அம்பானி குடும்பத்தார் போறாங்கனு தான் நினைச்சோம்... உற்று பார்த்த பின்பு தான் உள்ளே இருந்தது யார்னு தெரிஞ்சது!

கௌதம் சிங்கானியா (Gautam Singhania), இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களுள் ஒருவர். ரேமண்ட் (Raymond) என்கிற பிரபலமான நிறுவனத்தின் சிஇஓ ஆன கௌதம் சிங்கானியா ஆட்டோமொபைல் (Automobile) வாகனங்களின் மீதும் ஆர்வம் கொண்டவர் ஆவார். குறிப்பாக, அதிவேகமாக இயங்கக்கூடிய சொகுசு கார்கள் என்றாலே கௌதம் சிங்கானியாவுக்கு தனி ஆர்வம் ஆகும்.

லம்போர்கினி (Lamborghini), ஃபெராரி (Ferrari) கார்களை கௌதம் சிங்கானியா ஓட்டும் வீடியோக்களை இதற்குமுன் பலமுறை பார்த்துள்ளோம். தனது லம்போர்கினி கார் பாதி வழியில் நின்றதற்காக ஆதங்கத்துடன் அதனை கௌதம் சிங்கானியா வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்ட சம்பவங்களை கூட சிலர் பார்த்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

raymond ceo gautam singhania drives modified bmw m2 sports car

அதன்பின், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் லம்போர்கினி நிறுவனத்தை வெச்சி செய்ய ஆரம்பித்த கௌதம் சிங்கானியா தற்போது அவரது மாடிஃபை (Modify) செய்யப்பட்ட பி.எம்.டபிள்யூ எம்2 (BMW M2) என்கிற சூப்பர்காரில் மும்பையில் காட்சி தந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ யூடியூப் (Youtube)-இல் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த வீடியோவில், பளிச்சிடும் இளம் நீல நிறத்திலான பிஎம்டபிள்யூ எம்2 காரை மும்பையின் குறுகலான சாலையில் கௌதம் சிங்கானியா ஓட்டியப்படி செல்வதையும், அவருக்கு பாதுகாப்பாக முன்னாலும் பின்னாலும் சைரன் (Siren) பொருத்தப்பட்ட வாகனங்களில் பாதுகாவலர்கள் செல்வதையும் காணலாம். இதில், சில போலீஸ் (Police) வாகனங்களும் உள்ளன.

raymond ceo gautam singhania drives modified bmw m2 sports car

கௌதம் சிங்கானியாவின் பாதுகாப்பான வாகனங்கள் கூட டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) போன்ற பல லட்ச ரூபாய் விலை கொண்ட கார்களாக இருப்பதை காணலாம். பாதுகாப்புக்கே இத்தகைய கார்களை பயன்படுத்தும் இந்த தொழிலதிபரின் பிஎம்டபிள்யூ எம்2 கார் ஆனது ஏற்கனவே கூறியதுபோல் கௌதம் சிங்கானியாவின் விருப்பத்திற்கு ஏற்ப மாடிஃபை செய்யப்பட்டது ஆகும்.

விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார் என சொன்னாலும், பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனை செய்யும் விலை குறைவான ஸ்போர்ட்ஸ் கார் (Sports Car) இதுவாகும். எம்2 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.03 கோடியாக உள்ளது. ஆன்-ரோடு விலை ரூ.1.5 கோடிக்கும் அதிகமாக வரும். இது இல்லாமல், கௌதம் சிங்கானியா தனது விருப்பத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை செய்துக் கொண்டுள்ளதால், இந்த எம்2 காருக்காக அவர் நிச்சயமாக ரூ.2 கோடிக்கும் அதிகமாக செலவு செய்திருப்பார்.

raymond ceo gautam singhania drives modified bmw m2 sports car

இந்த இளம் நீல நிற பிஎம்டபிள்யூ எம்2 காரை சுற்றிலும் கருப்பு நிறத்திலான கார்பன்-ஃபைபர் (Carbon-fiber) பாடி கிட்டை பொருத்திக் கொண்டுள்ள தொழிலதிபர் கௌதம் சிங்கானியா, வழக்கமான சக்கரங்களுக்கு பதிலாக அழகாக பிரஷ் செய்யப்பட்ட சில்வர் நிறத்தில் வோசென் (Vossen) அலாய் சக்கரங்களையும், காருக்கு பின்பக்கத்தில் ஸ்பாய்லரையும் பொருத்தி பயன்படுத்தி வருகிறார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழிலதிபர் கௌதம் சிங்கானியாவிடம் ஏற்கனவே கூறியதுபோல் ஃபெராரி, மெக்லாரன் (McLaren) கார்கள் உள்ளன. லம்போர்கினி காரை விற்றுவிட்டார். இந்த பிஎம்டபிள்யூ எம்2 கார் மட்டுமின்றி, ஓல்டு-ஜென்ரேஷன் (Old-Generation) பிஎம்டபிள்யூ எம்2 காரும் இவரிடம் உள்ளது. ஆதலால், கௌதம் சிங்கானியா நினைத்தால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலையுயர்ந்த காரை பயன்படுத்த முடியும்.

Source: Cartog (https://www.cartoq.com/)

More from DriveSpark

Article Published On: Tuesday, July 22, 2025, 14:59 [IST]
English summary
Raymond ceo gautam singhania drives his modified bmw m2 sports car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X