ஆர்சிபி ஜெயிச்சதே இவராலதான்! ஆனா ஒருத்தர் கூட கண்டுக்கல! 3 கோடி ரூபா கார்ல வந்து எல்லாரையும் மிரள விட்டுட்டாரு

ஐபிஎல் (IPL) தொடரில், ஆர்சிபி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB - Royal Challengers Bengaluru) அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது, அதன் ரசிகர்களின் நீண்ட நாள் கனவு. ஒரு வழியாக சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் தொடரில், அந்த கனவு நிஜமாக மாறியது.

இறுதி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியை வீழ்த்தி, ஐபிஎல் தொடரில், சாம்பியன் பட்டத்தை வென்றது ஆர்சிபி. இதற்கு ஏகப்பட்ட வீரர்கள் காரணமாக இருந்தாலும், ஒருவர் கண்டிப்பாக குறிப்பிடத்தக்கவர். அவர் இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற குர்ணல் பாண்டியா (Krunal Pandya) ஆவார்.

Krunal Pandya

இறுதி போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி 2 விக்கெட்களை குர்ணல் பாண்டியா வீழ்த்தினார். அத்துடன் வெறும் 17 ரன்களை மட்டுமே அவர் விட்டு கொடுத்தார். குர்ணல் பாண்டியாவின் இந்த சிறப்பான பந்து வீச்சி, ஆர்சிபி கோப்பையை வெல்ல மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்தது.

ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றவுடன், விராட் கோஹ்லி (Virat Kohli) ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்டார். ஆனால் ஆர்சிபி ரசிகர்களால் குர்ணல் பாண்டியா, அவ்வளவாக கண்டு கொள்ளப்படவில்லை. இந்த சூழலில் குர்ணல் பாண்டியாவின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

Krunal Pandya Spotted In Lexus LM 350h

இந்த வைரல் வீடியோவில், மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றில், குர்ணல் பாண்டியா வந்து இறங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வீடியோவில் கார் முழுமையாக தெரியவில்லை. இருப்பினும் அது லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் (Lexus LM 350h) போல் தெரிகிறது.

ஒரு சாயலில் பார்ப்பதற்கு இது டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) கார் போலவும் காட்சியளிக்கிறது. ஆனால் குர்ணல் பாண்டியாவின் சகோதரர் ஹர்திக் பாண்டியாவிடம் வெள்ளை நிற லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் கார் ஒன்று உள்ளது. நாம் தற்போது காணும் வீடியோவில் குர்ணல் பாண்டியா பயன்படுத்தியதும் வெள்ளை நிற கார்தான்.

எனவே தனது சகோதரர் ஹர்திக் பாண்டியாவின் லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் சொகுசு காரை குர்ணல் பாண்டியா பயன்படுத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் கார், மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவை 7 சீட்டர் விஐபி மற்றும் 4 சீட்டர் அல்ட்ரா லக்ஸரி ஆகியவை ஆகும். இதில், 7 சீட்டர் விஐபி வேரியண்ட்டின் விலை 2.10 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் 4 சீட்டர் அல்ட்ரா லக்ஸரி வேரியண்ட்டின் விலை 2.62 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மட்டுமே.

ஆன்-ரோடு விலை (On-road Price) முறையே 2.70 கோடி ரூபாய் மற்றும் 3.30 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் காரில், 2.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைந்த பவர் அவுட்புட் 250 பிஎஸ் ஆகும்.

இந்த இன்ஜின் உடன், இ-சிவிடி கியர் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், பின் பகுதியில் 48 இன்ச் அளவில் பொழுதுபோக்கு திரை கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 23 ஸ்பீக்கர் மார்க் லெவின்சன் சவுண்ட் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது.

மேலும் 14 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 8 ஏர்பேக்குகள் மற்றும் அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு போன்ற ஏராளமான சொகுசு மற்றும் பாதுகாப்பு வசதிகளும், லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹர்திக் பாண்டியா மற்றும் குர்ணல் பாண்டியா சகோதரர்கள் எளிமையான குடும்ப பின்னணியை கொண்டவர்கள். ஒரு காலத்தில், அவர்களது குடும்பம் மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ளது. ஆனால் தற்போது அவர்கள் பல கோடி ரூபாய் மதிப்பு மிக்க சொகுசு கார்களை வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளனர். இது அவர்களது உழைப்பிற்கு கிடைத்த பரிசு.

More from DriveSpark

Article Published On: Monday, June 16, 2025, 18:45 [IST]
English summary
Rcb star krunal pandya spotted in lexus lm 350h viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+