650 கோடிக்கு தனியா விமானம் வாங்கி ஐயர உக்கார வெச்சு பூஜை போட்ட தொழில் அதிபர்! பாரம்பரியத்த மறக்காத மனுஷன்யா!
இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபர்கள் பலர் தற்போது உலக அரங்கில் கொடி கட்டி பறந்து வருகின்றனர். இவர்களில் பலர், மிகவும் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் ஆவர். இருப்பினும் தங்களது கடின உழைப்பின் மூலம், உலக அரங்கில் இந்தியாவை பெருமைப்படுத்தும் வகையில், மிகப்பெரிய தொழில் அதிபர்களாக உயர்ந்துள்ளனர். இதற்கு கேரளாவை சேர்ந்த ரவி பிள்ளை (Ravi Pillai) ஒரு உதாரணம். இவர் ஆர்பி குழுமத்தின் (RP Group) நிறுவனர் (Founder) ஆவார். ரவி பிள்ளையின் ஆர்பி குழுமம், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில், ஏராளமான தொழில்களை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவின் மற்ற பெரும்பாலான தொழில் அதிபர்களை போலவே, ரவி பிள்ளையும் சொகுசு கார்களில் (Luxury Cars) பயணம் செய்வதை விரும்ப கூடியவர். அவரது கார் கலெக்ஸன் (Car Collection) மிகவும் பிரம்மாண்டமானது. ரவி பிள்ளையின் கலெக்ஸனில் உள்ள கார்களில், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost) மிகவும் முக்கியமானது.

இதுதவிர மெர்சிடிஸ் மேபெக் எஸ்600 (Mercedes Maybach S600) காரையும், ரவி பிள்ளை வைத்துள்ளார். இவை எல்லாவற்றையும் விட ஏர்பஸ் ஹெச்145 ஹெலிகாப்டர் (Airbus H145 Helicopter) ஒன்றும் ரவி பிள்ளையிடம் இருக்கிறது. இந்த வரிசையில் புதிய ப்ரைவெட் பிஸ்னஸ் ஜெட் (Private Business Jet) விமானம் ஒன்றை ரவி பிள்ளை தற்போது வாங்கியுள்ளார்.
இந்த விமானம் கொச்சி விமான நிலையத்திற்கு (Kochi Airport) வந்த வைரல் வீடியோ (Viral Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. வைரலாக பரவி வரும் இந்த வீடியோவில், ரவி பிள்ளையின் விமானத்திற்கு வாட்டர் சல்யூட் (Water Salute) செய்யப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

இது விமானம் புதியது என்றாலோ அல்லது பைலட் ஓய்வு பெற போகிறார் என்றாலோ, செய்யப்படும் ஒரு சம்பிரதாயம் ஆகும். ரவி பிள்ளை தற்போது வாங்கியிருக்கும் விமானத்தின் மதிப்பு சுமார் 650 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தின் பெயர் கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி600 (Gulfstream G600) என்பதாகும்.
இந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் சடங்கு செய்யப்பட்டதுடன் மட்டுமல்லாது, ஹிந்து பாரம்பரிய முறைப்படி பூஜை செய்யப்பட்டதையும் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் நம்மால் காண முடிகிறது. நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த விமானத்தை வாங்கியிருப்பதாக ரவி பிள்ளை தெரிவித்துள்ளார்.
தொழில் அதிபர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது என்பதால், உண்மையிலேயே இது போன்ற விமானங்கள் அவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றுதான். ரவி பிள்ளை தற்போது வாங்கியுள்ள கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி600 ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்ட விமானம் ஆகும். இது அதிபட்சமாக 51 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் வாய்ந்தது.
அதே நேரத்தில் இந்த விமானத்தில் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால், 12,223 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரவி பிள்ளையின் இந்த விமானத்தில் சமையல் அறை போன்ற வசதிகள் கூட இருக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விமானங்களில் பயணம் செய்ய வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே விமானங்கள் கிடைக்கும். எனவேதான் ரவி பிள்ளை போன்ற தொழில் அதிபர்கள், நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக தனி விமானங்களை வாங்கி பயணம் செய்கின்றனர்.


Click it and Unblock the Notifications








