அடுத்த 3 மாதங்களுக்கு வாகன கடன்களுக்கான வட்டியை செலுத்த வேண்டியதில்லை... வந்தது புதிய அறிவிப்பு

வாகன கடன்களுக்கான இஎம்ஐகளை அடுத்த மூன்று மாதங்களாக செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா வைரஸினால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மாதங்களுக்கு வாகன கடன்களுக்கான வட்டியை செலுத்த வேண்டியதில்லை... வந்தது புதிய அறிவிப்பு

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸினால் ஆட்டோமொபைல் துறை மிக பெரிய அளவிலான சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வாகன தயாரிப்புகளுடன் பெரும்பான்மையான சிறு, குறு வணிகங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அடுத்த 3 மாதங்களுக்கு வாகன கடன்களுக்கான வட்டியை செலுத்த வேண்டியதில்லை... வந்தது புதிய அறிவிப்பு

இதன் காரணமாக இந்திய அரசாங்கம் கடன் தொகைகளை திரும்பி செலுத்தும் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் இஎம்ஐகளை ஜுன் வரையில், அதாவது அடுத்த மூன்று மாதங்களுக்கு செலுத்த வேண்டியதில்லை. அரசாங்கத்தின் இந்த அவசர கால நடவடிக்கை நிச்சயம் கடன் மூலமாக வாகனங்களை வாங்கியவர்களுக்கு சற்று ஆறுதலை அளிக்கும்.

அடுத்த 3 மாதங்களுக்கு வாகன கடன்களுக்கான வட்டியை செலுத்த வேண்டியதில்லை... வந்தது புதிய அறிவிப்பு

வாகன கடன்களுக்கான இஎம்ஐ மட்டுமில்லாமல், வேளான் உள்பட அனைத்து விதமான மொத்த மற்றும் சில்லறை கடன்களுக்கான இஎம்ஐகளையும் மூன்று மாதத்திற்கு செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாத இஎம்ஐ தடையினால் லோன்களுக்கான வட்டி தொகைகளை கூடுதலாக மூன்று மாதங்கள் செலுத்த வேண்டி வரும்.

அடுத்த 3 மாதங்களுக்கு வாகன கடன்களுக்கான வட்டியை செலுத்த வேண்டியதில்லை... வந்தது புதிய அறிவிப்பு

இந்த இக்கட்டான சூழ்நிலையை வங்கிகளும் சமாளிக்கும் விதமாக ரெப்போ ரேட்கள் குறைக்கப்படவுள்ளன. இதனால் வங்கிகள் மற்ற நிறுவனங்களில் இருந்து வாங்கியுள்ள கடன்களுக்கான வட்டி வீதம் குறையும்.

அடுத்த 3 மாதங்களுக்கு வாகன கடன்களுக்கான வட்டியை செலுத்த வேண்டியதில்லை... வந்தது புதிய அறிவிப்பு

இந்த இம்எம்ஐ-களுக்கான கால அவகாசத்துடன், எஃப்ஏடிஏ மற்றும் சியாம் அமைப்புகள் உச்ச நீதிமனறத்தில் தாக்கல் செய்த மனுவினால் பிஎஸ்4 வாகனங்களை சந்தையில் விற்பதற்கான காலக்கெடுவும் ஏப்ரல் 24ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மாதங்களுக்கு வாகன கடன்களுக்கான வட்டியை செலுத்த வேண்டியதில்லை... வந்தது புதிய அறிவிப்பு

இருப்பினும் இந்த கால நீட்டிப்புடன் டீலர்ஷிப்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முழுமையாக தகவல்களை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

அடுத்த 3 மாதங்களுக்கு வாகன கடன்களுக்கான வட்டியை செலுத்த வேண்டியதில்லை... வந்தது புதிய அறிவிப்பு

பிஎஸ்4 வாகனங்களுக்கான காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் அதிகரித்திருப்பது சந்தையில் உள்ள சில நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதுகுறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ், இந்த அறிவிப்பு சில நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது போல் உள்ளது. ஏனெனில் இந்த கூடுதல் கால அவகாசத்தால் மீண்டும் பிஎஸ்4 வாகனங்களை இந்தியா முழுவதும் உள்ள டீலர்களுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.

அடுத்த 3 மாதங்களுக்கு வாகன கடன்களுக்கான வட்டியை செலுத்த வேண்டியதில்லை... வந்தது புதிய அறிவிப்பு

இந்திய அரசாங்கத்தின் அவசரகால அறிவிப்புகளை எதிர்நோக்கி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உள்ளனர். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள இந்த அறிவிப்பு நிச்சயம் இந்த சூழ்நிலையை சற்று சமாளிக்க உதவும்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 28, 2020, 19:28 [IST]
English summary
Three Months Relief From Vehicle Loan EMIs Announced By RBI
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+