40 வருட பழைய ஆடி கார்... இவரிடம் இருக்கும் பணத்திற்கு எந்த காரில் வேண்டுமென்றாலும் வந்திருக்கலாம்!

ரவி சாஸ்த்ரி (Ravi Shastri), இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் தலைமை பயிற்ச்சியாளராக பணியாற்றியவர். 1981ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகியவர், 1992ஆம் ஆண்டு வரையில் 11 வருடங்களாக இந்திய அணியின் பேட்டிங் ஆல்-ரவுண்டராக ஜொலித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியது என்னமோ இடதுகை சுழற்பந்து வீச்சாளராக என்றாலும், அதன்பின் பேட்டிங்கிலும் ரன்களை குவிக்க ஆரம்பித்து, அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களுள் ஒருவராக உருவெடுத்தார். ரவி சாஸ்திரியின் கிரிக்கெட் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மைல்கல் என்றால், 1983ஆம் ஆண்டில் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தது ஆகும்.

80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரவி சாஸ்த்ரி 11 சதம், 12 அரைசதங்கள் உடன் 3,830 ரன்களை குவித்தவர் ஆவார். அதேநேரம், டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 151 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். இதில், இருமுறை ஒரே இன்னிங்க்ஸில் 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

ravi shastri with audi 100

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில், 150 போட்டிகளில் விளையாடி 4 சதங்கள் மற்றும் 18 அரைசதங்கள் உடன் 3,108 ரன்களையும், பந்து வீசி 129 விக்கெட்களையும் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய போது பல்வேறு பரிசுகள் ரவி சாஸ்த்ரிக்கு கிடைத்துள்ளன. அவற்றுள் முக்கியமானது, ஆஸ்திரேலியாவில் கிடைத்த ஆடி கார் (Audi Car) பரிசாகும்.

1985ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்த சமயத்தில் ரவி சாஸ்திரிக்கு ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் 'ஆடி 100' கார் பரிசாக வழங்கப்பட்டது. சரி இதனை பற்றி எல்லாம் எதற்காக இப்போது பார்க்கிறோம் என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். சுமார் 40 வருட தனது பழைய ஆடி 100 காரை ரவி சாஸ்த்ரி தற்போது மிகவும் புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாற்றியுள்ளார்.

ravi shastri with audi 100

அதாவது, பட்டி, டிங்கரிங் எல்லாம் பார்த்து காரை பளபளவென்று மாற்றியுள்ளார். இதனால், ஷோரூமில் இருந்து கொண்டுவரப்பட்ட போது எப்படியிருந்ததோ அவ்வாறான தோற்றத்தில் இந்த ஆடி 100 கார் காட்சியளிக்கிறது. ரவி சாஸ்த்ரிக்கு அவரது 40-வருட ஆடி 100 காரை இவ்வாறு மாற்றிக் கொடுத்திருப்பது யார் தெரியுமா? பெரும் பணக்காரரும், ரேமண்ட் க்ரூப் (Raymond Group)-இன் தலைவருமான கௌதம் சிங்கானியா (Gautam Singhania)-இன் சூப்பர் கார் க்ளப் கேரேஜ் (SCCG) ஆகும்.

புதியதாக மாற்றப்பட்ட தனது ஆடி 100 காரை ரவி சாஸ்திரி தானேவில் நடைபெற்ற ரேமண்ட் 100 ஆட்டோஃபெஸ்ட் (Autofest) கார் கண்காட்சிக்கு ஓட்டி சென்றுள்ளார். 500க்கும் அதிகமான லக்சரி கார்களுடன் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த கார் கண்காட்சியில் ரவி சாஸ்த்ரியின் 40-வருட பழைய ஆடி 100 கார் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை தொடர்ந்து காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ரவி சாஸ்த்ரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ravi shastri with audi 100

இதில் ஒரு படத்தில், தொழிலதிபர் கௌதம் சிங்கானியா உடன் ரவி சாஸ்த்ரி தனது ஆடி 100 கார் உடன் நிற்கிறார். இதுதொடர்பான எக்ஸ் பதிவின்படி பார்க்கும்போது, ரவி சாஸ்திரி இந்த ஆடி 100 காரை கடந்த 25 வருடங்களாக பயன்படுத்தவில்லை. அதாவது, 1985இல் பெற்ற பின் 2000 வரையில் 15 வருடங்களுக்கு பயன்படுத்தியுள்ளார். அதன்பின் என்ன ஆனதோ தெரியவில்லை, காரை பயன்படுத்த முடியாமல் போயிள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 40 வருட பழைய காரை ரவி சாஸ்திரி போன்ற பிரபலம் இன்னமும் வைத்துள்ளார் என்பதே பெரிய ஆச்சிரியம். பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்ற காரை 25 வருடங்களாக பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளார் என்பது இன்னும் பெரிய ஆச்சிரியம் ஆகும். ஜாலியான நபராக அறியப்படும் ரவி சாஸ்த்ரிக்கு உள்ளேயும் இப்படியொரு கிளாசிக் கார் பிரியர் இருந்துள்ளார் பாருங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 15, 2025, 17:39 [IST]
English summary
Ravi shastri with his 40 year old audi 100 car in gautam singhanias autofest
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X