ஏழை விவசாயி மகனிடம் சொந்தமா ஹெலிகாப்டரா! விலையை கேட்டதும் வாயை பிளக்கும் மக்கள்! இது இந்தியாவுக்கே பெருமை!
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைப்பவர்களுக்கு கோடீஸ்வரர்களின் கதைகள், உத்வேகம் அளிக்க கூடியவை. வார விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ள இந்த நேரத்தில் அனைவரும் உத்வேகம் பெறும் வகையில், விவசாய குடும்பத்தில் பிறந்து, பல ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதியாக மாறிய ஒருவரின் கதையைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.
இந்தியாவை சேர்ந்த பிரபலமான தொழில் அதிபர்களில் ஒருவர் ரவி பிள்ளை (Ravi Pillai). 69 வயதாகும் இவர், சாதாரண விவசாய (Farmer) குடும்பத்தில் இருந்து வந்தவர். ஆனால் இன்று பல ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு சொந்தக்காரராக அவர் மாறியுள்ளார். அவரது தற்போதைய சொத்து மதிப்பு (Net Worth), 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் ஆர்பி குழுமத்தின் (RP Group) நிறுவனர் ஆவார். இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த குழுமம் வணிகம் செய்து வருகிறது. தற்போது கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட இடங்களில் ரவி பிள்ளையின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
உலகின் மற்ற தொழில் அதிபர்களை போலவே, ரவி பிள்ளையும் சொகுசு கார்களை அதிகமாக நேசிக்க கூடியவர். தொழில் அதிபர் ரவி பிள்ளை சொந்தமாக வைத்துள்ள பல்வேறு சொகுசு கார்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை எல்லாம் இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

தொழில் அதிபர் ரவி பிள்ளையிடம் இருக்கும் கார்களில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost) மிகவும் முக்கியமானது. இந்த காரை அவர் கடந்த 2011ம் ஆண்டு வாங்கினார். சுமார் 12 வருடங்கள் கடந்து விட்டாலும் கூட, இன்னமும் இந்த காரை அவர் பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள தொழில் அதிபர் ரவி பிள்ளையின் வீட்டில் இந்த கார் உள்ளது. இதுதவிர மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 (Mercedes Maybach S600) கார் ஒன்றையும், தொழில் அதிபர் ரவி பிள்ளை வைத்துள்ளார். தென் இந்தியாவில் இந்த காரை வாங்கிய முதல் நபர் ரவி பிள்ளைதான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருடன், இந்த காரையும் அவர் தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறார். மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 காரில், 6.0 லிட்டர், வி12 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 530 பிஹெச்பி பவரையும், 800 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த காரின் இருக்கைகளில் மசாஜ் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. இதுதவிர பனரோமிக் சன்ரூஃப், ஆம்பியண்ட் லைட்டிங் என ஏகப்பட்ட வசதிகள் இந்த காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் தவிர பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) கார் ஒன்றும் தொழில் அதிபர் ரவி பிள்ளையிடம் இருக்கிறது.
தொழில் அதிபர் ரவி பிள்ளையிடம் உள்ள மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது, இது சற்று எளிமையான கார் என்று சொல்லலாம். அவரிடம் இருப்பது பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரின் 520டி (520d) வேரியண்ட் ஆகும். இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபர்கள் பலர், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்கள் தவிர, ஏர்பஸ் ஹெச்145 (Airbus H145) ஹெலிகாப்டர் ஒன்றையும் ரவி பிள்ளை வைத்துள்ளார். இந்த ஹெலிகாப்டரை வாங்கிய முதல் இந்தியர் இவர்தான். இந்த சொகுசு ஹெலிகாப்டரின் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
தொழில் அதிபர் ரவி பிள்ளையின் கார் கலெக்ஸனை பார்க்கும்போது, அவர் கார்களை எவ்வளவு அதிகமாக நேசிக்க கூடியவர்? என்பது தெளிவாக புரிகிறது. வறுமையான ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, இன்று பல நாடுகளை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் உயர்ந்துள்ள தொழில் அதிபர் ரவி பிள்ளை உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்.


Click it and Unblock the Notifications








