ரியல் எஸ்டேட் தொழில் ஆரம்பித்தால் போதும் போலயே... ஒரு நாளில் 2 டொயோட்டா கார்களை வாங்கி மனுஷன் தெறிக்க விட்டார்

டொயோட்டா (Toyota), உலகளவில் பிரபலமான கார் நிறுவனம் என்பதை நான் சொல்ல வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு ஜப்பானிய கார் நிறுவனமான டொயோட்டாவிற்கு பல நாடுகளில் கஸ்டமர்கள் உள்ளனர். இந்தியாவிலும் இலட்சக்கணக்கான டொயோட்டா கார் கஸ்டமர்கள் உள்ளனர். மற்ற கார் நிறுவனங்களுக்கு இணையாக மிகவும் அதிக எண்ணிக்கையில் டொயோட்டா கார்கள் விற்பனை செய்யப்படுவது இல்லை என்றாலும், டொயோட்டா கார்களுக்கு என்றே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது.

இருப்பினும், அத்தகையவர்கள் கூட ஒரே நாளில் இரு டொயோட்டா கார்களை வாங்க மாட்டார்கள் எனும்போது, இங்கு ஒருவர் ஒரே நாளில் லேண்ட் க்ரூஸர் (Land Cruiser) மற்றும் ஃபார்ச்சூனர் (Fortuner) என இரு டொயோட்டா கார்களை டெலிவிரி (Delivery) பெற்று அசத்தி உள்ளார். இதுதொடர்பான விபரங்கள் 'தர்மேந்திரா யாதவ் பஸ்தி' என்கிற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

real estate devolper bought toyota cars

பொதுவாக, டொயோட்டா லேண்ட் க்ரூஸர் போன்ற கோடி ரூபாயில் விலை கொண்ட கார்களை வாங்குபவர்கள் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற லட்சங்களில் விலை கொண்ட காரில் ஷோரூமுக்கு வருவது உண்டு. ஆனால், இந்த நபர் டொயோட்டா டீலர்ஷிப் ஷோரூமுக்கு (Dealership Showroom) வந்து ஃபார்ச்சூனர் மற்றும் லேண்ட் க்ரூஸர் என இரண்டையும் பிராண்ட்-நியூ (Brand-new) கார்களாக டெலிவிரி பெற்றுள்ளார்.

தேஜ் பிரதாப் சிங் என பெயர் கொண்ட இந்த நபர் புதியதாக வாங்கியுள்ள இரு டொயோட்டா கார்களை மனைவி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஷோரூமுக்கு சென்று டெலிவிரி பெற்றுள்ளார். உத்தர பிரதேசம் மாநிலத்தின் பஸ்தி என்கிற பகுதியில் ரியல் எஸ்டேட் (Real Estate) தொழிலதிபராகவும், அரசியல் பிரமுகராகவும் விளங்கும் தேஜ் பிரதாப் சிங், ஷோரூமில் குடும்பத்தினர் உடன் கேக் வெட்டி கொண்டாடி புதிய டொயோட்டா கார்களை டெலிவிரி பெற்றுள்ளார்.

real estate devolper bought toyota cars

டொயோட்டா லேண்ட் க்ரூஸரில் இவர் வாங்கியிருப்பது லேண்ட் க்ரூஸர் எல்சி300 (LC300) கார் ஆகும். ஷோரூமில் இருந்து வீட்டிற்கு புத்தம் புதிய எல்சி300 காரை தேஜ் பிரதாப் சிங் ஓட்டி சென்றார். அப்போது அவருடன் அவரது மனைவி அருகில் அமர்ந்திருந்தார். புதியதாக வாங்கிய ஃபார்ச்சூனர் காரை இந்த தொழிலதிபரின் நண்பர் ஒருவர் ஷோரூமில் இருந்து தேஜ் அவர்களின் வீட்டிற்கு ஓட்டி சென்றுள்ளார்.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி300 கார் ஆனது இந்தியாவில் இசட்.எக்ஸ் (ZX) மற்றும் ஜி.ஆர்-எஸ் (GR-S) என இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom Price) முறையே ரூ.2.31 கோடி மற்றும் ரூ.2.41 கோடியாக உள்ளது. இந்த இரண்டில் எந்த வேரியண்ட்டை தொழிலதிபர் தேஜ் பிரதாப் சிங் வாங்கி உள்ளார் என்பது தெரியவில்லை.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் இந்த உ.பி ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வாங்கியிருப்பது, ஃபார்ச்சூனர் லீடர் எடிசன் (Leader Edition) கார் ஆகும். ஃபார்ச்சூனரில் இந்த ஸ்பெஷல் எடிசன் (Special Edition) காரை கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் டொயோட்டா அறிமுகம் செய்தது. 2.8 லிட்டர் டீசல் என்ஜின் உடன் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் ஃபார்ச்சூனர் லீடர் எடிசன் காரை வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரியல் எஸ்டேட் தொழில் எந்த அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது என்பதற்கு தேஜ் பிரதாப் சிங் போன்றோர் தான் உதாரணம் ஆகும். இருப்பினும், ஒரே நாளில் இரு விலையுயர்ந்த கார்களை வாங்குவது எல்லாம் கொஞ்சம் டூ மச். இவரிடம் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 (Land Rover Defender 130) கார் ஒன்றும் உள்ளதாம்.

More from DriveSpark

Article Published On: Friday, August 8, 2025, 15:01 [IST]
English summary
Real estate developer bought two toyota cars on same day check all details here
மேலும்... #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+