3,200 கிலோ எடையுள்ள காரை கட்டியிழுத்து பிரம்மிக்க வைத்த ரிமோட் கண்ட்ரோல் கார்கள்

Written By:

உலக அளவில் அதிக வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெயரை தொடர்ந்து 4-வது முறையாக பிடித்துள்ள ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் 'ஹில்லக்ஸ்' எனும் பிக்அப் ட்ரக் காரை உலகலவில் விற்பனை செய்து வருகிறது.

டொயோட்டா எஸ்யுவி காரை கட்டியிழுத்த மினியேச்சர் கார்கள்

1968ஆம் முதல் விற்பனையில் இருந்து வரும் டொயோட்டா ஹில்லக்ஸ் ட்ரக் அமெரிக்கர்களால் பெரிதும் விரும்பப்படும் ஒரு வாகனமாக உள்ளது. 3,200 கிலோ எடை கொண்ட ஹில்லக்ஸ் பிக்அப் ட்ரக்கினை இலகுவாகவும் பயன்படுத்தலாம் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு நூதன செயலை டொயோட்டா நிறுவனம் நிகழ்த்திக் காட்டியுள்ளது.

டொயோட்டா எஸ்யுவி காரை கட்டியிழுத்த மினியேச்சர் கார்கள்

டொயோட்டா ஹில்லக்ஸ் ட்ரக்குகள் பிரபலமான ஒரு மாடல் என்பதால் அதன் மினியேச்சர் மாடலும் அமெரிக்காவில் புகழ் பெற்றவையாக உள்ளது. இதற்கு ‘டாமியா ஹில்லக்ஸ் ப்ரூசர்' என பெயரிட்டுள்ளனர்.

டொயோட்டா எஸ்யுவி காரை கட்டியிழுத்த மினியேச்சர் கார்கள்

இவை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் மினியேச்சர் பிக் அப் ட்ரக்குகள் ஆகும். சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் இதனை இயக்குவதில் விருப்பம் கொண்டிருக்கின்றனர்.

டொயோட்டா எஸ்யுவி காரை கட்டியிழுத்த மினியேச்சர் கார்கள்

பெரிய ஹில்லக்ஸ் போன்றே இந்த மினியேச்சர் கார்களும் ஆற்றல் வாய்ந்ததாக விளங்குகின்றன. டொயோட்டா நிறுவனத்தார் 15 மினியேச்சர் கார்களைக் கொண்டு 3,200 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட ஹில்லக்ஸ் காரை இழுக்கச் செய்து அசத்தியுள்ளனர்.

டொயோட்டா எஸ்யுவி காரை கட்டியிழுத்த மினியேச்சர் கார்கள்

ஒவ்வொரு மினியேச்சர் காரும் கம்பி இணைப்பு மூலம் பெரிய ஹில்லக்ஸ் காருடன் இணைக்கப்பட்டன. சிறிய கார்களின் எடையை சமநிலைப்படுத்தும் விதமாக அதன் பின்னால் உள்ள கார்கோ பகுதியில் சிறிய எடைக்கற்களையும் பொருத்தியிருந்தனர்.

டொயோட்டா எஸ்யுவி காரை கட்டியிழுத்த மினியேச்சர் கார்கள்

ஒவ்வொரு குட்டி காரும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டது. அதிக எடை கொண்ட மற்றும் வலிமையான ஹில்லக்ஸ் காரினை, மினியேச்சர் கார்கள் கட்டி இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகியுள்ளது.

டொயோட்டா எஸ்யுவி காரை கட்டியிழுத்த மினியேச்சர் கார்கள்

ஒவ்வொரு குட்டி காரும் 2 கிலோ இழுக்கும் ஆற்றல் பெற்றதாகும். குட்டி ரிமோட் கண்ட்டோல் கார்கள் மூலம் பெரிய ஹில்லக்ஸ் காரை இழுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ள இந்த வீடீயோவை மேலே உள்ள இணைப்பில் நீங்களும் காணுங்கள்..

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணுங்கள்:

English summary
remote control cars pull toyota hilux pick up truck.
Story first published: Thursday, March 23, 2017, 10:44 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark