசமும், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் கார் இருக்கிறது. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் உருவான காலா (Kaala) படத்தில் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 31, 2023, 13:58 [IST]
English summary
Raveena tandon spotted in mercedes benz gls luxury suv worth rs 3 crore viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+