வெளிநாட்ல இந்தியர்கள் பணம் சம்பாதிக்கறதே பெரிய விஷயம் இதுல பிரைவேட் ஜெட் வாங்கிட்டாரா! ஊரையே வாங்கிருக்கலாம்!

ரவி பிள்ளை, இந்த பெயரை அறியாத பிசினஸ்மேன்களே இருக்க முடியாது. இந்தியாவைச் சேர்ந்த இவர் பஹ்ரைனின் மிகப் பெரிய தொழிலதிபராக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இவரே ஊரையே வளச்சுப் போடும் அளவிற்கு அதிக விலைக் கொண்ட பிரைவேட் ஜெட் விமானத்தை வாங்கி இருக்கின்றார். இந்த கொள்முதலின் வாயிலாக அவர் தலைப்பு செய்தியில் இடம் பிடித்திருக்கின்றார். முன்னதாக பிசினஸ் விஷயத்தில் சாதனைகளைப் படைத்து, அதன் வாயிலாக செய்திகளில் இடம் பிடித்து வந்த ரவி பிள்ளை பிரைவேட் ஜெட்டை வாங்கியதன் வாயிலாக தலைப்பு செய்தியாக மாறியிருக்கின்றார்.

அவர் கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி600 (Gulfstream G600) எனும் பிரைவேட் ஜெட் விமானத்தையே வாங்கி இருக்கின்றார். இது ஓர் உயர் ஆடம்பர அம்சங்களைத் தாங்கிய தனியார் விமானம் ஆகும். இதன் ஒரே ஒரு யூனிட்டே 650 கோடி ரூபாய்க்கும் அதிகம் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Gulfstream g600 private jet outlook

இத்தகைய காஸ்ட்லியான விமானத்தையே தன்னுடைய தனிப்பட்ட பயணத்திற்காக ரவி பிள்ளை வாங்கி இருக்கின்றார். இந்த விமானம் இன்னும் ஒரு சில தினங்களில் ரவி பிள்ளையின் பூர்வீகமான கொச்சிக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி வருகின்றன ஏப்ரல் 14 ஆம் தேதி அன்றே இந்த விமானம் வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

எனவே இன்னும் ஒரு சில நாட்களில் ரவி பிள்ளை தன்னுடைய இந்த புதிய விமானத்தில் உலக பயணத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெரும் பணக்காரர்களின் கனவு விமானமாக கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி600 இருக்கின்றது. அந்த அளவிற்கு ஆடம்பர வசதிகளையும், அதிக வேகத்தில் இயங்கும் திறன் கொண்டதே இந்த பிரைவேட் ஜெட் ஆகும்.

Gulfstream g600 private jet seat

இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 13 பேர் அமர்ந்து பயணிக்க முடியும். இதுமட்டுமல்ல இதன் ரேஞ்ச் திறன் 12,223 கிமீ என கூறப்படுகின்றது. ஒற்றை ட்ரிப்பிலேயே இந்த மாபெரும் கிமீ தூரத்தை அது கவர் செய்யும் என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, இடையில் நிற்காமலேயே இந்த தூரத்தை அது கடக்கும்.

மேலும், இந்த விமானத்தை டேக்-ஆஃப் செய்ய வெறும் 5,700 அடி ரன்வே இருந்தாலே போதும். அதேவேளையில், லேண்டாக 3,100 அடி நீளம் கொண்ட ரன்வே தேவைப்படுகின்றது. இது சற்றே குறைவான ரன்வே தேவை ஆகும். இத்தகைய அசத்தலான பிரைவேட் ஜெட்டையே இந்தியாவைச் சேர்ந்த பெரும் பணக்காரர் ரவி பிள்ளை தற்போது வாங்கி இருக்கின்றார்.

Ravi pillai acquires gulfstream g600 private jet

இதன் வாயிலாக மற்ற தொழிலதிபர்களின் கவனத்தையும் அவர் தன் பக்கம் திருப்பியுள்ளார். ரவி பிள்ளை மிகப் பெரிய ஆடம்பர கார் காதலராகவும் இருக்கின்றார். இதை உறுதிப்படுத்தும் விதமாக அவரிடத்தில் மிக அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவற்றில் அவர் தனக்குச் சொந்தமாக சொகுசு கார்களை வைத்திருக்கின்றார். இதேபோல், ஹெலிகாப்டர் மற்றும் சொகுசு கப்பல் ஆகியவற்றையும் இவர் தனக்குச் சொந்தமாக வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக ரவி பிள்ளை இருக்கின்றார். இவரிடத்தில் ஆடம்பர கார்கள் மட்டுமல்ல ஆடம்பர ஹெலிகாப்டர் மற்றும் விமானம் உள்ளிட்டவையும் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக, இந்தியாவின் காஸ்ட்லியான ரோல்ஸ் ராய்ஸ் காரும் இவரிடத்தில் இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

Source: Mathrubhumi

More from DriveSpark

Article Published On: Saturday, April 12, 2025, 13:06 [IST]
English summary
Ravi pillai acquisition of gulfstream g600 jet marks a milestone in luxury aviation
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X