சிறு கிராமத்தில் பிறந்து, இன்று துபாயை கலக்கும் இந்தியர்!! கார்களை விற்றால் மட்டும் பல கோடி ரூபாய் கிடைக்கும்!

ரவி பிள்ளை (Ravi Pillai), இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களுள் ஒருவர். ஆர்பி குழுமத்தை நிறுவியவரான இவர் கேரளாவில் ஒரு சிறு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை முடித்ததும், கல்லூரியில் வணிக மேலாண்மை படிப்பை தேர்வு செய்து படித்தார். 1970ஆம் காலக்கட்ட துவக்கத்தில் சவுதி அரேபியாவுக்கு சென்ற ரவி பிள்ளை அங்கு ஒரு சிறு வணிகத்தை துவங்கினார். அதுதான், ரவி பிள்ளையின் இன்றைய அசூர வளர்ச்சிக்கு ஒரு ஆரம்ப புள்ளியாக விளங்கியது. அதன்பின், திரும்பி பார்க்க கூட நேரமில்லாமல் ரவி பிள்ளையின் வணிக வேகமாக வளர்ச்சி பாதையை நோக்கி சென்றது.

1978ஆம் ஆண்டில் ரவி பிள்ளையின் ஆர்பி குழுமம் உருவாகியது. கட்டிடங்கள் கட்டுதல், மருத்துவமனை, இரும்பு மற்றும் சிமெண்ட் என மத்திய கிழக்கு நாடுகளில் ஓர் முன்னணி குழுமமாக ஆர்பி குழுமம் உருவெடுத்தது. இதன் மூலம் கிடைத்த வருவாயில் பல லக்சரி கார்களை வாங்கிய ரவி பிள்ளையிடம் விலையுயர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று கூட உள்ளது. இந்த அளவிற்கு மத்திய கிழக்கு நாடுகளில் வெற்றிக் கொடி நாட்டி வரும் இந்த இந்திய தொழிலதிபரின் கார் கேரேஜில் உள்ள லக்சரி கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ravi pillai luxury car collections

ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் (Rolls-Royce Ghost): ஹெலிகாப்டருக்கு அடுத்து ரவி பிள்ளையிடம் உள்ள விலையுயர்ந்த வாகனம் இதுவாகும். இந்த அல்ட்ரா-லக்சரி செடான் காரை 2011ஆம் ஆண்டில் ரவி பிள்ளை வாங்கினார். 12 வருடங்களுக்கு மேல் பழமையான காராக இருப்பினும், இப்போதும் இந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் பளபளப்பாக காட்சியளிக்கிறது. இந்த காரை தான் ரவி பிள்ளை தனது போக்குவரத்து பெரும்பாலும் பயன்படுத்துகிறார் என்றால் நம்ப முடிகிறதா?

மெர்சிடிஸ்-மேபக் எஸ்600 (Mercedes-Maybach S600): இந்த விலையுயர்ந்த லக்சரி காரை தென்னிந்தியாவில் வாங்கிய முதல் நபராக ரவி பிள்ளை கருதப்படுகிறார். பளிச்சிடும் வெள்ளை நிறத்தில் இந்த லக்சரி செடான் கார் இவரிடத்தில் உள்ளது. இதுவும் கொஞ்சம் பழைய கார் தான். இருப்பினும், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கேபினை சுற்றிலும் விளக்குகள், சீட் மசாஜ், வாசனையூட்டி, பனோராமிக் சன்ரூஃப் என ஏகப்பட்ட வசதிகள் அப்போதே இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

ravi pillai luxury car collections

மெர்சிடிஸ்-மேபக் எஸ்500 (Mercedes-Maybach S500): தொழிலதிபர் ரவி பிள்ளையிடம் உள்ள மற்றொரு விலையுயர்ந்த மெர்சிடிஸ்-மேபக் கார் இதுவாகும். இதனை ரவி பிள்ளை அவரது மகளின் திருமணத்திற்கு பரிசாக வழங்கி இருந்தார். முழுவதும் பளபளப்பான கருப்பு நிறத்தில் ரவி பிள்ளையின் மகளிடம் இருக்கும் மேபக் எஸ்500 காரில் 4.4 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Land Rover Range Rover Autobiography): தொழிலதிபர்கள் பெரும்பாலானோரிடத்தில் இருக்கும் லக்சரியான எஸ்யூவி கார் இதுவாகும். இதனையும் ரவி பிள்ளை தனது மகளின் திருமணத்திற்காக வாங்கியிருந்தார். ரவி பிள்ளையின் இந்த ரேஞ்ச் ரோவர் காரின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இது தங்க நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

ravi pillai luxury car collections

பி.எம்.டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series): ரவி பிள்ளையின் கார் கேரேஜில் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ 520டி கார் ஒன்றும் உள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வாங்கப்பட்ட பிஎம்டபிள்யூ செடான் கார், 5 சீரிஸ் ஆகும். இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 190 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ஆடி ஏ6 மேட்ரிக்ஸ் (Audi A6 Matrix): 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற ரவி பிள்ளை மகளின் திருமணத்தில் ஏகப்பட்ட புதிய விலையுயர்ந்த கார்கள் பரிசு பொருட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றுள் இந்த ஆடி காரும் ஒன்றாகும். மேலே கண்ட பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காருக்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் இந்த ஆடி காரில் இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழிலதிபர் ரவி பிள்ளையிடம் உள்ள ஏர்பஸ் எச்145 ஹெலிகாப்டர் மட்டும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலானது ஆகும். இதுதவிர்த்து ஒரு ரோல்ஸ்-ராய்ஸ் கார், சில மெர்சிடிஸ்-மேபக் கார்களை வைத்துள்ளார் என்றால் ரவி பிள்ளை எந்த அளவிற்கு கோடிஸ்வரராக உள்ளார் என்பதையும், மத்திய கிழக்கு நாடுகளில் இவரது ஆர்பி குழுமம் எந்த அளவிற்கு பரந்து விரிந்துள்ளது என்பதையும் அறியலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, June 7, 2024, 23:43 [IST]
English summary
Ravi pillai indian business magnate luxury car collections check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X