விமான பயணிகள் மத்தியில் உருவாகி வரும் புதிய டிரெண்ட்! விமான பயணம் செய்யும் போது இதை ஃபாலோ பண்ணுங்க!

தற்போது விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் மத்தியில் ரா டாக்கிங் (raw-dogging) என்ற செயல்முறை டிரெண்டாகி வருகிறது. விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் பலர் இந்த டிரெண்டை பின்பற்றி வருகிறார்கள். இதை பின்பற்றுவதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைப்பதாக தெரிகிறது. இது குறித்து பலர் சமூக வலைதளங்களில் பேசி வரும் நிலையில், இந்த ரா டாக்கிங் (raw-dogging) என்றால் என்ன விமான பயணத்தின் போது இது எப்படி நமக்கு உதவுகிறது? என்ற விரிவான விபரத்தை தான் நாம் இங்கே காண போகிறோம்.

விமானத்தில் பயணம் செய்யும்போது பயணிகள் பல தங்கள் செல்போனை பார்த்துக்கொண்டு செல்வது அல்லது விமானத்தில் உள்ள ஸ்கிரீனில் திரைப்படங்கள் பார்ப்பது, மியூசிக் கேட்பது புத்தகங்கள் படிப்பது என ஏதாவது ஒரு விஷயத்தை உபயோகமாக செய்து வருவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு விமான பயணத்தின் பொழுது இனிமையாகவும் சிறப்பாகவும் தகவல் தெரிந்து கொள்ளும் விதத்திலும் பயன்பெறும் என நினைக்கிறார்கள்.

raw dogging trend

இது ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு சில பயணிகள் விமான பயணத்தில் எதுவுமே செய்யாமல் சும்மா அமர்ந்து செல்வதை டிரெண்டாக வைத்திருக்கிறார்கள். இந்த டிரெண்டு தான் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதாக பகிரப்பட்டு வருகிறது. இதற்குப் பெயர் ரா டாக்கிங் (raw-dogging) என வைத்திருக்கிறார்கள். இதை செய்வதன் மூலம் பயணிகளுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த ரா டாக்கிங் (raw-dogging) என்பது விமான பயணத்தின் போது பயணிகள் புத்தகம் படிப்பதோ திரைப்படம் பார்ப்பதோ மியூசிக் கேட்பதோ என எதுவுமே இல்லாமல் அமைதியாக சும்மா உட்கார்ந்து இருப்பது தான் டிரெண்ட் என சொல்கிறார்கள். விமான பயணத்தின் போது இருக்கும் நேரத்தை வேறு விதமாக கழிக்க கூடாது.

raw dogging trend

இந்த முறையில் எந்தவிதமான அனுமதியும் கிடையாது. நீங்கள் பார்க்கும் ஸ்கிரீனில் விமானம் எந்த வழியாக பயணம் செய்து கொண்டிருக்கிறது என்ற மேப்பை மட்டுமே பார்ப்பதற்கு அனுமதி இருக்கிறது. இதில் ஒவ்வொரு பயணிகளும் எவ்வளவு மணி நேரம் இதை பின்பற்றுகிறார்கள் என டிரெண்ட் செய்கிறார்கள்.

நாடு விட்டு நாடு பயணம் செல்லும் பயணிகள் பலர் 10 மணி நேரம், 11 மணி நேரம் கூட விமான பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அவர்கள் கூட தங்கள் பயண நேரத்தில் ராட் டாக்கிங் (raw-dogging) செய்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் ஸ்கிரீன் டைமை குறைக்க முடிகிறது.

raw dogging trend

இன்று மனிதர்களிடம் இருக்கும் மிக முக்கியமான பிரச்சனை ஸ்கிரீன் டைம்தான். அதிகமான நேரம் லேப்டாப் செல்போன் உள்ளிட்ட கேட்ஜெட்களை பயன்படுத்துவதன் மூலம் அதில் இருக்கும் தகவல்கள் மனித நேரத்தை வீணடிப்பதாகவும் ,மனித மூளைகளுக்கு தேவையில்லாத பல்வேறு விஷயங்களை புகுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதை குறைப்பதற்காக மருத்துவர்கள் கூட ஒரு தனி மனிதனின் ஸ்கிரீன் டைமை குறைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்களை செய்து வருகிறார்கள். இதன் மூலம் சிலர் தங்கள் செல்போனில் எவ்வளவு நேரம் செல்போனை பார்க்கிறோம் என டிராக் செய்து வருகிறார்கள். இந்நிலையில் விமான பயணத்தின் போதும் இவ்வாறான செயல்கள் செய்வது அவர்கள் மூளைக்கு தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்பதால் இந்த டிரெண்ட் பரவலாகி வருகிறது.

இந்த டிரெண்ட்டை பயன்படுத்துபவர்கள் விமானத்தில் ஏறியதும் அவர்கள் ஒதுக்கப்பட்ட சீட்டில் அமர்ந்து எந்த விதமான ஸ்கிரீனையும் பார்க்காமல் செல்போனையும், ஆப் செய்து விட்டு நிம்மதியாக இருக்க வேண்டும் இந்த நேரத்தில் அவர்கள் விமானம் எங்கு பயணம் செய்து கொண்டிருக்கிறது. என்ற மேப்பை மட்டும் தங்கள் விமானத்தில் உள்ள ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டிருந்தால் போதும்.

இதன் மூலம் மனிதர்கள் அவர்களுக்கான முக்கியமான சிந்தனைகளை சிந்திக்க நேரம் இருக்கிறது. அவர்கள் வாழ்வில் செய்யும் தவறுகள் அல்லது பிரச்சினைகளில் இருந்து எப்படி மீண்டும் வெளியே வருவது என்பது குறித்தும் தங்களை தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவும். இந்த சிந்தனை நேரம் பயன்படுகிறது என்பதால் இந்த நேரத்தை வீணடிக்கும் மற்ற விஷயங்களை தவிர்ப்பதற்காக இந்த டிரெண்ட் பரவி வருகிறது.

இதைப் பின்பற்றுபவர்கள் பலர் இதன் மூலம் பல்வேறு விதமான நன்மைகளை பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். சில முக்கிய முடிவுகளை எடுக்கும் போதும் அதே நேரம் தங்கள் வாழ்வில் தங்களையே சுயபரிசோதனை செய்து கொள்ளும்போதும் இப்படியான பயணங்கள் அவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இதனால் இந்த விஷயம் டிராகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமான பயணிகள் மத்தியில் டிரெண்டாகி வரும் இந்த ரா டாக்கிங் (raw-dogging) என்ற விஷயம் தற்போது மனிதர்களுக்கு பயனுள்ள விஷயமாக இருப்பதாக பல கருத்து தெரிவித்து வரும் நிலையில், பல மருத்துவர்களும் இதற்கு ஆதரவான கருத்துக்களை கூறி வருகிறார்கள். இது நிச்சயம் மனிதர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் நீங்கள் அடுத்த விமான பயணம் செய்யும்போதும் இந்த முயற்சியை செய்து பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 29, 2024, 13:28 [IST]
English summary
Raw dogging flights latest travel trend
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X