ராயல் என்பீல்டு கிளாசிக் 350 - பஜாஜ் டோமினோர் 400 போட்டியில் வென்றது யார் சுவரஸ்ய வீடியோ..!
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கும், பஜாஜ் டோமினோர் 400 பைக்கிற்கும் போட்டி வைத்தால் எந்த பைக் வலிமையானது என நிருபிக்கும் தெரியுமா? கீழே உள்ள செய்தியை படித்து பாருங்கள்.
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கும், பஜாஜ் டோமினோர் 400 பைக்கிற்கும் போட்டி வைத்தால் எந்த பைக் வலிமையானது என நிருபிக்கும் தெரியுமா? கீழே உள்ள செய்தியை படித்து பாருங்கள் உங்களுக்காக வீடியோவும் உள்ளது.

பஜாஜ் டோமினார் 400 பைக்கிற்கும், ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கும் தான் இன்று ஆட்டோமொபைல் துறையில் கடும் போட்டியே. இந்தியாவில் நன்றாக விற்பனையாகி வரும் ராயல் என்பீல்டு பைக்கை வம்பிற்கு இழுத்து விளம்பரம் செய்து வருகிறது பஜாஜ் நிறுவனம்.

ராயல் என்பீல்டு பைக்கில் உள்ள ஆப்ரோடு டிரைவிங், பிக்கப், ஹெட்லைட் உள்ளிட்டவைகளை குறித்து ராயல் என்பீல்டு பைக்கை யானையாக சித்தரித்து பஜாஜ் நிறுவனம் கிண்டல் செய்து விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது.

இந்த விளம்பரங்கள் சமூகவலைதளங்கள், பைக் ரசிகர்கள் என பல இடங்களில் முக்கிய பேச்சாக பேசப்படுகிறது. ராயல் என்பீல்டிற்கு எல்லா விதத்திலும் போட்டியான வகையில் டோமினோர் பைக்கை டிசைன் செய்து, அதிக விளம்பரமும் செய்து வருகிறது.

ஆனால் என்ன செய்தும் பலன் கிடைக்காத கதையாக டோமினோர் பைக்கின் விற்பனையும் பெரிதாக அதிகரிக்கவில்லை. அதே நேரத்தில் ராயல் என்பீல்டு பைக்கின் விற்பனையும் பெரிய அளவில் சரியவில்லை. இது வெறும் விவதாத்தை மட்டுமே கிளப்பியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பாரம்பரியம் தான். இன்று அந்த பைக்கை விரும்பி வாங்கும் வாடிக்கையாளர்கள் ஒரு காலகட்டத்தில் ஊரில் பெரியவர்கள் மட்டும் வைத்திருக்கும் பைக் என ரோட்டில் அந்த பைக் போனாலே திரும்பி பார்க்ககூடியவர்கள் தான்.

இப்படிப்பட்ட வர்த்தக சந்தையில் கடுமையாக மோதிக்கொள்ளும் டோமினோர் 400 பைக்கையும், ராயல்என்பீல்டையும் உண்மையிலயே மோதவிட்டால் என்ன நடக்கும் இதை தான் சில இளைஞர்கள் முயற்சி செய்து அதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

இந்த இரண்டு பைக்கின் இஞ்சின் திறன், எடை என எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகதான் இருக்கும். இதனால் இந்த பைக்கிற்கு இடையே போட்டி வைப்பதில் தவறில்லை. இளைஞர்கள் சமூகவலைதளத்தில் பதிவேற்றிய வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்தவீடியோவில் பங்கேற்ற இரண்டு பைக்கும். மார்க்கெட்டில் பைக் விற்பனை செய்யப்படும் அதே பொருட்களை கொண்டது தான் எந்த வித மாடிபிகேஷனும் செய்யப்பவில்லை. பைக்கின் டயர் கூட பேக்டரி பிட்டட் டயர் தான். இந்த பைக்கை ஓட்டியவர்களின் எடையும் கிட்டத்தட்ட 11 கிலோ தான் அதிகம் இதுவும் இவ்வாறான போட்டியில் ஏற்றுக்கொள்ள கூடியது தான்.

இந்த போட்டியில் மொத்தம் 5 ரவுண்ட் நடந்தது. இரண்டு பைக்கின் பின்புறமும் கயிறால் கட்டப்பட்டிருந்தது. பைக்கை ஓட்டினால் ஒன்றை ஒன்று இழுத்து செல்லும் வகையில் இது அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு பைக்கும் ஒரே நேரத்தில் இழுக்க வைத்து எந்த பைக் எந்த பைக்கை பின்னே இழுக்கிறது என்பது தான் போட்டியே.

நடந்த 5 ரவுண்டிலும் பஜாஜ் டோமினோரே வெற்றி பெற்றது. ஒரு முறை கூட ராயல் என்பீல்டு வெற்றி பெறவில்லை. மேலும் இரண்டு பைக்கில் இருந்த ரைடர்களும் மாறி உட்காந்தும் முயற்சி செய்தனர். அப்பொழுதும் டோமினோர் தான் சிறப்பாக செயல்பட்டது.

பஜாஜ் டோமினோர் பைக் சிங்கிள் சிலிண்டர்,லிக்யூட் கூல்டு, பியூயல் இன்ஜெக்டட் 373 சிசி இன்ஜின் கொண்டது. இந்த பைக் 34 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை பொருத்தவரை 346 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜினை கொண்டது.இது 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

ராயல் என்பீல்டு பைக்கின் இன்ஜின் தான் அந்த பைக் விற்பனைக்கு மிக முக்கிய காரணம் அதனால் தான் அந்த பைக் இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல் வெளியாகி வருகிறது. இந்த பைக் 5250 ஆர்பிஎம்மில் அதிகபட்ச பவரான 19.8 பிஎச்பி பவரையும், 4000 ஆர்.பிஎம்மில் 28 என்எம் டார்க்திறனையும் வெளிப்படுத்தும்.

ஆனால் பஜாஜ் பைக்கில் உள்ள வசதியே பைக் ஓட்ட இலகுவாக இருக்கும். அதிக ரேஸை பெற்று தரம், மலைப்பகுதியில் சிரமம் இல்லாமல் ஏறும். முடிந்த அளவு அதிக பவரை வெளிப்படுத்தும். இந்த விஷயங்கள் எல்லாம் ராயல் என்பீல்டு பைக்கில் இல்லை.

ஆனால் ராயல் என்பீல்டு பைக் தான் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து இருக்கிறது. ராயல் என்பீல்டு பைக் மாதம் சராசரியாக சுமார் 50 ஆயிரம் வாகனங்களை விற்பனை செய்கிறது. பஜாஜ் டோமினோர் 400 பைக் மாதம் 2000 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்கிறது. மேலும் டோமினோரில் எல்.இடி. ஹெட்லைட், டியூப்லெஸ் டயர், பியூயல் இன்ஜெக்ஷன் இன்ஜின், முன்பக்கமும், பின் பக்கமும் பிரேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், என ராயல் என்பீல்டில் விட அதிக வசதிகளை கொண்டது. டோமினோர் 400 பைக்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








